புதையல் பேராசை, காட்டுமிராண்டித்தனத்தின் உச்சம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 28, 2022

புதையல் பேராசை, காட்டுமிராண்டித்தனத்தின் உச்சம்

ரபலி கொடுக்க முயற்சி- தோழியால் காப்பாற்றப்பட்ட பெண்

பெண்ணின் தந்தை, மந்திரவாதி உட்பட 9 பேர் கைது

மும்பை,ஏப்.28- மராட்டிய மாநிலத்தில் புதையலுக்காக ஒரு பெண்ணை நரபலி கொடுக்க முயன்றபோது, அப்பெண்ணின் தோழியால் காப்பாற்றப்பட்டார். மேலும், அப்பெண்ணின் தந்தை, மந்திரவாதி உட்பட 9 பேரை அம்மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

மராட்டிய மாநிலம் யவத்மால் மாவட்டத்தில் உள்ள மட்னி என்ற கிராமத்தைச் சேர்ந்தவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். 

அவர்களில் மூத்த மகளுக்கு 18 வயதாகிறது. அவர் உறவினர் வீட்டில் தங்கி இருந்து படித்து வருகிறார். 

அண்மையில் தனது வீட்டுக்கு வந்திருக்கிறார். 

அப்பெண்ணின் தந்தையிடம் அவரது வீட்டுக்கு அருகில் புதையல் இருப்பதாக மந்திரவாதி ஒருவர் தெரிவித்திருக்கிறார். 

இதையடுத்து மந்திரவாதியின் துணையோடு அப்பெண்ணின் தந்தை கடந்த சில நாள்களாக வீட்டில் பூஜை செய்து வந்திருக்கிறார். 

பூஜைக்குப் பிறகு புதையலை எடுக்க வேண்டும் என்பதற்காக, எல்லப்பா தன் மூத்த மகளை நரபலி கொடுக்க திட்டமிட்டிருந்திருக்கிறார். இதற்காக வீட்டுக்கு வெளியில் பெரிய குழி ஒன்றை தோண்டி, நரபலி கொடுத்த பிறகு தன் மகளை அதில் போட்டு புதைக்க திட்டமிட்டிருந்தார்.

இதை அறிந்துகொண்ட அவருடைய மூத்த மகள் தன் தோழிக்கு தகவல் கொடுத்தார். உடனே அவர் தோழி இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

 காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு பெண்ணின் தந்தை, மந்திரவாதி உள்பட 9 பேரைக் கைது செய்தனர். 

இது தொடர்பாக யவத்மால் மாவட்ட காவல்துறை கண் காணிப்பாளர்  திலிப் புஜ்பால் கூறுகையில், ``நரபலி தொடர்பாக கைது செய்யப்பட்டிருக்கும் குற்ற வாளிகளில் ஒருவர் பெண்ணின் தந்தையாவார். அவர் தன் மகளை பாலியல் வன்கொடுமை செய் திருக்கிறார். 

 எனவே, குற்றவாளிகள்மீது கொலை முயற்சி, பாலியல் வன்கொடுமை ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நரபலி முயற்சியில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வரு கிறது" என்றார். 


No comments:

Post a Comment