"தி மாடர்ன் ரேசனலிஸ்ட்" சந்தா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 24, 2022

"தி மாடர்ன் ரேசனலிஸ்ட்" சந்தா

20.4.2022 இரவு 7.30 மணியளவில் ஈரோடு மாவட்ட பகுத் தறிவாளர் கழக மாவட்டத்தலைவர் மரு.மோகனசுந்தரராஜ் மற்றும் கோபி மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி மாவட்டத் தலைவர் அ.குப்புசாமி ஆகியோருடன் கோபியில் உள்ள சீனு.தமிழ்ச்செல்வி கந்தசாமி, சார்பதிவாளர், மா.கந்தசாமி, வழக்குரைஞர் தமிழ்ச்செல்வி,  இல்லத்திற்கு சென்று உறுப் பினர் சேர்க்கும் பணியினை மேற்கொள்ளப்பட்டது. "தி மாடர்ன் ரேசனலிஸ்ட்" -  ‘The annual number - 2021 அய்யா அவர்களின் பிறந்தநாள் மலர்' சந்தா  வழங்கி பகுத்தறிவாளர் கழகத்தில் உறுப்பினராக இணைந்தார்கள்.

குன்னூர் அதிரட்டி துணை மின் நிலையத்தில் பணியாற்றும் உதவி மின் பொறியாளர் பி.ஈஸ்வரன் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், பகுத்தறிவாளர் கழகம்  மாநில துணைத் தலைவர்  தருமன் வீரமணி ஆகியோர் முன்னிலையில் பகுத் தறிவாளர் கழகத்தில் இணைந்தார். "தி மாடர்ன் ரேசனலிஸ்ட்" -  The annual number - 2021 ஆகியவற்றிற்கு சந்தா ரூ. 500 வழங்கியுள்ளார்.


No comments:

Post a Comment