இது துரோணாச்சாரியார்கள் காலமல்ல; ஏகலைவன்கள் காலம்! இன்றைக்கு கட்டை விரலை கேட்பவர்களே காணாமல் போவார்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 21, 2022

இது துரோணாச்சாரியார்கள் காலமல்ல; ஏகலைவன்கள் காலம்! இன்றைக்கு கட்டை விரலை கேட்பவர்களே காணாமல் போவார்கள்!

 பரமத்தி வேலூர், சேலம் பொதுக்கூட்டங்களில் தமிழர் தலைவர் எழுச்சி உரை!

பரமத்தி வேலூர், ஏப்.21- இது துரோணாச்சாரியார்கள் காலமல்ல; ஏகலைவன்கள் காலம்! இன்றைக்கு கட்டை விரலை கேட்பவர்களே காணாமல் போவார்கள்! என்று எச்சரித்து எழுச்சியுரை ஆற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

நீட் தேர்வு எதிர்ப்பு- தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு- மாநில உரிமை மீட்புப் பரப்புரை பயணக் கூட்டம் நேற்று (20.4.2022) பரமத்தி வேலூரிலும், சேலத்திலும் நடைபெற்றது. பரப்புரைப் பயணப்பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

பரப்புரைப் பயணத்துக்கு

தமிழ்நாடு முழுவதும் பெருகிவரும் ஆதரவு

தமிழ்நாட்டில் அடித்தட்டு மாணவர்கள் நலனைப் பேணிக்காத்து, கல்வி உரிமையைக் காத்து சமூகநீதியை நிலைநாட்டுவதிலும், மாநில உரிமைகளை மீட்பதிலும்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் நீட் தேர்வு எதிர்ப்பு- தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு- மாநில உரிமை மீட்புப் பரப்புரைப் பெரும்பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழர் தலைவருக்கு அனைத்துக்கட்சியினர், பொதுமக்கள் பேரா தரவினை அளித்து வருகிறார்கள். தமிழர் தலைவரிடம் நீட் விளக்க புத்தகங்களை பெருமளவில் பெறுகிறார்கள். பய னாடை அணிவித்து நன்கொடைகளை வழங்கி வருகிறார்கள். கழகப்பொறுப்பாளர்கள் தமிழர் தலைவர் வருகையை பெருவிழாவாகக் கொண்டாடுகின்றனர். பரப்புரைப் பெரும் பயணம் குறித்த சுவரெழுத்துகள், பரப்புரைப்பயண விளக்க தெருமுனைக்கூட்டங்கள் வாயிலாக தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளில் தமிழர் தலைவர் வருகை தகவல் பொது மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. தமிழர் தலைவர் உரை கேட்க நகரம், கிராமம் பேதமின்றி அனைத்துப் பகுதிகளிலிருந்தும்  மக்கள் பெருமளவில் திரள்கிறார்கள். ஒரே நாளில் வெவ்வேறு பகுதிகளில் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன. பரப்புரைப் பெரும்பயணக்குழுவிலுள்ள கழகப்பேச்சாளர்கள் பரப்புரைபயணத்தின் நோக்கம்குறித்து விளக்க உரையாற்றுகிறார்கள். அனைத்துக்கட்சியினர், உள்ளாட்சிப்பிரதிநிதிகள் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களின் பேராதரவினை உறுதிப்படுத்துகிறார்கள். திமுக கூட்டணியிலுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் தமிழர் தலைவரை சந்தித்து அன்பின் மிகுதியால் அவரது உடல் நலனை அக்கறையுடன் விசாரிப்பதுடன்,  நீண்ட காலம் தொண்டாற்ற வேண்டும் என்று தங்களின் உள்ளக்கிடக் கையை வெளிப்படுத்துகிறார்கள்.

எதிர்க்கட்சியாக இருந்தபோதும், ஆட்சியில் இருக்கும் போதும் திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.. ஸ்டாலின் அவர்கள் தங்களை வழிநடத்துபவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்தான், திராவிடர் கழகம்தான் என்று உறுதிபட கூறுவதுடன், திராவிடர் கழகத் தலைவரின் எண்ண ஓட்டத்துக்கேற்ப சமூக நீதித் தடத்தில், அதிவேக பயணத்தை ஆட்சிப்பொறுப்பேற்ற நாளிலிருந்து சமூகநீதிக் கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு..ஸ்டாலின் தொடர்ந்து கொண்டிருக்கிறார். நாட்டிலேயே முதலிடம் பெற்றுள்ள முதலமைச்சராகத் திகழ்கிறார். நாடு முழுவதும் என்றில்லாமல் உலகத்துக்கேதிராவிட மாடல்ஆட்சியின் சிறப்பைக் கொண்டு சேர்க்கிறார்.

நாகர்கோயிலில் 3.4.2022 அன்று தொடங்கிய தமிழர் தலைவரின் பரப்புரைப்பெரும்பயணத்தின் நிறைவு நாளில் (25.4.2022) சென்னையில் முதலமைச்சர் மு..ஸ்டாலின் கலந்துகொள்கிறார்.

தமிழ்நாட்டில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள சமூக நீதி

தமிழ்நாட்டில் தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தில் 12 ஆண்டு காலம் படிக்கின்ற மாணவர்கள் பெறுகின்ற மதிப் பெண் அடிப்படையில் மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முறையான கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கை முறையாக நடைபெற்று வந்தது. ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பைச்சேர்ந்த அடித் தட்டு மக்களிலிருந்து மருத்துவர்கள் உருவாகும் வாய்ப்பு இருந்தது. மேலும், தமிழ்நாட்டில் மட்டுமே 69 விழுக்காடு இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. நாட்டுக்கே சமூகநீதித்தடத்தில் வழிகாட்டியாக முன்னோடி மாநிலமாக உள்ளது தமிழ்நாடு ஆகும். நீதிக்கட்சி ஆட்சி தொடங்கி அதன் தொடர்ச்சியான திராவிட இயக்க ஆட்சியில் இன்று வரையிலும் சமூகநீதி காப்பாற்றப்பட்டு வருகிறது.

சமூகநீதியை சீர்குலைக்கும்

ஒன்றிய பாஜக அரசு

சமூகநீதியை சீர்குலைக்கும் ஒன்றிய பாஜக அர சின் முயற்சியே நீட் தேர்வு திணிப்பு. நீட் தேர்வு முறைகேடுகளின் மொத்த உருவமாக உள்ளது. வட மாநிலங்களில் 12ஆம் வகுப்பு தேர்வையே எழுதாமல் நீட்தேர்வெழுதி நீட் தேர்வில் முதலிடம் பெறுகிறார்கள். வயது வேறுபாடின்றி 70 வயதுள்ளவர்கூட நீட் தேர்வை எழுதி மருத்துவராகும் அவல நிலை உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் அம்பலப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மட்டும் நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட மாணவச்செல்வங்கள் உயிரிழந்துள்ளனர். மருத்துவக்கல்வி, மருத்துவர் கனவு என்பதே தற்கொலைக்கு ஒப்பானது என்று எண்ணும் நிலைக்கு மாணவர்கள், பெற்றோர் தள்ளப்படுகின்றனர். நீட் தேர்வு திணிப்பால் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களின்  கல்வி உரிமை மறுக்கப்பட்டு சமூக அநீதி இழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டிலுள்ள பாஜகவினர் தவிர  அனைத்துக்கட்சியினரும் நீட் தேர்வு கூடாது எனும் நிலைப்பாட்டில் உள்ள நிலையில் ஒன்றிய பாஜக அரசு நீட் தேர்வைக் கட்டாயம் என்று திணித்து வருகிறது.

 தமிழ்நாட்டில்தான் முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் தொடங்கி மாவட்டந்தோறும் மருத்துவக்கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலுள்ள மருத்துவக் கல்லூரிகளில் தமிழ்நாட்டைச்சேர்ந்த மாணவர்களின் வாய்ப்புகளைத் தட்டிப்பறித்து வடமாநிலத்தவருக்கு அளிக் கும்பொருட்டு ஒன்றிய அரசால்  திட்டமிட்டு திணிக்கப் படுவதாகவே நீட் தேர்வு உள்ளது. வழக்கமாக தேர்வை நடத்துவது கல்வி நிறுவனமாகவே இருக்கும். ஆனால், ஒன்றிய அரசின் டெஸ்டிங் ஏஜென்சி அமைப்புதான் நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை நடத்துகிறது. அதிலும், அந்தந்த மாநிலங்களில் மாணவர்கள் பயிலும் மாநில அரசின் பாடத்திட்டத்தின்படி கேள்வித்தாள் அமைக்கப்படாமல் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் மட்டுமே கேள்வித்தாள் அமைக்கப்படுகிறது. இதன்மூலம் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களின் கல்வி பெறும் உரிமை முற்றிலும் நசுக்கப்படுகிறது.

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கும் சட்டம் தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையில்  ஒரு மனதாக இரண்டு முறை நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அளிக்கப்பட்டு, சட்டத்தை நிறைவேற்றித்தருமாறு ஒன்றிய அரசிடமும், ஆளுநரிடமும் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு..ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார். ஒன்றிய அரசின் பிடிவாதத்தால், ஆளுநர் இன்னமும் குடியரசுத் தலைவருக்கு சட்ட மசோதாக்களை அனுப்பி வைக்காமல் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை, மாநில உரிமைகளை புறக்கணித்து வரும் நிலைகண்டு தமிழ்நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பான சூழல் ஏற்பட்டு வருகிறது.

நீட், கியூட் திணிப்பால்

மறுக்கப்படும் கல்வி உரிமை

12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று அடுத்ததாக இளநிலை பட்டப்படிப்பை மாணவர்கள் தொடரவேண்டும். மருத்துவக் கல்வி மட்டுமல்லாமல் அனைத்து பட்டப்படிப்புகளையும் தொடர விடாமல் அதற்கும்நீட்தேர்வு போல்கியூட்நுழைவுத் தேர்வை ஒன்றிய பாஜக அரசு திணிக்கிறது. புதிய கல்விக்கொள்கை என்கிற பெயரால் தமிழ்நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட குலக்கல்வியை மீண்டும் ஒன்றிய பாஜக அரசு திணிக்கிறது. கல்வி உரிமை பறிப்பு, மாநில உரிமைகள் பறிப்புகளில் ஒன்றிய பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது.

தமிழர் தலைவரின் பரப்புரைப் பெரும்பயணம்

இந்நிலையிலேயே திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நீட் தேர்வு எதிர்ப்பு- தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு- மாநில உரிமை மீட்புப் பரப்புரை பெரும்பயணத்தை நாகர்கோயிலில் 3.4.2022 அன்று தொடங்கி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில், மாவட்டத் தலைநகரங்களில் பரப்புரைப் பெரும்பயணம் மேற்கொண்டுள்ளார்.

பரமத்தி வேலூர்

நீட் தேர்வு எதிர்ப்பு- தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு- மாநில உரிமை மீட்புப் பரப்புரை பயணக் கூட்டம் நேற்று (20.4.2022) பரமத்தி வேலூர் அண்ணா காமராசர்  சிலை முன்பு பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் தலைவர் பொத்தனூர் .சண்முகம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வழக்குரைஞர் இளங்கோவன்  அனைவரையும் வரவேற்று பேசினார்.

மாவட்ட தலைவர் குமார், மாவட்ட செயலாளர் பெரியசாமி, பொதுக்குழு உறுப்பினர் நடராசன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் பழனியப்பன், மாவட்ட அமைப்பாளர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடக்கத்தில் கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார் செல்வன், கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் உரையாற்றிய பின் நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

தமிழர் தலைவர் உரை

இறுதியில் பேசிய தமிழர் தலைவர், பக்கத்தில் அமர்ந்திருந்த பொத்தனூர் . சண்முகம் அவர்களை சுட்டிக்காட்டி, ஜூலையில் 100 வயதைத் தொடக்கூடியவரும், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவருமான பொத்தனூர் . சண்முகம் அவர்களை வாழ்த்தினார்.

தந்தை பெரியாரைப் பற்றி பொத்தனூர் .சண்முகம், “யார் சொன்னாலும் நம்பாதே, நான் சொன்னாலும் நம்பாதேஎன்று சொன்னதைச் சொல்லிக்காட்டினார். தொடர்ந்து, ”100 ஆண்டு களுக்கு  முன்னால் மனுதர்ம ஆட்சி நடந்தது. அப்போது நமது நிலை என்ன? என்று கேள்வி கேட்டு, “துணி வெளுக்கிறவன் பிள்ளை துணி வெளுக்கணும்; கூட்டறவன் பிள்ளை கூட்டணும்; பார்ப்பான் மட்டும் படிக்கணும். இப்படித்தானே இருந்தது. இதை மாற்றியது யார்?” என்று கேள்வி கேட்டு இடைவெளிவிட்டு, “திராவிடர் இயக்கம் தானே?” என்று மற்றொரு கேள்வியையே பதிலாகச் சொன்னார்.

தொடர்ந்து, “பாண்டமங்கலத்திலே இருக்கிற கு.சண்முகம், அவருடைய பேரப்பிள்ளையை பார்த்தோம், மறைந்த ஆறுமுகம், ரமணி, அய்யா ராமநாதன் எல்லாவற்றையும் விட, இவர்களையெல்லாம் உருவாக்கிய, பொத்தனூர் சண்முகம் அவர்கள் நூற்றாண்டு காண இருக்கிறார் என்பதை எண்ணும் போது, நாங்கள் யானை பலம் பெறுகிறோம்என்று பலத்த கைதட்டல்களுக்கிடையே பரமத்தி வேலூரின் பழைய வரலாற்றைச் சொன்னார்.

மேலும் அவர், “அந்த கருப்புச்சட்டை செய்த தியாகத்தில தானே இந்த மாறுதல் வந்தது; அண்ணா வந்தார்; கலைஞர் வந்தார்; தளபதி வந்தார்; தலைமுறை தலைமுறையாக அதுதானே?” என்று மக்களை நோக்கி கேள்வி கேட்டார். மக்கள் கைதட்டலையே பதிலாகச் சொன்னார்கள். தொடர்ந்து, “மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் தகுதியாக வைக்கப்பட்டிருந்ததே அன்று. அதை மாற்றியதும் திராவிடர் இயக்கம்தானே? அன்று சமஸ்கிருதம் இன்று நீட், அவ் வளவுதானே?'' என்று பலத்த கைதட்டல்களுக்கிடையே திராவிடர் இயக்கத்தின் வரலாற்றை கோடிட்டுக் காட்டி எடுத்துரைத்தார்.

தொடர்ந்து, மாநில உரிமை மீட்பு குறித்து சொல்ல வந்தவர், “கல்வி மாநிலப் பட்டியலிலும் இருக்கிறது. ஒன்றிய அரசின் பட்டியலிலும் இருக்கிறது. இரண்டு பேரும் சட்டம் செய்யலாம்.அப்படி இருக்கும் போது, நமது இசைவு இல்லாமல் ஒன்றிய அரசினர் சட்டம் செய்திருக்கிறார்கள்என்று சொல்லிவிட்டு மக்களுக்கு புரிய வைக்கும் பொருட்டு, ”நம் வீட்டில் பக்கத்து வீட்டுக்காரர் கொஞ்சம் இடத்தை எடுத்துக் கொண்டால் நாம் ஆக்கிரமிப்பு என்றுதானே சொல்கிறோம். அதுபோலதான் நீட், புதிய தேசியக்கல்வி இரண்டும்.” என்று உதாரணம் சொல்லி பளிச்சென்று புரிய வைத்தார்.

''ஆகவே இது கட்சிப்பிரச்சினை இல்லை; மதப்பிரச்சினை இல்லை; ஜாதிப்பிரச்சினை இல்லை. உங்கள் பிள்ளைகளின் எதிர்கால பிரச்சனை. ஆகவே நீங்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்.” என்று சொன்னவர், வேலூர் பேரூராட்சி தலை வராக ஒரு பெண் இருப்பதை சொல்ல வந்தவர், “இந்தப் பயணத்தில் களைப்பு இருந்தாலும் உங்களை எல்லாம் பார்க்கும் போது உற்சாகமாக இருக்கிறது. மேலும் ஒரு போனஸ் மகிழ்ச்சி என்னவென்றால் 100 ஆண்டுகளுக்கு முன்னால் நாற்காலியில் அமர பெண்கள் அஞ்சுவார்கள். ஆனால், இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்கள் என்றால், இதுதான் திராவிடர் இயக்கத்தின் வெற்றி! இதுதான் பெரியாரின் வெற்றி! ஆகவே திராவிடம் வெல்லும்! அதை வரலாறு என்றைக்கும் சொல் லும்என்று பலத்த கைதட்டல்களுக்கிடையே உரையை நிறைவு செய்தார்.

பங்கேற்றோர்

இந்த பரப்புரை கூட்டத்தில் நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.கழக செயலாளர் மேனாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே.எஸ்.மூர்த்தி, காங்கிரசு கட்சி மாவட்ட தலைவர் வி.எஸ்.பரமசிவம், பரமத்தி வேலூர் பேரூராட்சி மன்றத் தலைவர் இலட்சுமி மூர்த்தி, பரமத்தி வேலூர் பேரூர் தி.மு.கழக செயலாளர் மணி() மாரப்பன், தி.மு..மேற்கு ஒன்றிய செயலாளர் சண்முகம், பரமத்தி பேரூராட்சி மன்றத் தலைவர் மணி, பொத்தனூர் பேரூராட்சி மன்றத் தலைவர் கருணாநிதி, தொ.மு..பொருளாளர் கண்ணதாசன், கரூர் மாவட்டத் தலைவர் குமாரசாமி, கரூர் மாவட்டச் செயலாளர் காளிமுத்து, குமாரபாளையம் நகரத் தலைவர் சரவணன், குமாரபாளையம் நகரச் செயலாளர் காமராஜ், மாவட்ட துணைச் செயலாளர் பொன்னுசாமி, பரமத்தி வேலூர் செயலாளர் சுரேசு உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணைத் தலைவர் அசேன் நன்றி கூறினார்.

பரமத்தி வேலூர் தோழர்களிடம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் விடைபெற்றுக்கொண்டு, தனது பரப்புரைப் படைகளுடன் சேலம் நோக்கிப் புறப்பட்டார்.

சேலத்தில் நடைபெற்ற பரப்புரைப் பொதுக்கூட்டம்

பரமத்தி வேலூர் பொதுக்கூட்டத்தைத் தொடர்ந்து சேலத்தில் பரப்புரைப்பொதுக்கூட்டம் நடைபெற்றது. நீட் தேர்வு எதிர்ப்பு- தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு- மாநில உரிமை மீட்பு பரப்புரை பெரும் பயணப்பொதுக் கூட்டம்  சேலத்தில் நேற்று (20.4.2022) கோட்டை மைதானத்தில் மாவட்ட தலைவர்கே.ஜவஹர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் .. இளவழகன் அனைவரையும் வரவேற்றார். பொதுக்குழு உறுப்பினர் பழனி.புள்ளையண்ணன் பரப்புரைப்பயணப்பொதுக்கூட்டத்தைத் தொடங்கி வைத்து பேசினார்.

மண்டல தலைவர் சிந்தாமணியூர் சுப்பிரமணியம், மண்டல செயலாளர் விடுதலை சந்திரன், மேட்டூர் கழக மாவட்ட தலைவர் கிருட்டிணமூர்த்தி, மேட்டூர் கழக மாவட்ட செயலாளர் கா.நா.பாலு, ஆத்தூர் கழக மாவட்ட தலைவர் .வானவில், ஆத்தூர் கழக மாவட்ட செயலாளர் நெ.சேகர், சேலம் மாநகர் தலைவர் இளவரசன், சேலம் மாநகர செயலாளர் பா.வைரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார் செல்வன், கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் உரையாற்றிய பின் நிறைவாக திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார்.

தமிழர் தலைவர் உரை

இறுதியில் தமிழர் தலைவர் பேசினார். அவர் தமதுரையில், ”சேலத்திற்கு வரும் போதெல்லாம் நாங்கள் என்றைக்கும் ஒரு புது உற்சாகத்தைப் பெறுகிறோம்.” என்று உற்சாகமாகத் தொடங்கினார். “தந்தை பெரியார் சேலத்தைப் பற்றிச் சொல்லும்போது, ‘இது எனது தாய் வீடுஎன்பதுபோல சொல்வார்கள்என்றும், “பெரியாரின் முதல் தளபதி பேரறிஞர் அண்ணா, சேலம் செயலாற்றும் காலம்என்று எழுதியதையும், கலைஞர் சேலத்தில் இங்கேதான் தன் நண்பர்களுடன் தங்கியிருந்ததையும் நினைவு கூர்ந்தார்.

நேர நெருக்கடி ஏற்பட்டதால் சேலம் நினைவுகளிலிருந்து மீண்டு விஷயத்திற்கு எண்ணினாலும், எல்லாவற்றையும்விட, 1971 இல் பெரியார் தலைமையில் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் நடந்ததையும், ராஜகோபாலாச்சாரியாரும், காம ராஜரும் இணைந்து தேர்தலை சந்தித்தையும், பெரியார் மீது செருப்பு வீசப்பட்டதையும், அதன் பிறகு தி.மு.. மிகப்பெரிய வெற்றி பெற்ற வரலாற்றையும் சொல்லி, இன்று சிலர் ஆளுநர் வண்டிக்கு பின்னால் வந்த வண்டி மீது கருப்புக்கொடி வீசப்பட்டதைச் சொல்லி, “இது அவர்களுக்குத்தான் பின்ன டைவைத் தரும்என்று பலத்த கைதட்டல்களுக்கிடையே கூறினார்.

ஏகலைவன்கள் காலம்

தொடர்ந்து, புராணக் கதையில் நமது கல்வி நிலைமை எப்படி இருந்தது என்பதை, ஏகலைவன் கதையைச் சொல்லி, துரோணாச்சாரியார் வலது கை கட்டை விரலை வெட்டிக் கொடுக்கச் சொன்னதையும், ஏகலைவன் வெட்டி கொடுத்த தையும் நினைவூட்டி, ”அதற்குப்பிறகு ஏகலைவன் வில்லை, தொடவில்லைஎன்று எதுகை மோனையுடன் சொல்லிவிட்டு, “இன்றைக்கு துரோணாச்சாரியார்கள் காலமல்ல, ஏகலை வன்கள் காலம். இன்றைக்கு கட்டை விரலைக்கேட்டால், கேட்டவனே காணாமல் போய்விடுவான்என்று சொன்னதும் கைதட்டல்கள் அடங்க வெகு நேரமாயிற்று. அதோடு விடவில்லை அவர், “காரணம் பெரியார்! காரணம் காமராஜர்! காரணம் அண்ணா! காரணம் கலைஞர்! காரணம் இன்றைய தளபதி! இதுதாங்க திராவிட மாடல்!” என்று மாபெரும் சாதனைகளை அதைச் செய்தவர்களின் பெயர்களை அடுக்கி, 100 ஆண்டுகால வரலாற்றை எடுத்து வைத்தார்.

தொடர்ந்து, துணை மேயர் சாரதா தேவியை சுட்டிக்காட்டி, “பெண்களுக்கு முதன்முதலில் வாக்குரிமை கொடுத்தது திராவிடர் இயக்கம்என்று சொன்னதும் மேடையில் இருப்பவர்களும் கைதட்டினர். ”நாகரிகத்தின் தொட்டில் என்று சொல்லக்கூடிய இங்கிலாந்திலேயே பின்னால்தான் வந்ததுஎன்று சொல்லி, முதலில் சொன்ன கருத்துக்கு மேலும் மெருகூட்டினார். “இப்படி கல்வியிலும், சுகாதாரத்திலும் வளர்ந்துள்ள தமிழ்நாட்டில்தான் நீட், புதிய தேசியக் கல்விக் கொள்கை வந்திருக்கிறது.” என்று வருகிற ஆபத்தை சுட்டிக்காட்டினார். மீண்டும் சேலத்தில் நடந்த, குலக்கல்வி எதிர்ப்பு ஊர்வலத்தை எடுத்துரைத்தார். தொடர்ந்து பயணத்தின் கடுமையை பலரும் சுட்டிக்காட்டிப் பேசியதை நினைவு கூர்ந்து, ''கொளுத்தும் வெப்பமா? கொட்டும் மழையா? அது முக்கியமல்ல தோழர்களே! டில்லி வெப்பம் இதைவிட அதிகமாக இருக்கிறதே. நமது பிள்ளைகளை பாதுகாக்க வேண்டாமா?” என்று கூறி, “ஆகவேதான் இந்த பரப்புரை. பெற்றோர்களே விழிப்புணர்வு பெறுங்கள்என்று சொல்லி உரையை நிறைவு செய்தார். பிறகு சேலம் மாவட்டப் பொறுப்பாளர்களின் வழிகாட்டலில் சேலத்திலேயே பாடி வீடமைத்தார்.

பங்கேற்றோர்

இந்த பரப்புரை கூட்டத்தில் சேலம் மத்திய மாவட்ட தி.மு.கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான இராஜேந்திரன், சேலம் மாநகர மேயர் இராமச்சந்திரன், மாநகர துணை மேயர் சாரதா தேவி மாணிக்கம், காங்கிரசு கட்சி மாவட்ட தலைவர் பாஸ்கர், வி.சி..மாவட்ட செயலாளர் ஜெயச்சந்திரன், .தி.மு..மத்திய மாவட்ட பொறுப்பாளர் ஆனந்தராசு, .தி.மு..கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கோபால் ராஜ், .தி.மு..மேற்கு மாவட்ட செயலாளர் மகேந் திரவர்மன்,  சி.பி.அய்.மாவட்ட செயலாளர் மோகன், சி.பி.எம்.மாவட்ட செயலாளர் சண்முகராஜா,

...பொறுப்பாளர்அலாவுதீன் பாஷா, .யூ.முஸ்லீம் லீக் மாவட்ட செயலாளர் அன்சர் பாஷா, ஆதித்தமிழர் பேரவை பேரவை மாவட்ட செயலாளர் சந்திரன், கழக அமைப்பு செயலாளர் ஊமை.ஜெயராமன், சேலம் மாநகர தி.மு.. செயலாளர் ஜெயக்குமார், சேலம் மாவட்ட பொரு ளாளர் சுபாஷ் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் மாவட்ட அமைப்பாளர் இராவணபூபதி நன்றி கூறினார்.


உன்னுடைய வெற்றி சிறந்த வெற்றி என்றார்; நான் மெய்சிலிர்த்துப் போனேன்!

எல்லோருக்கும் வணக்கம்.

கருத்துலகமே இங்கே இருக்கும் போது நான் கருத்து சொல்றதுக்கு வாய்ப்பு கம்மி. அய்யா அவர்கள் மேடையில் ஏறி வரும் போது, எங்கள் மாவட்டக் கழகச் செயலாளர் என்னை அறிமுகப்படுத்தினார். அவர் அறிமுகப்படுத்திய உடனே, ‘ராமச்சந்திரனாஅப்படின்னாரு. நான் என்னையே மறந்துட்டேன்.

அடுத்து நான் எங்க மாவட்டச் செயலாளர் அருகே உட்கார போனேன். ஆசிரியர் அவர்கள் கூப்பிட்டு பக்கத்தில் உட்கார வச்சாரு. எத்தனையோ முறை அவரை பார்த்திருந்தாலும், இப்ப எந்த உலகத்தில இருக்கேன்னு தெரியல. அடுத்தபடியா அவரு என்ன சொன்னாருன்னா? ''உன்னுடைய வெற்றி சிறந்த வெற்றிய்யா. நாங்களெல்லாம் ரொம்ப எதிர்பார்த்தோம்'' அப்படின்னு சொன்னாரு. அதைக் கேட்டவுடன், என் வாழ்நாள்ல எல்லாத்தையும் மறந்துட்டேன். அடுத்து சால்வை போட்டார். நான் குனிந்து வாங்கினேன். யோவ் நிமிர்ந்து நில்லுய்யான்னாரு.

வாழ்க்கையில கண்டிப்பா நான் நிமிர்ந்து தான் நிற்கப்போறேன். ரொம்ப சந்தோசமா ஏத்துகிறேன். இந்த சந்திப்பிற்கு ஏற்பாடு செய்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் முதலமைச்சர் அவர்களுக்கும், நகர்புற வளர்ச்சி அமைச்சருக்கும், எங்க மாவட்டக் கழகச் செயலாளருக்கும் நன்றியைக்கூறி விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்.

-சேலம் மேயர் . ராமச்சந்திரன்

 

 

தமிழர் தலைவரின்

சுற்றுப்பயணம் வெற்றி பெறும்

மருத்துவ மாணவர்களுக்கு நீட் தேர்வு எழுதுவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி .கே.ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட வல்லுநர் குழுவை, இந்தியாவின் நம்பர் ஒன் முதலமைச்சர் தளபதி அவர்கள் அமைத்தார்.

நீட் தேர்வு என்பது ஒரு மாணவர் படிப்படியாக எடுக்கும் மதிப்பெண்ணை கணக்கில் கொள்வதில்லை. நீட் தேர்வில் தேர்ச்சி என்பது கணிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. நீட் தேர்வு கற்றுக் கொடுப்பதற்கு மாறாக ஒரு குறிப்பிட்ட தேர்வு முறையை கற்றுக் கொடுக்கிறது. நீட் தேர்வு வந்த பிறகு மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்வது குறைந்திருக்கிறது. கிராமப்புறங்களில் படிக்கும் மாணவர்கள் கிராமப்புறங்களில் பணியாற்ற முன்வரு வார்கள். அதனால்தான் தமிழ்நாடு முதலமைச்சர், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் வழங்கி மிகப்பெரிய சாதனை புரிந்திருக்கிறார். நீட் தேர்வை எதிர்த்து, தி.மு.., காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் ஒன்றிய அரசை எதிர்த்து பல்வேறு வகைகளில் போராடி வருகின்றன. ஆனால், பா... அரசு கொஞ்சம் கூட செவி சாய்ப் பதில்லை. இந்த நீட் தேர்வினால் 21 மாணவ மாணவியர் உயிரிழந்திருக்கிறார்கள். அவர்களைப் பெற்ற தாய் தகப்பனுக்கு தான் தெரியும் அந்தக் குழந்தையினுடைய பிறப்பு, இறப்பு. ஆகவே இதுபோன்ற தற்கொலைகள் இனிமேல் நடக்கக்கூடாது என்பதற்காக இந்த 33 ஆவது பொதுக்கூட்டத்திற்கு ஆசிரியர் அவர்கள் வந்திருக் கிறார்கள். அவருடைய போராட்டம் வெற்றி பெறட்டும். நன்றி வணக்கம்.

-சேலம் துணை மேயர் சாரதாதேவி


No comments:

Post a Comment