காமன்சென்ஸ் மீடியா என்ற அமெரிக்க நிறுவனம் 8 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் அதிகளவில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதாய்த் தனது ஆய்வின் முடிவுகள் காட்டுவதாகத் தெரிவித்துள்ளது.
2019ஆம் ஆண்டிலிருந்து 2021ஆம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளை சமீபத்தில் அந்த நிறுவனம் வெளியிட்டது, அதில் 8 வயதினரிடையே ஒட்டுமொத்த அலைபேசிப் பயன்பாடு 17 விழுக்காடு அதிகரித்துள்ளது.
பிள்ளைகள் (வயது 8 முதல் 12 வரை) - 49 நிமிடங்கள், பதின்ம வயதினர் (வயது 13 முதல் 18 வரை) - 1 மணி நேரம் 17 நிமிடங்கள் என்ற அதிர்ச்சி செய்தியை தெரிவித்துள்ளனர்.
இது கோவிட் -19 நோய்த்தொற்றுக் காரணமாக கல்வியை இணையவழியாக கற்றுக் கொடுத்த போது அதனைப் பயன்படுத்தி சிறார்கள் அதனுடாக சமூக வலைதளங்களைப் பயன்படுத்தத் துவங்கினர்.
இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட்,முகநூல் மற்றும் டுவீட்டர் போன்ற தளங்களில் 8 முதல் 12 வயது வரையிலான பிள்ளைகளிடையே பயன்பாடு அதிகரிப்பது கவலையளிப்பதாக சைபர்விஸ் நிறுவனர் டயானா கிராபர் தெரிவித்தார். நோய்ப்பரவல் கட்டுப்பாடுகள் இருந்த காலத்தில் வெளிப்பட்டிருக்கும் இந்த தகவல்கள் தம்மை ஆச்சரியப்படுத்தவில்லை என்றார் அவர். எனினும் மிகக்குறைவான வயதில் அதிக எண்ணிக்கையிலான பிள்ளைகள் சமூக ஊடகத்தைப் பயன்படுத்துவது கவலைக்குரியது என்று அவர் தெரிவித்தார். இத்தகைய சமூக ஊடகங்கள் சிறார்களுக்காக வடிவமைக்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.

No comments:
Post a Comment