'நீட்' உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள், தேசியக் கல்விக் கொள்கை, கல்விக் கூடங்களில் மதவாதப் பிரிவினையைத் தூண்டும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 3, 2022

'நீட்' உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள், தேசியக் கல்விக் கொள்கை, கல்விக் கூடங்களில் மதவாதப் பிரிவினையைத் தூண்டும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு - தமிழ்நாடுகூட்டத்தில் முடிவு!

சென்னை,ஏப்.3- சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில்  மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு-தமிழ் நாடு’  (FSO-TN)  அமைப்பின் கூட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பா ளர்கள், பல்வேறு மாணவர் அமைப் புகளின் பொறுப் பாளர்கள் பங்கேற்று, நடப்பு சூழலில் மாணவர் சமூகம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து விவாதித்தனர்.

திராவிட முன்னேற்றக் கழக மாணவர் அணி, இந்திய மாணவர் சங்கம், திராவிட மாணவர் கழகம், அனைத்திந்திய மாணவர் பெரு மன்றம், மதிமுக மாணவர் அணி,  முற் போக்கு மாணவர் கழகம், முஸ்லிம் மாணவர் பேரவை, சமூகநீதி மாணவர் இயக்கம், மாணவர் இந்தியா, இஸ் லாமிய மாணவர் அமைப்பு, கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா, அகில இந்திய கிராமப்புற மாணவர் சங்கம் உள்ளிட்ட  பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். கூட்ட மைப்பின் ஒருங்கிணைப்பாளர் களான சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி. எம்.பி. எழிலரசன் தலைமை யேற்றும், சீ.மாரியப்பன் கூட்டத்தை ஒருங் கிணைத்தும் உரையாற்றினர்.

தமிழ்நாடு அரசு இரண்டாம் முறையாகவும் நிறைவேற்றி அனுப்பி யிருக்கும் நீட் தொடர்பான இரண்டு சட்டங்களைக் குடியரசுத் தலைவ ருக்கு இன்னும் அனுப்பாமல் காலம் தாழ்த்திவரும் தமிழ்நாடு ஆளுநருக் குக் கூட்டத்தில் கண்டனம் தெரிவிக் கப்பட்டது.

தேசிய கல்விக் கொள்கை என்னும் பெயரால் மாநில அரசிட மிருந்து கல்வியை முழுமையாக ஒன்றியப் பட்டியலுக்குக் கொண்டு சென்று, பல வகையிலும் கல்வியைப் பாதிக்கும் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி வரும் ஒன்றிய அரசு தன் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும், எந்த வடிவிலும் தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்காது என்னும் நிலைப்பாட்டுக்கு நன்றி தெரிவித்தும் பிரதிநிதிகள் உரையாற்றினர்.

கல்விக் கூடங்களுக்குள் மதப் பிரிவினையை உருவாக்கும் விதத்தில் ஹிஜாப் பிரச்சினையைக் கொண்டு வந்து அதைக் கொண்டு மோசமான மத வாத அரசியலை விதைக்கும் ஆர்.எஸ்.எஸ்.- பா.. அமைப்பு களுக்குக் கண்டனம் தெரிவிப்பதோடு, தமிழ் நாட்டில் அரசியல் சட்டம் வழங்கும் உரிமைகளுக்குத் தடையில்லை, ஹிஜாப் அணிந்துவருவதற்குத் தடையில்லை ஏன்று அறிவித்துள்ள தமிழ் நாடு அரசுக்கும் நன்றி தெரிவிக் கப்பட்டது.

நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகள், தேசிய கல்விக் கொள்கை, கல்விக் கூடங்களை மதப் பிரிவினையைத் தூண்டும் போக்கு ஆகியவற்றைக் கண்டித்து  ஏப்ரல் மாதத் தொடக் கத்தில் சென்னையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

No comments:

Post a Comment