உக்ரைன் போர் - "நாங்கள் கொல்லப்பட்டால்..." குழந்தைகளின் முதுகில் விவரம் எழுதும் தாய்மார்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 7, 2022

உக்ரைன் போர் - "நாங்கள் கொல்லப்பட்டால்..." குழந்தைகளின் முதுகில் விவரம் எழுதும் தாய்மார்கள்

கீவ், ஏப். 7- குழந்தைகளின் முதுகிலும், உடம்பிலும் தங்களது குடும்ப விவரங் களை உக்ரைன் நாட்டு மக்கள் எழுதி வருகின்ற னர். ஒருவேளை ரஷ்யா வின் தாக்குதலில் பெற் றோர் இறந்தால் இந்த விவரங்களைக் கொண்டு அவர்களை அடையா ளம் காண உதவும் என அவர்கள் நம்புகின்றனர்.

உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம்கடந்த 42 நாட்களாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகி றது. இதனால் தலைநகர் கீவ், கார்கிவ்போன்ற நக ரங்கள் உருக்குலைந்துள் ளன. கீவ் நகருக்கு அருகி லுள்ள இர்பின், புச்சா நகரங்களில் குவியல், குவி யலாய் மனித உடல்கள் சாலைகளில் கிடக்கின்றன.

இந்நிலையில் உக் ரைன் நாட்டு மக்கள் தங் கள் உடல்களிலும், குழந் தைகளின் முதுகிலும் தங் களது குடும்ப விவரங்கள், தொலைபேசி எண்களை எழுதி வைப்பது தெரிய வந்துள்ளது.

இதன்மூலம் தாக்குத லில் தாங்கள் இறந்தாலோ அல்லது குழந்தைகள் அனாதையாக விடப்பட் டாலோ அந்த விவரங்க ளைக் கொண்டு சிறுவர் களை அடையாளம் காண முடியும் என்று நம்புகின் றனர்.

பெரும்பாலும் குழந் தைகளின் முதுகில் இந்த விவரங்கள் எழுதப்படு வது தெரியவந்துள்ளது. ஒரு குழந்தையின் முது கில் குடும்ப விவரங்கள் எழுதப்பட்ட ஒளிப் படம் சமூக வலைத்தளங் களில் வைரலாகி வருகி றது. அந்தப் புகைப் படத்தை உலகெங்கிலும் உள்ள பத்திரிகையாளர் கள் தங்கள் ட்விட்டர் பக் கங்களில் பகிர்ந்துள்ள னர்.

இதுகுறித்து பத்திரி கையாளர் அனஸ்தா ஷியா லபாடினா தனது ட்விட்டர் பக்கத்தில், “குழந்தைகளின் உடலி லும் முதுகிலும் தகவல் களையும், செல்போன் நம்பர்களையும் அவர்கள் எழுதி வருகின்றனர்” என பதிவிட்டுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத் தில் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் வைரா என்ற சிறுமியின் முதுகில் அவரின் பிறந்த தேதி எழுதப்பட்டுள்ளது, இதோடு சில எண்களும் எழுதப்பட்டுள்ளன.

வைராவின் தாய் சாஷா மகோவ்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத் தில் கூறும்போது, “உக்ரை னில் நடக்கும் போரில் எங்களுக்கு எதாவது நேர்ந்தால், என் மகளை யாராவது காப்பாற்ற இப்படி எழுதியுள்ளோம்“ என்றார்.

அதேபோல வைரா பற்றிய தகவல்கள் அடங் கிய அட்டை அவரது உடையில் வைக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற புகைப்படங்கள் இணை யத்தில் வெளியாகி வரு வது நெஞ்சத்தை உருக்கு வதாக அமைந்துள்ளது.

அதேபோல் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த தந்தை ஒருவர் தனது மகள் டி-ஷர்ட்டில் எழுதப்பட்ட எண்களுடன் ஒரு படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறும்போது, “எனது 5 வயது மகள் இந்த டி-ஷர்ட்டை அணிந் திருக்க, அய்ரோப்பா ரஷ்ய எண்ணெய், எரிவாயு மற்றும் பணத்தைப் பற்றி யோசித்துக் கொண்டிருந் தது” என்று வேதனையு டன் பதிவு செய்துள்ளார்.

இதனிடையே உக்ரை னில் நடக்கும் போர்க் குற்றத்துக்கு ரஷ்ய அதி பர் விளாடிமிர் புதின் தான் காரணம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குற்றம்சாட்டியுள் ளார். அவர் ஒரு போர்க் குற்றவாளி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment