இங்கிலாந்தில் ஓர் அம்மையார் வீட்டில் உணவருந்தி இரவெல்லாம் கண்விழித்துப் படித்தார். பிரிட்டிஷ் மியூசியம் நூலகம் அம்பேத்கர் மனத் தைப் பெரிதும் கவர்ந்தது. பொது. வுடைமைத் தத்துவத்தின் சிற்பி கார்ல் மார்க்ஸ், சோவியத் நாட்டின் ஈடு இணை யற்ற பெருந்தலைவர் லெனின், இத்தா லியப் பேரறிஞர் மாஜினி ஆகியோர் பயன்படுத்திய நூலகம் அது. நூலகம் திறந்திருக்கும் நேர மெல்லாம் அங்கே அமர்ந்து மதிய உணவு உண்ணாமலும் படிப்பார். நூலகம் திறக்கும்போது முதல் ஆளாகவும், மூடும்போது கடைசி ஆளாகவும் இருந்தார். நூலகத்திலிருந்து வீடு திரும்பும் போது ஆராய்ச்சிக் குறிப்பு கள் பை நிரம்பக் கொணர்ந்து இரவெல் லாம் கண்விழித்து எழுதுவார். ஓய்வு, உல்லாசம் எதையும் நாடாமல் அம்பேத் கர் அறிவுச் செல்வத்தைக் குவித்தார்.
‘இராஜகிருகம்‘ என்னும் அவர் கட் டிய வீட்டின் மாடியில் ஆயிரக்கணக்கான நூல்களைக் குவித்து வைத்தார். அக் காலத்தில் ஆசியாவிலேயே தனிப்பட்ட ஒருவர் இவ்வளவு பெரிய நூலகத்திற்குச் சொந்தக்காரராக இருந்ததில்லை. இவ்வாறெல்லாம் ஆழ்ந்து கற்றதால்தான் இந்தியாவிலேயே தலைசிறந்த சட்ட மேதையாக அம்பேத்கர் விளங்கினார்.

No comments:
Post a Comment