நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் நடந்த உலக புத்தக நாள் விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 24, 2022

நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் நடந்த உலக புத்தக நாள் விழா

நாகர்கோவில் ஒழுகினசேரி  பெரியார்  மய்யத்தில் நடந்த உலக புத்தக நாள் விழா நிகழ்ச்சிக்கு திராவிடர் கழக  கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தன் தலைமை தாங்கினார்.  மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள்,   மாவட்ட மகளிர் பாசறை தலைவர் மஞ்சு குமார தாஸ், அகஸ்தீஸ்வரம் ஒன்றியச் செயலாளர் எஸ். குமார தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மன்ற பொறுப்பாளர் கு.சந்திரன் கழக புத்தகங்கள் படிப்பதன் நோக்கம் குறித்து சிறப்புரையாற்றினார்.  நாகர்கோவில் மாநகர துணைத் தலைவர் கவிஞர் ஹ.செய்க்முகமது கடவுள் மறுப்பு கூறினார்.  தோழர்கள் பி.கென்னடி, முத்துவைரவன், இரா.கோகுல், சியாமளா, மற்றும்  கழகத் தோழர்கள், பெரியார் பற்றாளர்கள் பலரும் ஆர்வமுடன் கலந்துகொண்டு புத்தக நாளில் புத்தகங்களை வாங்கி,  பரப்பி உலக புத்தக நாளை கொண்டாடினர்.


No comments:

Post a Comment