நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை அமைச்சர் கே.என்.நேரு தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 28, 2022

நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னை,ஏப்.28- சட்டப்பேரவையில் நேற்று (27.4.2022) கேள்வி நேரத்தின்போது  நகராட்சி நிர்வாக அமைச்சர் கே.என்.நேரு கூறுகை யில், தற்போது 90-க்கும் மேற்பட்ட பேரூராட்சிகளை உருவாக்கும் கருத்துரு அரசின் பரிசீலனையில்உள்ளது. எந்தெந்த ஊராட்சி களை பேரூராட்சிகளுடன் இணைக்கலாம், பேரூராட்சிகளை நகராட்சி களுடன் இணைக்கலாம்,மாநகராட்சியாக தரம் உயர்த்தலாம் என்பது குறித்து ஆய்வுசெய்ய அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் தற்போது ஊராட்சிகளை தவிர்த்து பேரூராட்சிகளிலும் 100 நாள் வேலை உறுதி திட்டத்தை அமல்படுத்தும் வகையில் ரூ.100 கோடிஒதுக்கப்பட்டு, முதல் கட்டமாக 24 பேரூராட்சிகள், 3 நகராட்சி பகுதிகளில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.


No comments:

Post a Comment