சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக இருந்த பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி, நூலகர், உடற்கல்வி இயக்குநர் ஆகிய பதவிகளுக்கான நேர்காணல்கள் ஓரிரு நாள்களில் நடைபெற உள்ளன.
இதில் ஆளுநர் பரிந்துரை, தேர்வுக் குழுவின் முடிவு என்ற காரணத்தை முன்னிறுத்தி, தகுதியானவர்களைப் புறக்கணித்து, துணைவேந்தரின் ஜாதியைச் சார்ந்த பேராசிரியர் பூங்கொடி விஜயகுமார் என்பவரை பதிவாளராகவும், முனைவர் ஜெயபிரகாஷ் என்பவரை நூலகராகவும், முனைவர் வெங்கடாசலம் அவர்களை உடற்கல்வி இயக்குநராகவும் நியமிக்க தற்போதைய துணைவேந்தர் ஜெகநாதன் தீவிரம் காட்டி வருகிறார்.
ஏற்கெனவே ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஒரு குறிப்பிட்ட ஜாதி ஆதிக்கம் தலை தூக்கும் அபாயம் உள்ளது.
இந்தப் பல்கலைக் கழகத்தில் தொடர்ச்சியாக பத்து ஆண்டுகளாக இருந்த மூன்று துணைவேந்தர்கள் ஒரே ஜாதியைச் சேர்ந்தவர்கள், அதே போல தொடர்ச்சியாக மூன்று பதிவாளர்கள் - ஒரே ஜாதியைச் சேர்ந்தவர்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். பல்கலைக் கழகத்தில் எல்லா முக்கிய பொறுப்புப் பதவிகளிலும் துணைவேந்தரின் ஜாதியை சேர்ந்தவர்களே அமர்த்தப்பட்டுள்ளனர்.
உயர்கல்வித் துறை அமைச்சகம் இதில் தலையிட்டு அனைவருக்கும் அனைத்தும் என்ற சமூகநீதியை நிலைநாட்டி செயல்படுத்த, ஆவன செய்யாவிட்டால் அங்குப் பல சிக்கல்கள் எழக் கூடும்.
No comments:
Post a Comment