தமிழர் தலைவர் மேற்கொண்ட 21 நாள்கள் பரப்புரைப் பயணம் நமக்காகவும் நம் குழந்தை களுக்காகவும் நம் பேரக்குழந்தைகளுக்காகவும் நம் திராவிட வாரிசு களுக்காவும் தான்.
இரண்டாயிரம் ஆண்டுகளாக இழந்திருந்த கல்வி உரிமையை மீட்டெடுத்துக் கொடுத்த நீதி கட்சி தலைவர்கள் வழி கடைப்பிடித்து பெரியார் வகுத்த பகுத்தறிவு பாதையில் நம்மை நடத்தி செல்லுகிற ஆசிரியர் அவர்களுக்கும், அவருக்கு வலது கரமாக உதவி வரும் கருஞ்சட்டை தோழர் களுக்கும் மனமார்ந்த நன்றி. இணைய தளத்தில் கல்வி உரிமை பிரச்சாரத்தை கேட்டு வருகிறேன்.
அமெரிக்காவில் இருந்தாலும் எங்கள் மனமெல்லாம் தமிழ் நாட்டில் தான். மார்ட்டின் லூதர்கிங் கருப்பின மக்கள் உரிமைக்காக பாடு பட்டார். அம்மக்கள் தொடர்ந்து பாடுபட்டு தங்கள் உரிமைகளை காத்து வருகிறார்கள். நம் மக்களும் விழிப்புணர்வுடன் ஆசிரியர் அய்யா விற்கு உறுதுணையாக இருக்கவேண்டும். நீட் செய்ய போகும் கொடுமைகளை முதல் முதலாக மக்களுக்கு எடுத்துச்சொல்லியவர் ஆசிரியர் அய்யா தான். அப்பொழுது செவிமடுத்து கேட் காதவர்களுக்கு 22 குழந்தைகளை பலி கொடுத்த பிறகு தான் உணர்வு வந்திருக்கிறது.
இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஆசிரியர் தன் 90ஆவது வயதிலும் தன்நலம் பாராது மக்கள் எதிர்காலத்துக்கு உழைக்கிறார். அவருக்கும் மற்றும் அவருடன் உழைக்கும் அனைத்துக் கட்சி தோழர்களுக்கும் நன்றி பாராட்டி வாழ்த்துவோம். நீட் ஒழிய முதலமைச்சர் மானமிகு ஸ்டாலினுடன் சேர்ந்து பாடுபடுவோம். வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!
சரோ இளங்கோவன்
அமெரிக்கா
- - - - -
இல்லம் தோறும் "விடுதலை" உள்ளம் தவழும்" விடுதலை"
'நீட் 'எதிர்ப்பு பரப்புரை பயணத்தின் போது மானமிகு ஆசிரியர் அவர்களை நேரில் சந்தித்து "விடுதலை" சந்தா வழங்கி மகிழ்ந்தேன். இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருந்தது இந்நிகழ்வு, ஆசிரியர் அவர்களை சந்தித்தது, "விடுதலை" சந்தா என இரண்டுஅளவற்ற மகிழ்ச்சி. எங்கள் இல்லத்தின் வழியாக கரங்களுக்குத் தவழ்ந்து தற்போது "விடுதலை" பெருமை சேர்க்கிறது.
"விடுதலை" நாளிதழை தோழர்கள் ஓசியில் படிக்காமல், காசு கொடுத்து வாங்கி படிக்க வேண்டும். அனைவரும் சந்தாதாரர் ஆகவேண்டும் என திருமங்கலம் வட்டம் திராவிடர் கழக செயலாளர் மு. சுந்தரராசன் ( எனது தந்தை)அவர்கள் 22.6.1980 அன்று கழகக் கூட்டத்தில் தீர் மானம் நிறைவேற்றினார். இத னைப் பாராட்டி மதுரை திராவிடர் கழகத் தோழர்களால் " விடுதலை சுந்தரராசன் " என போற்றி இன்று வரை அழைக்கின்றனர். இப்படி "விடுதலை"க்கு பெருமை தந்த எங்கள் குடும்பத்திற்கு அன்று முதல் தொடர்ந்து " விடுதலை" எங்களுக்கு பெருமை தருகிறது.
மனிதன் பகுத்தறிவு பெற்று, சுயமரியாதை யோடு திகழ்ந்து, சமூக நீதியோடு சமத்துவமாக வாழ, ஜாதி ஒழிப்பு,மூடப் பழக்கம், பெண்ணடிமை ஒழிக்க நித்தமும் களம் காணும் "விடுதலை" நாளிதழுக்கு அனைவரும் சந்தாதாரர் ஆக வேண்டும். 'விடுதலை' யால் நமக்குத் தான் பெருமை. உரிமையோடு கடமையாக தமிழ் நாட்டின் அனைத்து இல்லங்களிலும் " விடுதலை "தவழட்டும் - மடமை, அறியாமையை" விடுதலை" யால் தான் போக்கமுடியும்.
அய்யா அவர்களின் கொள்கை என்றும் சிகரத்தில் இருக்க கரம் கோர்ப்போம் மானமிகு ஆசிரியர் அவர்களோடு இணைந்து உறுதி கொள்வோம். "விடுதலை " நாளிதழ் இல்லங்களில் தவழட்டும், உள்ளங்களில் மகிழ்ச்சி பெருகட்டும்.
திராவிடர் இல்லங்களில் "விடுதலை" என்பதே இனத்தின் அடையாளம் என்று தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்க ளின் கூற்றை மேலும்மெய்ப்பிப் போம்.
குறிப்பு: 26.6.1980 அன்று, "விடுதலை" நாளிதழில் திரு மங்கலம் திராவிடர் கழக உறுப்பினர்கள் காசு கொடுத்து "விடுதலை" படிக்க வேண்டும் என்று வந்த செய்தி.
மு. சு. அன்புமணி,
மதுரை.

No comments:
Post a Comment