“இறைச்சி” சாம்ராஜ்ஜியம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 9, 2022

“இறைச்சி” சாம்ராஜ்ஜியம்

‘ஏப்ஸ்’ எனப்படும் குரங்குவகை நீண்ட தூரம் சென்று உணவிற்காக விலங்குகளை வேட்டையாடத் துவங்கியதில் இருந்துதான் மனித இனம் சிந்திக்கத் துவங்கியது. மனிதர்களின் முதல் உணவு இறைச்சிதான், துவக்கத்தில் மனிதர்கள் இறைச்சிதான் நமது உடலுக்குள் சென்று உடல்பாகங்களாக மாறுகிறது என்ற நினைத்துக்கொண்டு இருந்தனர். 

பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு வேட்டையாடிய குரங்கு, மான் உள்ளிட்ட கால்நடைகளின் இரைப்பையில் இருக்கும் பழக் கொட்டைகளை சாப்பிட்ட பிறகுதான் பழங்களை பறித்துச்சாப்பிடத்துவங்கினார். 

 மனிதவியல் ஆய்வாளர்கள் உணவு முறை பற்றிக் கூறும் போது துவக்க கால மனித இனம் பழங்கள் மற்றும் காய்களின் வண்ண உருவங்களைக் கண்டு அச்சப்பட்டார்கள். எடுத்துக்காட்டாக பூசணிக்காய் குண்டாக இருந்ததால் அதைச்சாப்பிட்டால் தாமும் அதைப்போல் ஆகிவிடுவோமா என்று பயந்தான். அதேபோல் பலாப்பழம் சாப்பிட்டால்  உடலின் வெளிப்பகுதியில் முட்கள் தோன்றும் என்று நம்பினார்கள். ஆகையால் தான் அவர்கள் இறைச்சியை மட்டுமே உணவாக கொண்டனர். 

இன்றிலிருந்து 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அதாவது நதிக்கரை நாகரிகம் தோன்றிய 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் தானியங்களை சேகரித்து உணவாக உட்கொள்ள மனிதன் கற்றுக் கொண்டான் என்கிறார்கள்

உலகம் முழுவதும் இடப் பெயர்வின் போது இறைச்சிதான் மக்களின் உணவாக இருந்தது, ஆகையால் தான் மதநூல்களில் பெரும்பாலான முக்கிய கதாப்பாத்தி ரங்கள் ஆடு, மாடு, ஒட்டகம் மேய்ப்பவர்களாக இருந்தனர். 

 இந்தியாவில் வாழ்ந்த மண்ணின் மைந்தர்களின் உணவியல் முறை முழுக்க முழுக்க இறைச்சியைச்சார்ந்தே இருந்தது.   கைபர் போலன் கணவாய் வழியாக வந்தவர்கள் இந்த இறைச்சி உணவுப்பழக்கத்தை சீர்குலைத்து வரைமுறையற்று விலங்குகளை பலியிட்டதோடு மதுபானம்(சோமபானம், சுராபானம்) போன்றவற்றை குடித்துவிட்டு வரம்புமீறிய பாலியல் உறவில் ஈடுபட்டு அதை எழுதியும் சிலையாக வடித்தும் வைத்தனர். இன்றும் புராணங்களில் அந்தக்கதைகள் உள்ளன. 

 இந்த நிலையில் தான் கவுதம புத்தரும், மகாவீரரும் வரம்பு மீறிய செயல்கள் - ‘வேதவழக்கு’ என்ற பெயரில் நடக்கும் கொடுமைகளைக் கண்டித்தனர்.  அமைதியை விரும்பிய மக்கள் இவர்களின் கருத்தை உடனடியாக ஏற்றுக்கொண்டதால் குறுகிய காலத்திலேயே பவுத்தமும் 

சமணமும் இந்திய தீபகற்பம் முழுவதும் பரவியது. 

 இதனை அடுத்து தங்களின் முதலுக்கே மோசம்  வந்து விட்டதை உணர்ந்த வேதமரபினர் தாங்களும் இறைச்சி உண்ணாநிலையை எடுத்தனர். அதுவும் இடத்திற்கு இடம் ஏற்றாற் போல்தான், மகாராட்டிராவில் சில பார்ப்பனர்கள்கோழி இறைச்சி உண்பார்கள். பீகார், மேற்குவங்கம், ஒடிசா பகுதி பார்ப்பனர்கள் மீன்களை ருசித்து உண்பார்கள். வடகிழக்கு மாநிலத்தில் உள்ள பார்ப்பனர்கள் மாட்டிறைச்சி உண்பார்கள். 

 மத்திய கருநாடகா மற்றும் மேற்கு ஆந்திரா, தெலங்கானா பகுதியில் உள்ள பார்ப்பனர்கள் கோவில் திருவிழாக்களில் பலிகொடுக்கப்படும் விலங்குகளின் இறைச்சியை சமைத்து உண்பார்கள்.

 இப்படி இருக்க சமீபகாலமாக இந்துத்துவ அமைப்பினர் இந்துவாக இருந்தால் இறைச்சியை உண்ணாதே என்று கூச்சல் இட்டுக் கொண்டு இந்துக்கள் நடத்தும் இறைச்சிக்கடைகளை மூடச்சொல்லி மிரட்டி வருகின்றனர். 

 ஒன்றிய மற்றும் பா.ஜ.க. மாநிலங்களில் ஆளும் வர்க்கமும் இவர்களுக்கு 

ஊக்கம் கொடுத்து வேடிக்கைபார்த்து வருகிறது.

No comments:

Post a Comment