நீரிழிவு நோயாளிகளில் 3இல் ஒருவர் கட்டுப்பாட்டோடு இருக்கிறார்கள் மருத்துவ நிபுணர் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 23, 2022

நீரிழிவு நோயாளிகளில் 3இல் ஒருவர் கட்டுப்பாட்டோடு இருக்கிறார்கள் மருத்துவ நிபுணர் தகவல்

சென்னை, ஏப். 23- இந்தியாவில் நீரிழிவு நோயின் தற்போதைய நிலை குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நிதியுதவியுடன் சென்னை நீரிழிவு ஆராய்ச்சி பவுண்டேஷன் (எம்.டி.ஆர்.எஃப்) தேசிய அளவில் ஆய்வு மேற்கொண்டது.

நீரிழிவு நோய் என கண்டறியப்பட்டவர்களில் மூன்றில் ஒரு  பங்கு நபர்கள் நீரிழிவை சிறப்பாக கட்டுப்படுத்தி வைத்துள்ளது. இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது என்று சென்னையில் செய்தியாளர் களிடம் பேசிய இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியரும்  டாக்டர். மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மய்யத்தின் நிர்வாக இயக்குன ருமான டாக்டர் அஞ்சனா கூறினார். 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 1 லட்சத்து 13 ஆயிரத்து 43 நபர்களிடம் இந்த ஆய்வு மேற் கொள்ளப்பட்டது.

 ஆய்வு வெளிப்படுத்தும் அம்சங்கள்:

நீரிழிவு உள்ளவர்களில் 36.3விழுக்காட்டினர்  ரத்தத் தில் சர்க்கரை அளவை சிறப்பான கட்டுப்பாட்டில் வைத் துள்ளனர், 48.8விழுக் காட்டினர்  ரத்த அழுத்தத்தின் மீது நல்ல கட்டுப்பாட்டையும் மற்றும் 41.5 விழுக்காட்டினர் எல்டிஎல்  என்ற கெட்ட கொழுப்பை கட்டுக்குள் வைத் துள்ளனர்.

ரத்தத்தில்  சர்க்கரை அளவைப் பராமரிக்க  சர்க்கரை அளவீடு  சாதனத்தை  வீட்டில் பயன்படுத்துவதாக இவர் களில் 16.7விழுக் காட்டினர்  தெரிவித்துள்ளனர்.  இவர்களில் 20 விழுக்காட்டினருக்கும் குறைவான நபர்களே ஒவ்வொரு நாளும் பழங்கள் மற்றும் காய் கறிகளை சாப்பிடுகின்றனர்.  25 விழுக்காட்டிற்கும் குறை வானவர்களே மிதமான  முதல் கடுமையான  உடற்பயிற்சியை செய்வதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வின் முதுநிலை ஆசிரியரும் மற்றும் டாக்டர். மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மய்யத்தின் தலைவரும் மற்றும் மெட்ராஸ் டயாபடீஸ் ரிசர்ச் ஃபவுண் டேஷனின் தலைவருமான டாக்டர். வி. மோகன் இது குறித்து  இந்தியா வில் சுகாதாரம் என்பது ஒவ்வொரு மாநிலத்தின் முதன்மைப் பொறுப்பாக இருப்பதால், நீரிழிவு சிகிச்சை இலக்குகளை எட்டுவதில் பிராந்தியங்களுக்கிடையிலான மற்றும் மாநிலங்களுக்கிடையிலான வேறுபாடுகள் பற்றிய தகவலை எமது ஆய்வுத் தகவல் வழங்கியிருப்பதால், இந்தியாவில் நீரிழிவு சிகிச்சை வழங் கலையும் மற்றும் கண்காணிப்பையும் மேம்படுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட கொள்கை களை வகுப்பதில் அரசுகளுக்கு பெரும் உதவியாக இருக்கும்,” என்று கூறினார்.


No comments:

Post a Comment