மிகவும் குளிச்சியான இடத்திலும் புவிவெப்பமயமாதல் பாதிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 9, 2022

மிகவும் குளிச்சியான இடத்திலும் புவிவெப்பமயமாதல் பாதிப்பு

அண்டார்ட்டிக்காவில் 2022 மார்ச் மாதம் அதிக வெப்பம் பதிவாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அண்டார்ட்டிக்காவில் ‘டோம் சி’ எனும் உயர்நிலத்திலுள்ள கன்கோர்டியா ஆய்வு நிலையத்தில் இம்மாதம் 18-ஆம் தேதி தட்பநிலை -11.5 டிகிரி செல்சியஸ் என்று பதிவானது. அதுவே உலகின் ஆகக் குளிர்ச்சியான அந்த இடத்தில் பதிவான ஆக அதிகமான தட்பநிலை. வழக்கமாக,அங்கு அன்றாடம் தட்பநிலை -49 டிகிரி செல்சியஸ் வரை உயர்வதுண்டு. இந்நிலையில் மார்ச் 18-ஆம் தேதி பதிவான தட்பநிலை, வானிலை ஆய்வு நிலையங்களில் வழக்கத்தைவிட பதிவான ஆக அதிகமான தட்பநிலையாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.  சமீபத்தில் இந்தியாவில் பாதி அளவிலான மிகப்பெரிய பனிப்பாறை உடைந்து தனியாக பிரிந்தது, எதிர்காலத்தில் இந்தப்பனிப்பாறை உருகுவதால் பல கடலோர நகரங்கள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதாக தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் அண்டார்டிகாவின் உள்பகுதிகளிலும் வெப்பம் அதிகரிக்கத்துவங்கி இருப்பது உயிரினங்களுக்கு அபாய எச்சரிக்கையை ஊட்டி உள்ளது.


No comments:

Post a Comment