தந்தை பெரியாரைப்போலவே ஆசிரியர் அய்யா அவர்கள் நம்முடைய இனத்திற்காக, மொழிக்காக ஓயாது உழைத்துக் கொண்டிருக்கிறார்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 21, 2022

தந்தை பெரியாரைப்போலவே ஆசிரியர் அய்யா அவர்கள் நம்முடைய இனத்திற்காக, மொழிக்காக ஓயாது உழைத்துக் கொண்டிருக்கிறார்!

தந்தை பெரியார் அவர்கள் இந்த மண்ணிலே பிறந் திருக்காவிட்டால், தமிழன் சூடு சொரணை அற்றவனாக இருந்து, இந்த தமிழ் அழிந்திருக்கும். இனம் அழிந்திருக்கும். தந்தை பெரியார் அவர்கள் 1944 ஆம் ஆண்டு, நீதிக்கட்சியை, சுயமரியாதை இயக்கத்தை திராவிடர் கழகம் என்று மாற்றிய முயற்சி, அண்ணா கொண்டு வந்த அண்ணா என்கின்ற தீர்மானம். அதனையொட்டி 75 ஆண்டுகளுக்குப் பிறகு, இதே இடத்திலே திராவிடர் கழகத்தின் பவளவிழா நிகச்சியை நடத்தியிருக்கிறார்கள்.

இன்றைக்கு இந்த நீட் எதிர்ப்பு, புதிய தேசிய கல்வி எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு என்ற முழக்கத்தோடு நம்முடைய தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள், தந்தை பெரியார் அவர்கள் எந்த உணர்வோடு, உத்வேகத் தோடு தமிழ்நாட்டில் தன் வாழ்நாள் வரை சுற்றி, சுற்றி வந்து உழைத்தார்களோ; பெரியாரைப் போலவே ஆசிரியர் அய்யா அவர்கள் இன்றைக்கு இந்த இனத்திற்காக, மொழிக்காக ஓயாது உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கு ஆசிரியர் அய்யா அவர்கள் வருகிறார்; 20 ஆம் தேதி சேலத்திலே பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது என்று நம்முடைய கழகத் தலைவர் போற்றுதலுக்குரிய மாண்புமிகு முதல மைச்சர் அவர்களிடமும், அதேபோல் நம்முடைய மாவட் டத்தினுடைய பொறுப்பு அமைச்சராக இருக்கக்கூடிய, கழகத்தின் முதன்மைச் செயலாளர் அண்ணன் நேரு அவர்களிடமும் சொல்லி, அண்ணன் நேரு அவர்கள் இங்கே வருவதாக இருந்தார்கள்.

சென்னையில் தவிர்க்க இயலாத ஒரு நிகழ்ச்சியின் காரணமாக அவர் வர இயலாத சூழ்நிலையில், ஆசிரியர் அய்யா அவர்களிடத்திலே நான் ராஜேந்திரனை அனுப்புகிறேன். என்னால் வர இயலவில்லை. மன்னித்துக் கொள்ளுங்கள் என்று ஆசிரியரிடத்தில் கேட்டுக்கொண் டார்கள். அந்த அடிப்படையில் அய்யா அவர்கள் நம் மாநகருக்கு வருகை தந் திருக்கிறார்கள்.

நம்முடைய மாநகர் மக்கள் சார்பாக ஆசிரியர் அய்யா அவர்களை வருக, வருகவென வரவேற்று, ஒரே யொரு கருத்தைச் சொல்கி றேன். அய்யா அரிய கருத்து களையெல்லாம் சொல்ல இருக்கிறார்கள். வட இந்திய மாநிலங்களையும், தமிழகத்தையும் நீங்கள் ஒப்பிட்டுப் பாருங்கள். வட இந்தியாவில் மதக்கலவரங்கள், ஜாதிக் கலவரங்கள் தலைவிரித்தாடுகின்றன. பாரதிய ஜனதாக் கட்சி இதற்கு தூபமிட்டு, பாசிசப் போக்கோடு நடந்து வரு கிறது. ஆனால், தமிழகத்திலே மதநல்லிணக்கத்தில் இருந்து வருகிறோம். இங்கு தமிழுணர்வோடு இருக்கிறோம், மொழி உணர்வோடு, இன உணர்வோடு இருக்கிறோம். அதற்குக் காரணம் தந்தை பெரியார், அதற்குக் காரணம் பேரறிஞர் அண்ணா, அதற்குக் காரணம் கலைஞர், அதற்குக் காரணம் ஆசிரியர் அய்யா அவர்கள், நம்முடைய முதலமைச்சர் அவர்கள்.

பத்திரிகைகளிலே நீங்கள் பார்க்கலாம். வட இந்தியாவில் ஒரு கோரத்தாண்டவம் ஆடுகின்ற சூழலை உருவாக்கி கொண்டிருக்கிறார்கள். இது பெரியார் பண்படுத்திய மண்; இந்த மண்ணிலே பாரதிய ஜனதா கட்சியின் தகிடுதத்தங்கள் எடுபடாது. இங்கே அனைத்து மதத்தினரும், அனைத்து ஜாதியினரும் அண்ணன் தம்பிகளாக சகோதர, சகோதரி களாக நாம் இருக்கிறோம் என்ற உணர்வை உருவாக்கிய நம்முடைய தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து, நம்முடைய ஆசிரியர் அய்யா அவர்களின் உரையைக் கேட்க நானும் ஆவலோடு இருக்கிறேன் என்று தெரிவித்து, எனது உரையை நிறைவு செய்கிறேன்.  நன்றி, வணக்கம்!

- சட்டமன்ற உறுப்பினர் இரா.ராஜேந்திரன்

No comments:

Post a Comment