இப்படியும் ஒரு நிகழ்ச்சி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 23, 2022

இப்படியும் ஒரு நிகழ்ச்சி!


கருநாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு பா.ஜ.க .பிரமுகர் வீட்டின் வரவேற்பறையில் மோடி படத்தையும் அமித்ஷா படத்தையும் மாட்டி வைத்துள்ளனர். 

 இதனை ஏற்றுக் கொள்ளாத அவரது 18 வயது கல்லூரி படிக்கும் மகள் நாட்டை நாசப்படுத்தியவரின் போட்டோக்கள் என் வீட்டில் இருக்க அனுமதிக்க மாட்டேன். எனக்கு 18 வயது ஆகிவிட்டது, 

 எனக்கும் இந்த வீட்டில் என்ன இருக்க வேண்டும், இருக்கக் கூடாது என்று கேள்வி கேட்கும் உரிமை உள்ளது, என்று கூறி தனது தாயின் எதிர்ப்பையும் மீறி வரவேற்பறையில் இருந்த மோடி படம் மற்றும் பா.ஜ.க .தாமரைச் சின்னம் கொண்ட சுவரொட்டியை கிழித்து வீசிவிட்டார். 

 மகளின் செயலைக் கண்டு அவரது தந்தை செய்வதறியாது திகைத்து நிற்கிறார்,


No comments:

Post a Comment