காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் மோதல்
காஞ்சிபுரம்,ஏப்.19- காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் நீண்ட காலமாக இருந்துவருகின்ற வைணவத்திலேயே இருபிரிவாக உள்ள வடகலை மற்றும் தென் கலை சர்ச்சையால் இருதரப்பிரினடையே மோதல் ஏற்பட்டது.
காஞ்சிபுரம் வரதராஜ பெரு மாள் சித்திரை முழுநிலவை யொட்டி பாலாற்றங்கரையில் அருகிலுள்ள அய்யங்கார் குளம் கிராமத்தில், கரோனா கட்டுப் பாடுகள் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக ‘நடவாவி கிணறு உற்சவம்’ நடைபெறாமல் இருந் தது. தற்பொழுது இயல்பு நிலை திரும்பி கட்டுப்பாடுகள் தளர் வடைந்ததை தொடர்ந்து, நட வாவி உற்சவம் நடைபெற்றது.
17.4.2022 அன்று நடவாவி கிணறு உற்சவத்தையொட்டி காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலிலிருந்து ஓரிக்கை, செவிலிமேடு, புஞ்சை அரசந்தாங்கள், தூசி,கிராமங்கள் வழியாக அய் யங்கார் குளம் சஞ்சீவிராயர் கோவிலுக்கு கடவுளர் சிலை எடுத்துச்செல்லப்பட்டது. பாலாற்றங்கரையில் வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் பிரபந்தம் பாடுவதில் முன்னேறிய பொழுது இரு பிரிவினரும் தீவிர வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட இரு பிரிவினருக்கும் சண்டை முற்றி கைகலப்பு ஏற்பட் டுள்ளது.
2 ஆண்டுகள் கழித்து பாலாற் றில் வரதர் இறங்கும் நிகழ்வை காண வந்த பொது மக்களிடையே முகச்சுளிப்பை ஏற்படுத்தியுள் ளது.
உற்சவத்தின் போது தோத் திரம் பாட தென்கலை பிரிவின ருக்கும் உச்சநீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் ஆணை பிறப்பித் துள்ளன. நீதிமன்ற உத்தரவை மீறி சில வடகலை பிரிவினர் சண்டை போடுகின்றனர் என கூறப்படுகிறது. இதனை இத் திருக்கோவில் மணியக்காரர் பார்த்துக்கொண்டு, ஏதும் பேசா மல் வடகலை பிரிவினர்களுக்கு சாதகமாகவே பேசுகிறார் என் றும், நீதிமன்ற உத்தரவை மீறி நடக்கின்றார் என்றும் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment