சென்னை, ஏப்.23- ஏழை-எளிய மற்றும் மாற்றுத் திறனாளிகள் யாருடைய உதவியும் இல்லாமல் தாமே சுயமாக செயல்படும் விதமாக அவர்களுக்கு உதவிடும் வகையில் சென்னை, சூளையைச் சேர்ந்த ஆதிநாத் ஜெயின் டிரஸ்ட் கடந்த 42 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று (22.4.2022) இலவச உபகர ணங்கள் வழங்கும் முகாமை நடத்தியது. இந்த முகாமில் 20 லட்ச ரூபாய் மதிப்பிலான உபகரணங்கள் 500க்கும் மேற்பட்ட ஏழை-எளிய மற்றும் மாற்றுத் திறனாளி களுக்கு வழங்கப்பட்டன. இந்த முகாமுக்கு தர்மிசந்த், பராஸ், பங்கஜ் தேஜாஸ் மற்றும் ரங்கா குடும்பத்தினர் நிதியுதவி அளித் துள்ளனர். இந்நிகழ்வின் போது இலவச கணினி கண் பரிசோதனை பிரிவும் திறந்து வைக்கப்பட்டது.
இந்த முகாமிற்கு சென்னை மாநகரக் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அய்.பி.எஸ். தலைமை தாங்கி பயனாளி களுக்கு செயற்கை உபகரணங்களை வழங்கினார்.
இந்த அறக்கட்டளையின் செயலாளர் டாக்டர் மோகன் ஜெயின், இயற்கை உணவின் முக்கியத்துவம் மற்றும் ஆரோக் கியத்தை நிகழ்ச்சியின் போது எடுத்துரைத்தார்.
No comments:
Post a Comment