தஞ்சாவூர், ஏப். 24- தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஒன்றிய திராவிடர் கழக தலைவர் அள்ளுர் இரா.பாலு அவர்களின் தாயார் இரா. மருதம்பாள் (அகவை 96) அவர்கள் 30.3.2022 அன்று மறைவுற்றார். மறைந்த அம்மையார் அவர்களின் படத்திறப்பு 10.04.2022 அன்று மதியம் 12 மணியளவில் அள்ளு ரில் அவர்களின் இல்லத் தில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு தஞ்சை மண்டலத் தலைவர் மு.அய்யனார் தலைமை யேற்று நினைவேந்தல் உரையாற்றினார். அம் மையாரது படத்தினை தஞ்சை மாவட்டத் தலை வர் சி.அமர்சிங் திறந்து வைத்து உரையாற்றினார்.
தஞ்சை மாவட்ட செய லாளர் அ.அருணகிரி, மாவட்ட துணை செய லாளர் அ.உத்திராபதி, பூதலூர் ஒன்றிய செயலா ளர் புகழேந்தி, திருவை யாறு ஒன்றிய தலைவர் ச.கண்ணன், திருவையாறு ஒன்றிய செயலாளர் துரை. ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையேற்று உரை யாற்றினர்.
மாநில இளைஞரணி துணை செயலாளர் இரா.வெற்றிக்குமார், மண்டல இளைஞரணி செயலாளர் நெல்லுப் பட்டுபட்டு முனைவர் வே.இராஜவேல், மாவட்ட தொழிலாள ரணி தலைவர் ச.சந்துரு, தஞ்சை மாநகர தலைவர் பா.நரேந்திரன், கந்தர்வக் கோட்டை ஒன்றிய தலை வர் சேகர், வலப்பக்குடி பெரியார் பெருந்தொண் டர் தங்கவேல், கழகப் பேச்சாளர் கலைவாணி ஆகியோர் கலந்து கொண்டு நினைவேந்தல் உரையற்றினர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்
மாவட்ட திராவிடர் கழக அமைப்பாளர் வீர மணி, அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் சவு. காத்தையன், மாவட்ட தொழிலாளரணி செய லாளர் செ. ஏகாம்பரம், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் பா.விஜயக்குமார், ரெட்டி பாளையம் முருகேசன், மகளிரணி தோழர்கள் பாக்கியம், சுசிலா, திரு வையாறு ஒன்றிய இளை ஞரணி தலைவர் மோகன் ராஜ், பூதலூர் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் துரை ராஜ், கள்ளபெரம்பூர் சுந்தரமூர்த்தி மற்றும் கழக தோழர்கள், உறவி னர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு மறைந்த அம்மையாருக்கு வீர வணக்கம் செலுத்தினர்.

No comments:
Post a Comment