சென்னையில் ஏப்ரல் 30 அன்று காலை நடைபெறும் மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தின் அறிவிப்பு ‘விடுதலை'யில் வந்தவுடன் தஞ்சாவூர் மண்டலத் திற்கு உட்பட்ட தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை, மன்னார்குடி அகிய கழக மாவட்டங்களில் உள்ள அனைத்து ஒன்றியங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற் கொண்டு இளைஞர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடல் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தேன். மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் ஒத்துழைப்போடு தஞ்சை மண்டலத்தி லிருந்து 75 க்கும் மேற்ப்பட்ட இளைஞரணித் தோழர்கள் காலையில் நடைபெறும் மாநில இளைஞரணி கலந்துரை யாடல் கூட்டத்திலும், மாலை நடைபெறும் ஹிந்தி எதிர்ப் புப் போராட்டத்திலும் கலந்துகொள்ள தயாரானார்கள். அவர்கள் அனைவருக்கும் தஞ்சை, மன்னார்குடி நீடா மங்கலம், கும்பகோணம் ஆகிய பகுதிகளிலிருந்து உழவன் விரைவு தொடர்வண்டி, மன்னை விரைவு தொடர்வண்டி ஆகியவற்றில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் - 25
மன்னார்குடி மாவட்டம் - 20
பட்டுகோட்டை மாவட்டம் - 15
கும்பகோணம் மாவட்டம் - 15
29.04.2022 அன்று இரவு புறப்பட்டு 30.04.2022 அன்று காலை சென்னை பெரியார் திடலில் சங்கமித்து நம் தலைவர் ஆசிரியர் அய்யா தலைமையில் போராட்டக்களம் காண தஞ்சை மண்டல இளைஞரணியினர் தயார், தயார்!
இவண்.
இரா.வெற்றிக்குமார்,
மாநில இளைஞரணி துணைச்செயலாளர், திராவிடர் கழகம்.
முனைவர் வே.இராஜவேல்,
தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர், திராவிடர் கழகம்.
No comments:
Post a Comment