காவல் துறையை அணுகுவதற்கு தயக்கம் காட்டும் மக்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 3, 2022

காவல் துறையை அணுகுவதற்கு தயக்கம் காட்டும் மக்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

புதுடில்லி,ஏப்.3- ‘ஊழல், பாரபட்ச மற்றதன்மை இல்லாதது, அரசியல் வாதிகளுடன் நெருங்கிய உறவு உள் ளிட்ட காரணங்களால் காவல் துறையின் நன்மதிப்பு களங்கமடைந்தி ருப்பதால், பாதிப்புக்குள்ளாகி நம்பிக் கையிழந்துள்ள நேரத்திலும் காவல் துறையை அணுகுவதற்கு மக்கள் தயக்கம் காட்டுகின்றனர்என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறினார்

ஜனநாயகம்: புலனாய்வு அமைப் புகளின் கடமை மற்றும் பொறுப்புஎன்ற தலைப்பில் ஒன்றிய புலனாய்வு அமைப்பு (சிபிஅய்) சார்பில் டில்லி யில்  ஏற்பாடு செய்யப்பட்ட 19-ஆவது டி.பி.கோலி நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் பங்கேற்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேசியதாவது:

பாரபட்சமற்ற தன்மை இல்லாதது

மக்கள் நம்பிக்கை இழந்துள்ள நேரத்திலும் காவல்துறையை அணுகு வதற்கு தயக்கம் காட்டுகின்றனர். ஊழல், பாரபட்சமற்றதன்மை இல் லாதது, அரசியல்வாதிகளுடன் நெருங் கிய உறவு உள்ளிட்ட காரணங்களால் காவல்துறையின் நன்மதிப்பு களங்க மடைந்திருப்பதே அதற்கு காரணம்

அதே நேரம், ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு துன்புறுத்தலுக்கு ஆளாவதாக புகார் தெரிவித்து காவல்துறையினர் நீதிமன்றத்தை அணுகுவதும் தொடர் நிகழ்வாகி வருகிறது. ஆட்சியில் இருப்பவர்களின் நன்மதிப்பை, அன்பை பெறும் வகையில் நீங்கள் செயல்படுகின்றபோது, அதனால் ஏற்படும் விளைவுகளையும் நீங்கள் சந்தித்தாகவேண்டும்

சில சமயங்களில், உரிய அங்கீகாரம் மற்றும் பாராட்டை எதிர்பார்த்து சிறந்த திறமையானவர்களும் காவல் துறையில் நுழைகின்றனர். ஆனால், துறையில் ஊழல்வாதிகள் அதிகம் நிறைந்திருக்கும்போது, நேர்மையான அதிகாரிகள் அவர்களின் உறுதி மொழி ஏற்பின்படி தொடர்ந்து பணியாற்றுவது கடினமாகிவிடுகிறது

ஒருங்கிணைந்து நின்றால்...

இருந்தபோதும், காவல் துறையில் அனைத்து அதிகாரிகளும் நெறிமுறை களில் ஒற்றுமையுடன் ஒருங்கிணைந்து நின்றால், உங்களுடைய பணியில் எந்தவித குறுக்கீடும் செய்யமுடியாது என்பதுதான் உண்மை. இது பிற அனைத்து துறைகளுக்கும் பொருந் தும். இதில் துறை தலைமையின் பங்கும் முக்கியமானது. தலைமையில் செயல்பாட்டைப் பொறுத்தே துறை யின் நன்மை அல்லது தீமை அமையும்

உள்கட்டமைப்பு வசதிக் குறை பாடு, பணியாளர் பற்றாக்குறை, அசா தாரண பணிச் சூழல், நவீன கருவிகள் இல்லாதது, சட்ட நெறிமுறைகளை அதிகாரிகள் முழுமையாக பின்பற் றாதது உள்ளிட்டவையும் காவல் துறையின் சிறந்த செயல்பாட்டை பாதிக்கும் காரணிகளாக உள்ளன. மேலும், விசாரணையில் தாமதம், போதிய எண்ணிக்கையில் அரசு வழக் குரைஞர்கள் இல்லாதது, தொடர் வழக்கு ஒத்திவைப்பு (வாய்தா), நூற்றுக்கணக்கான சாட்சிகளை இணைப்பது, நிலுவையில் உள்ள விசாரணையில் பல பக்கங்களில் ஆவ ணங்களை சமர்ப்பிப்பது, விசாரணை கைதிகளை தேவையின்றி சிறையில் வைப்பது, அரசியல் மாற்றத்துக்கு ஏற்றாவாறு வழக்கில் முன்னுரிமையை மாற்றுவது உள்ளிட்ட நடவடிக்கை களும் காவல் துறை மீதான மக்கள் நம்பிக்கையை பாதிக்கச் செய்துள்ளது

குற்றமற்றவர் பாதிக்கப்படும் நிலை உருவாகிறது

காவல்துறையின் இந்த நடவடிக் கையால் உண்மையான குற்றவாளி விடுவிக்கப்பட்டு, உண்மையானவர்கள் பாதிக் கப்படும் நிலை உருவாகிறது. காவல் துறையின் ஒவ்வொரு நடவடிக் கையையும் நீதிமன்றம் கண்காணிக்க முடியாது. காவல்துறையில் சீர்திருத் தம் என்பது நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் விஷயமாகும்

எனவே, மக்களின் நம்பிக்கை யையும், சமூக நன் மதிப்பையும் காவல் துறை மீண்டும் பெற, அரசியல் வாதிகளுடனான நெருங்கிய உறவை முறிப்பதே முதல் படியாகும் என்று தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறினார்.

No comments:

Post a Comment