தமிழர் தலைவர்ஆசிரியரின் முயற்சி ஒருபோதும் வீணாகாது; வெற்றி பெறும் நாமும் துணை நிற்போம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 13, 2022

தமிழர் தலைவர்ஆசிரியரின் முயற்சி ஒருபோதும் வீணாகாது; வெற்றி பெறும் நாமும் துணை நிற்போம்!

பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா

பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவருமாகிய பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா பேசியதாவது

இந்தியாவின் மிகப்பெரிய விஞ்ஞானி மேதகு அப்துல் கலாம் அவர்களோ, மேனாள் துணைவேந்தர் அனந்த கிருஷ்ணன் அவர்களோ, அதேபோல் மயில்சாமி அண்ணா துரை அவர்களோ நீட் தேர்வோ கியூட் தேர்வோ எழுத வில்லை. இந்த ஆளுநர்  பல்கலைக்கழகங்களில் போய் இந்தியாவின் மாநில ஒற்றுமை தேவையில்லை என்று சொல்வது போல் பேசுகிறார். மாநில உரிமை மீட்பு என்ன வென்றால் ஆளுநர் இந்த நாட்டுக்கு தேவையில்லை என்பதுதான். சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட தீர்மானங் களை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் தூங்கி கொண்டு இருக்கிறார். எதார்த்த நிலையை புரியாமல் நடந்து கொள் ளும் ஆளுநர் நமக்கு தேவையில்லை என்பதையும், ஆளுநர் பதவியே தேவையில்லை என்பதையும் மய்யப் படுத்தி திராவிடர் கழகமே ஒரு பிரச்சார இயக்கத்தை முன்னெடுக்க வேண்டும். புதிய கல்விக் கொள்கையின் அம்சம் என்னவென்றால் பாடத்திட்டங்களை வகுக்க முடி யாது. அதையும் ஒன்றிய அரசுதான் வகுத்து கொடுக்கும்.

தந்தை பெரியார் வழியில் அகவை 90 அய் தொடக்கூடிய நிலையில் எலும்பும் சதையுமாக மெலிந்த தேகத்தோடு இந்த பயணத்தை தொடங்கி இருக்கும் ஆசிரியரின் முயற்சி ஒருபோதும் வீணாகாது. வெற்றி பெறும் நாமும் துணை நிற்போம்Ó என்று கூறி விடைபெறுகிறேன்.


No comments:

Post a Comment