கொழும்பு, ஏப். 7- இலங்கையில் ஏப்ரல் 1ஆம் தேதி நடை முறைக்கு வந்த அவசர நிலை பிரகடனத்தை ரத்து செய்துள்ளார் அந் நாட்டின் அதிபர் கோத்த பய ராஜபக்சே.
நாட்டில் கடுமையான எரிபொருள் பற்றாக் குறை நிலவுகிறது. நிலக் கரி வாங்க பணம் இல் லாததால் இலங்கையில் தினமும் 12 மணி நேரம் வரை மின்வெட்டு அம லில் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. பொருட் களின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. இத னால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
மக்களின் போராட் டத்தை கட்டுப்படுத்தும் வகையில் இலங்கை அதி பர் கோத்தபய ராஜபக்சே, ஏப்ரல் 1ஆம் தேதி அவசர நிலை பிரகடனத்தை அறிவித்தார். கிட்டத் தட்ட அய்ந்து நாள்க ளுக்கு பிறகு அவசர நிலை பிரகடனத்தை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார் கோத்தபய ராஜபக்சே. அந்நாட்டின் கெஜெட் டில், ஏப்ரல் 5ஆம் தேதி நள்ளிரவு முதல் அவசர நிலை பிரகடன சட்டம் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு, முறைப்படி அமல்ப்படுத் தப்பட்டுள்ளது.
முன்னதாக, பொரு ளாதார நெருக்கடி கார ணமாக அதிகரித்து வரும் அமைதியின்மைக்கு மத்தியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த டுத்து பதவி விலகினார். கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது மூத்த சகோதரர் பிரதமர் மகிந்த ராஜபக்சே தவிர இலங்கையின் அமைச்சர வையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் பதவி விலகினர். இதனால் அதி பர் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான ஆளும் கூட்டணி தனது பெரும் பான்மையை இழந்தது.
அரசுக்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கி போராடத் தொடங்கி யுள்ளனர். இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச மட்டுமின்றி அதிபர் கோத்தபய ராஜபக்சவும் பதவி விலக வேண்டும் என மக்கள் கோரி வரு கின்றனர்.
இதையடுத்து அனைத்து கட்சிகளையும் கொண்ட ஒருங்கிணைந்த அரசை அமைக்க அதிபர் கோத்தபய ராஜபக்ச அழைப்பு விடுத்தார். ஆனால் இந்த அழைப்பை எதிர்க்கட்சிகள் ஏற்க வில்லை. இதனால் இடைக் கால அமைச்சர்களாக 4 பேரை அதிபர் கோத்தபய 4.4.2022 அன்று நியமித் தார். இவர்களும் உடனே பொறுப்பேற்றுக் கொண் டனர்.
இந்நிலையில் நிதி அமைச்சராக நியமிக்கப் பட்ட அலி சப்ரி தனது பதவியிலிருந்து விலகி னார். இவரது பதவி விலகலைத் தொடர்ந்து பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு நேற்று பெரும்பான்மை இழந்தது.
இந்நிலையில் கூட்ட ணிக் கட்சிகளின் உறுப்பி னர்களும் ஆளும் கட்சி யின் 12 அதிருப்தி உறுப் பினர்களும் நாடாளுமன் றத்தில் தனித்து செயல் பட முடிவு செய்தனர். இதனால் அரசுக்கான ஆதரவு 105 ஆக குறைந்து, ராஜபக்ச அரசு நாடாளு மன்றத்தில் பெரும்பான் மையை இழந்துள்ளது.
இந்நிலையில் பிரதமர் ராஜபக்ச தனது அரசுக் கான பெரும்பான்மையை நிரூபிக்க பிற கட்சிகளின் ஆதரவைப் பெறவேண்டி யது அவசியமாகியுள்ளது.
ஆனால் ஆளுங்கட்சி தரப்பில் அதிருப்தியாளர் கள் எண்ணிக்கை 41இல் இருந்து மேலும் அதிகரிக் கலாம் என கூறப்படுகிறது.
இத்தகைய சூழ்நிலை யில், இடைத் தேர்தலை நடத்துவதற்காக பொறுப்பு அரசாங்கத்தை அதிபர் நியமிப்பது அவ சியமாகும் என கூறப்படு கிறது.

No comments:
Post a Comment