மோடி ஆட்சியின் சாதனை ‘மாண்டவர்களும் மீண்டனர்’? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 9, 2022

மோடி ஆட்சியின் சாதனை ‘மாண்டவர்களும் மீண்டனர்’?

மோடி ஆட்சியில் மாண்டவர்கள் கூட மீண்டும் வந்து மரியாதை செலுத்துவார்கள்?

  ஜெகஜீவன்ராம் இந்திய விடுதலைப் போராட்ட வீரர், மற்றும் சமூகச் சீர்திருத்தவாதி  ஆவார். இவர், நாடாளுமன்ற உறுப்பினர், ஒன்றிய மேனாள் அமைச்சர், துணைப் பிரதமர் போன்ற பதவிகளை அலங்கரித்தவர், இவரது பிறந்த நாள் ஏப்ரல் 5 ஆம் தேதி. எப்போதும் போல் மோடி சமூகவலைதளத்தில் ஒரு படத்தை வெளியிட்டிருந்தார். 

அதில் பாபு ஜெகஜீவன் ராம் பிறந்த நாளில் அவரது படத்திற்கு மரியாதை செலுத்தினேன் என்று கூறி படம் ஒன்றையும் பகிர்ந்திருந்தார்.  அப்படத்தைப் பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சி. காரணம் இறந்து போன அருண் ஜெட்லி உள்ளிட்ட மூத்த பாஜக தலைவர்கள் மோடியின் பின்னால் நின்றிருக்க ஜெகஜீவன்ராம் படத்திற்கு மோடி மரியாதை செலுத்துகிறார். 

 இந்தப்படத்தைப் பகிர்ந்த அனைவரிடமும் ஒரே கேள்வி  - மோடியின் ஆட்சியில் இறந்தவர்கள் கூட மறைந்த தலைவர்களுக்கு மரியாதை செலுத்த உயிரோடு வருகிறார்களா? இப்படித்தான் மோடியின் சாதனைகள் என்று கொண்டாடி வருகின்றீர்களா?


No comments:

Post a Comment