மும்பை: ‘நீட்' ஒழிப்பு பிரச்சார நிதி வழங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 19, 2022

மும்பை: ‘நீட்' ஒழிப்பு பிரச்சார நிதி வழங்கல்

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 132ஆவதுஆண்டு பிறந்தநாளில்அவரது உருவச்சிலைக்கு மும்பை திராவிடர் கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அம்பேத்கர் பிறந்த நாள் ஏப்ரல் 14 சமத்துவ நாள்  உறுதிமொழியை தோழர்கள் ஏற்றனர். இந்த நிகழ்ச்சியில் மும்பை திராவிடர் கழகத் தலைவர்  பெ.கணேசன், மும்பை திராவிடர் கழகச்செயலாளர் . அந்தோணி, மும்பை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் .இரவிச்சந்திரன், கழகத் தோழர்கள் அய். செல்வராஜ் ,பெரியார் பாலாஜி, இர.அக்க்ஷித்  உட்பட பலர் கலந்து கொண்டனர். கழகத் தோழர் பெரியார் பாலாஜி 'விடுதலை' வளர்ச்சி நிதி ரூ.2000 மற்றும் நீட் ஒழிப்பு பிரச்சார நிதி ரூ .1000 வழங்கினார்.

No comments:

Post a Comment