தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்படும் புத்தக கண்காட்சி சிவகங்கை ராஜா மேல்நிலைப் பள்ளி திடலில் ஏப். 15இல் தொடங்கி ஏப் 26 வரை நடைபெறுகிறது. அந்த கண்காட்சியில் கடை எண் 80இல் உள்ள பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் புத்தக கடையினை தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரும் சிவகங்கை மாவட்ட தி.மு.க.செயலாளருமான கேஆர்.பெரியகருப்பன் திறந்து வைத்தார். உடன் தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சிவகங்கை மாவட்ட திராவிடர் கழக தலைவர் வழக்குரைஞர் ச.இன்பலாதன், சிவகங்கை நகர தி.க.தலைவர் இர.புகழேந்தி ஆகியோர் உள்ளனர். இந்த நிகழ்வில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி, மேனாள் அமைச்சர் மு.தென்னவன், சிவகங்கை மாவட்ட தி.க.செயலாளர் பெ.ராஜாராம், மேனாள் மாவட்ட செயலாளர் வேம்பத்தூர் ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். (15-04-2022).
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment