சிபிஎஸ்இ அறிவியல் பாடத்துக்கான வினாத்தாள் வெளியீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 11, 2022

சிபிஎஸ்இ அறிவியல் பாடத்துக்கான வினாத்தாள் வெளியீடு

சென்னை, ஏப் 11 சிபிஎஸ்சி 10ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தேர்வுக் கான  மாதிரி வினாத் தாள் வெளியாகி யுள்ளது.

2022 கல்வி ஆண்டிற்கான சிபிஎஸ்சி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இரண்டு அமர்வுகளாக நடத்தப்படு கிறது. முதல் அமர்வு, கடந்தாண்டு நவம்பர் -_ டிசம்பர் மாதங்களில் நடை பெற்றது. இரண்டாம் அமர்வு இந்த மாத இறுதியில் நடை பெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தேர்வைப் பற்றிய ஒரு முழுமையான புரிதல் கிடைக்க வேண் டியும், அதிக மதிப்பெண்கள் பெற வேண்டியும் மாதிரி வினாத்தாளை சிபிஎஸ்இ கல்வி வாரியம் வெளியிட் டுள்ளது. தேர்வர்கள், cbseacademic.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்துக்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், கணிதம், அறிவியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கு வினா வங்கியையும் (Question Bank)   கல்வி வாரியம் வெளியிட்டுள்ளது. ஆர்வ முள்ள மாணவர்கள், இதனை பதிவிறக்கம் செய்து பலன டையுமாறு கேட் டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், மாற்றி அமைக்கப்பட்ட பாடத்திட்ட மும் சிபிஎஸ்இ இணைய தளத்தில் உள்ளன.

முதல் அமர்வில் வெறும் கொள் குறிவகை வினா விடையாக   (MCQ)  இருந்த நிலையில், இரண்டாம் அமர்வு எழுத்துத் தேர்வு வினாத்தாளில் புற நிலை வகை வினாக்களும், அகநிலை வினாக்களும் இடம் பெற்றிருக்கும். மாணவர்கள், இரண்டு அமர்வுகளிலும் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக் கப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு கரோனா நோய்த் தொற்று காரணமாக ஜூலை மாதம் நடக்கவிருந்த 10 மற்றும் 12ஆம் வகுப் புக்களுக்கான தேர்வுகளை ரத்து செய்ய மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) முடிவு செய்தது.  மீண்டும் அத்தகைய  எதிர்பாராத சூழல்  ஏற் படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, பொதுத் தேர்வை இரண்டு அமர்வு களாக நடத்த சிபிஎஸ்இ முடிவெடுத்தது. அதனையடுத்து, முதல் அமர்வு கடந் தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, முதல் அமர் வுக்கான மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த புதிய நடைமுறையின் படி, ஒவ்வொரு அமர்விலும் பாடத்திட் டத்தின் 50 சதவீதப் பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். கரோனா பெருந்தொற்று (அல்லது) இன்ன பிற காரணங்களினால் ஏதேனும் ஒரு அமர்வை நடத்த முடியாவிட்டால், மற்றொரு அமர்வில் பெற்ற மதிப் பெண்கள் அடிப்படையில்  இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும் என்று தெரி விக்கப்பட்டது.

No comments:

Post a Comment