படிப்போம் - வாசிப்போம் - பயன்பெறுவோம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 23, 2022

படிப்போம் - வாசிப்போம் - பயன்பெறுவோம்!

புத்தகங்களைப் படிக்கும் பழக்கமுள்ள நமது நண்பர்கள் குறிப்பாக, இளைஞர்கள் -இருபால்- மாணவர்கள் முதல் முதியோர் வரை அனைவருக்கும் புத்தகங்களை விடச் சிறந்த நண்பர்கள் யாரும் உண்டா?

உடல்நலத்திற்கு ஊட்டச்சத்துகள் -வைட்டமின்கள் - எவ்வளவு முக்கியமோ, அது-போன்றே உள்ள நலத்திற்கும், வளத் திற்கும் புத்தகங்கள்தான் அரிய ஊக்கச் சத்துகள் ஆகும்!

ஒவ்வொரு வீட்டிலும் அது எவ்வளவு சிறிய வீடாக இருப்பினும்கூட - நூல் அளவு -நூலகம் அமைந்த பகுதி இருப்பது மிகவும் அவசியம் அல்லவா?

மாணவப் பருவத்திலேயே ‘‘அய்யா வின் குருகுலத்தில்’’ சேர்ந்ததாலும், என்னை ஆளாக்கிய எனது மரியாதைக்குரிய ஆசிரியர் . திராவிடமணி பி.. அவர்கள் - இளம் வகுப்பு மாணவர்களாகிய எங் களுக்கு ‘‘பிரைவேட் ட்யூசன்’’ பாடங்க ளைச் சொல்லிக் கொடுப்பதோடு, இயக்க வெளியீடுகளையும் சத்தம் போட்டு உரக் கப் படிக்கச் சொல்லி மற்றவர்களை அமர்ந்து கேட்கச் செய்து, கேள்வி கேட்கும் முறையைக் கையாளு வார்கள்!

‘‘குடிஅரசு’’, ‘‘திராவிட நாடு’’, ‘‘விடுதலை’’ போன்ற ஏடுகளையும், அதன் தலைப்பு களையும்கூட அப்படி ஓங்கி ‘‘கணீர்’’ குர லில் படிக்கச் சொல்லி, நன்றாகப் படிப்ப வரைப் பாராட்டி மகிழ்வார்!

சுயமரியாதை இயக்கத்தின் பாலபாட நூல்களான ‘‘ஞான சூரியன்’’, ‘‘கடவுளை நிந்திக்கும் கயவர்கள் யார்?’’, ‘‘பெண் ஏன் அடிமையானாள்?,’’ ‘‘புராண ஆபாசங்கள்’’ போன்றவை எங்களைச் செழுமைப்படுத் திய சிறப்பான - எங்களது சிந்தனை வயலில் வளரும் அறிவுப் பயிர்களுக்குப் போடப் பட்ட நல்ல ஆரோக்கிய இயற்கை உரங்கள் ஆகும்!

பிறந்த நாளுக்கு என்ன வேண்டும்? என்று நாடு கேட்டபோது, மாவீரன் லெனின் அவர்கள் பொன்னையோ, பொருளையோ கேட்கவில்லை - புத்தகங்கள்-தான் வேண் டுமென்றாராம்!

தந்தை பெரியாரை ‘‘படிக்காதவர்’’ என்று சிலர் - நுனிப் புல் மேய்வதுபோல் - கூறுவதுண்டு. அது கல்லூரியில் - பல்கலைக் கழகங்களில் சேர்ந்து பட்டம் வாங்கத் தவறியவர் - என்ற பொருளில் மட்டுமே பொருந்தக்கூடிய சொல்லே தவிர,  அவர் இறுதி மூச்சு அடங்கும்வரை ஏராளமான நூல்களை - அய்யா அவர்கள் படித்து அசை போட்டுச் சிந்தித்து, நான் மட்டும் இப்படிக் கூறவில்லை - எனது இதே கருத்தை ‘‘இன்னின்னார் கூட’’ கூறி யுள்ளனரே என்று தனது சுய சிந்தனைக்கு ஏற்ப அவற்றைப் பயன்படுத்துவார்கள்.

சென்னை அடையாறு பகுதியில் உள்ள எனது இல்லத்தில் சில நாள்கள் அய்யாவும், அம்மாவும் (அன்னை .வெ.ரா. மணியம் மையார்) தங்கி இருக்கையில் எனது நூல்கள் பலவற்றை இயக்கக் கொள்கை அல்லாத பொதுக் கருத்துள்ளவைகளை எடுத்துப் புரட்டிப் படித்து, அந்த நூலாசிரியர் கருத்தினை ஏற்றோ, மறுத்தோகூட சில பல கட்டுரைகளை எழுதி -‘விடுதலையில் போட வாய்ப்பாக அமைந்த சூழ்நிலை யும்கூட உருவானதுண்டு!

அய்யா பெரியார் இராமாயண ஆராய்ச்சி 7 பாகங்கள் காண்டங்கள் - சந்திரசேகரப் பாவலர் என்ற புனை பெயரில் பண்டிதர் .மு. சுப்பிரமணியப் பிள்ளை என்ற பழுத்த சைவத் திருமேனிப் புலவர் அவர் கள் எழுதிய எவரும் மறுக்க முடியாத நூல்களைஒரே பைண்டாகச்செய்து வைப்பதை எடுத்துப் படித்து அதுபற்றி சில நேரங்களில் அவர்கள் விளக்கும்போது, பழைய வால்மீகி மற்றும் இராமாயணப் பிரதிகளை பிரதிவாதி பயங்கரம் என்ற பெயர் பெற்ற பார்ப்பன ஆசிரியர்கள், சி.ஆர். சீனுவாச அய்யங்கார் மொழி பெயர்ப்புகளுடன் ஒப்பிட்டுப் பேசி, தனது நிலைப்பாட்டை ஆதாரத்துடன் விளக்கு வதை கேட்டபோது, அய்யா அவர்கள் புத்தராகப் பொலிந்தார்கள்! நானே சீடன் ஆனந்தன் ஆகியிருக்கிறேன். என்னைப் போல அண்ணா, கலைஞர் முதலிய பலருக்கும் அவ்வாய்ப்பு முன்பு ஈரோட்டு குருகுலத்திலும் கூட ஏராளம் வாய்த்த துண்டு!

மற்றவைகளில் பெரிதும் சிக்கனம் பார்க் கும் தந்தை பெரியார் அவர்கள், புத்தகங்கள் வாங்குவதில் மிகவும் தாராளச் செலவு செய்யும்வள்ளல்ஆவார்கள்!

ஈரோட்டில் அண்ணா அவர்கள் (1940 இல் ‘‘விடுதலை’’ நாளேட்டின் ஆசிரியராக இருந்தபோது) ஈரோடு ஹிக்கின்ஸ் பாதம்ஸ் ரயில்வே புத்தக நிலையத்தில் நல்ல ஆங் கிலப் புத்தகங்கள் வந்துள்ளன என்பதை அண்ணா கூறியவுடன் அய்யா பணத்தை எடுத்துக் கொடுத்து, அண்ணாத்துரை அதனை உடனே சென்று வாங்கிக் கொண்டு வந்து படித்துவிட்டு கட்டுரை களாகவும் எழுதுங்கள். இரண்டு புத்த கங்களாக வாங்குங்கள்; ஒன்று உங்களுக்கு வைத்துக்கொண்டு, ‘‘மற்றொன்றை ‘‘குடி அரசு’’ ஆபீஸ் நூலகத்திலும் வையுங்கள்’’ என்று கூறுவார்களாம்!

அன்று மாலையே, அண்ணா அவர்கள் சென்று வாங்கி வருவார்களாம்.

தோழர்கள் எஸ்.ஆர். சந்தானம், அய் யாவின் சகோதரியார் (கண்ணம்மையார் அவர்களது மூத்த மகன் - பல ஆண்டுகால ஈரோடு நகராட்சி உறுப்பினர் - கோவை மாவட்ட திராவிடர் கழகச் செயலாளராகவும் அப்போது இருந்துள்ளார்!) அதுபோலவே, மிகுந்த நகைச்சுவை உணர்வுடன் உரை யாடும் ஈரோடு . சண்முக வேலாயுதன் (இவர் பத்திரங்களை எழுதும் தொழில் செய்தவர்)  மாலை நடைப் பயிற்சியாக ஈரோடு சந்திப்பு ரயில் நிலையம் சென்று, புத்தகங்களை வாங்குவார் அண்ணா! அங்கே மிகவும் சுவை மிக்க இறைச்சி உண வுக் (ழிஷீஸீ க்ஷிமீரீமீtணீக்ஷீவீணீஸீ) கடை ரஹ்மானியா கேட்டரிங் சர்வீஸ் என்ற கடையில் நல்ல தேநீர் - பிரியாணி - புலால்- பரோட்டா குருமா முதலியவற்றினையும் சாப்பிட்டு விட்டு, ‘‘அரட்டைக் கச்சேரி’’ சில நேரம் அடித்துவிட்டு மாலை திரும்பி, இரவெல் லாம் படித்து, அப்புது நூல்பற்றி உடனே கட்டுரைகள் வெளிவரும்; மேடைப் பேச்சு களில், முத்துக்கள் மிளிரும். என்னிடம்கூட சென்னையில் அய்யா, இரண்டு நூல்கள் வாங்கு என்று சொல்லி பணம் கொடுத்ததும் உண்டு.

அய்யாவுக்கு அன்பளிப்பாகத் தந்த ஆங்கில நூல்களில் கையெழுத்திட்டே என்னிடம் தந்துள்ள நூல்களும் உண்டு. எனவே, படிப்போம்! படிப்போம்! நூலைப் படிப்போம் - தவறாமல் படிப்போம் - பயன்பெறுவோம்!

- நூல்: தமிழர் தலைவர் எழுதிய "வாழ்வியல் சிந்தனைகள்" பாகம் 6


No comments:

Post a Comment