காரைக்குடி,ஏப்.19- புதுக் கோட்டை மாவட்டம் கல்லூர் சுதந்திரபுரத்தை சேர்ந்தவர் புவனேசுவரி. இந்த பகுதி சிவ கங்கை, புதுக்கோட்டை மாவட் டங்களின் எல்லைப்பகுதியில் உள்ளது. கூலித் தொழிலாளி யான புவனேசுவரியின் மகள் சுகன்யா (வயது 28). இவர் வயதுக்கேற்ற வளர்ச்சி இல்லாத வராகவும், சரிவர பேச முடியாத வராகவும் இருந்துள்ளார். இந் நிலையில் சுகன்யா சித்திரை முழு நிலவன்று அருகில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட்டு விட்டு வருவதாக கூறி சென் றுள்ளார். அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.
சிவகங்கை மாவட்டம் சாக் கோட்டை காவல்நிலையத்தில் அவரது குடும்பத்தினர் புகார் செய்தனர். அதற்கு சாக்கோட்டை காவல்துறையினர் அந்த பகுதி புதுக்கோட்டை மாவட்டம் புதுப்பட்டி காவல் நிலைய எல்லைக்குள் வரும் எனவே அங்கு சென்று புகார் செய்யுங்கள் என்று கூறி உள்ளனர். ஆனால் புதுப்பட்டி காவல்துறையினரோ அந்த பகுதி சாக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குள் வரும் எனவே அங்கு சென்று புகார் அளியுங்கள் என்று கூறினர்.
காவல்துறையின் சரக எல் லைப் பிரச்சினையால் அலைக் கழிக்கப்பட்ட நிலையில் சுகன் யாவின் உறவினர்கள் தாங் களாகவே இரவு பகலாக தேடி உள்ளனர். அப்போது கோவி லுக்கு செல்லும் வழியில் உள்ள வேலியில் சுகன்யா கொண்டு சென்ற பை கிடந்தது தெரிய வந்தது.
இதனால் பதற்றம் அடைந்த அவர்கள் அந்த பகுதியில் மேலும் தேடியபோது சுகன்யா அணிந்து இருந்த செருப்பு ஒரு இடத்திலும், சற்று தூரத்தில் மற்றொரு செருப்பும் கிடந்தது. உடனே அந்த பகுதியில் மீண்டும் நன்றாக தேடியபோது அருகில் முந்திரி காட்டில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்துள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சுகன்யாவின் உறவி னர்கள் மற்றும் கிராம மக்கள், 2 காவல் நிலையங்களிலும் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. எடுத்திருந்தால் சுகன்யா கொலை செய்யப்பட்டிருக்க மாட்டார் என்ற ஆத்திரத்தில் புதுவயல்-கல்லூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணிநேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேருந்துகள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன. உடனடி யாக நிகழ்விடத்திற்கு சிவகங்கை மாவட்ட காவல்துறை கண் காணிப்பாளர் செந்தில்குமார், துணை காவல்துறை கண்காணிப் பாளர் வினோஜி, சாக்கோட்டை காவல்துறையினர் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர் களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து கிராம மக்கள் சாலை மறியலை கை விட்டனர்.
பின்னர் சுகன்யாவின் உடல் உடற் கூராய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத் துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டது. இதுகுறித்து சாக் கோட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து நிகழ்வு இடத்தில் கிடைத்த தடயங்களை காவல்துறையினர் ஆய்வு செய் தனர்.
கோவிலுக்கு சென்ற சுகன் யாவை வழியில் சிலர் கடத்தி சென்று முந்திரி காட்டில் வைத்து கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது. அவரை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர் என தனிப் படை காவல்துறையினர் விசா ரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment