பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு மன்மோகன் சிங் ஆட்சி (எண்ணெய் கடன் பத்திரம்) தான் காரணமாம். சொல்கிறது மோடி அரசு. மன்மோகன் சிங் ஆட்சியில் வழங்கிய எண்ணெய் கடன் பத்திரம் (ஆயில் பாண்ட்) 1.3 லட்சம் கோடி, வட்டியோடு சேர்த்து 2 லட்சம் கோடி ஆகும்.
இந்த எண்ணெய் கடன் பத்திரத்தைக் காரணம் காட்டி மோடி அரசு பெட்ரோல் - டீசல் மீதான கலால் வரியை கடந்த எட்டு ஆண்டுகளில் பல முறை உயர்த்தியது
மோடி அரசு பதவி ஏற்ற போது...
பெட்ரோல் மீதான கலால் வரி ஒரு லிட்டருக்கு ரூ.9.48.
டீசல் மீதான கலால் வரி ஒரு லிட்டருக்கு
ரூ. 3.56
மோடி ஆட்சிக்கு வந்த பின் ஆறு ஆண்டுகளில் மட்டும் உயர்த்திய கலால் வரி...
பெட்ரோல் மீதான கலால் வரி ஒரு லிட்டருக்கு ரூ.32.98
டீசல் மீதான கலால் வரி ஒரு லிட்டருக்கு ரூ.31.38
இதன் மூலம் கடந்த எட்டு ஆண்டுகளில் 26 லட்சம் கோடி ரூபாய் அளவில் அதிக வரி வசூல் செய்துள்ளது மோடி அரசு.
2 லட்சம் கோடி ரூபாய் கடனை (வட்டியுடன் சேர்த்து) அடைக்க ரூ.26 லட்சம் கோடியை கூடுதல் வரியாக வசூலித்து விட்டார்கள்.
ஆனால் இவர்கள் இதுவரை அடைத்த கடன் வெறும் 13,500 கோடி ரூபாய் மட்டுமே (வட்டி தனி).
ஏதோ காங்கிரஸ் ஆட்சியில் மட்டும்தான் கடன் பத்திரம் வெளியிட்டதாக பொய்யான செய்தியைப் பரப்புகிறார்கள் பாஜகவினர்.
எண்ணெய்க் கடன் பத்திரத்தை முதன் முதலில் வெளியிட்டது வாஜ்பாய் ஆட்சியே! அந்தக் கடனை அடைத்தது காங்கிரஸ் அரசு.
மோடி ஆட்சியிலும் கடன் பத்திரம் வழங்கப் பட்டது. 2018 முதல் 2020 வரை மோடி தலைமையிலான ஒன்றிய அரசு பொதுத் துறை வங்கிகளுக்கு மறு மூலதன பத்திரங்கள் என வழங்கிய தொகை ரூ.2.41 லட்சம் கோடி.
இந்த தொகையை 2028 முதல் 2031 வரை ஒன்றிய அரசு திருப்பிச் செலுத்த வேண்டும்.
2028இல் ரூ.21,000 கோடி
2029இல் ரூ.40,000 கோடி
2030இல் ரூ.40,000 கோடி
2031இல் ரூ.40,000 கோடி
2032இல் ரூ.40,000 கோடி
2033இல் ரூ.40,000 கோடி
2034இல் ரூ.20,000 கோடி
இதற்கு ஒன்றிய மோடி அரசு கடந்த மூன்று ஆண்டுகளில் கட்டிய வட்டி...
2018-2019இல் ரூ.5,800.55 கோடி
2019-2020இல் ரூ.16,285.99 கோடி
2020-2021இல் ரூ.19,292.77 கோடி
இவர்கள் ஆட்சியில் வாங்கிய கடன் மற்றும் அதற்கான வட்டியைப் பற்றிப் பேசுவதேயில்லை.
ஒவ்வொரு ஆண்டும் பெட்ரோல் - டீசல் விலை உயர்வு - வானிலை அறிவிப்பு போல் வெளிவந்து கொண்டுள்ளது. வணிக ரீதியான சமையல் எரிவாயு விலை எகிறியதால், உணவு விடுதிகளிலும் தேநீர், காபி முதல் அனைத்துப் பொருள்களும் விலை ஏறிவிட்டன.
இந்தியா இன்னொரு இலங்கை ஆகிறதா என்ற அச்சம் ஏற்படுகிறது.
No comments:
Post a Comment