கள்ளக்குறிச்சி மாவட்டம் - சங்கராபுரம் பகுதி, டி.குளத்தூரில் நீண்ட கால முதுபெரும் பெரியார் பெருந் தொண் டரும், ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியருமான பகுத்தறிவாளர் கழகச் செம்மல் தோழர் கலைச்செழியன் (வயது 82) நேற்று (18.4.2022) இரவு 7 மணியளவில் காலமானார் என்பதை அறிந்து மிகுந்த துயரமடைந்தோம்.
சிறிது காலம் உடல் நலக் குறைவுடன் இருந்தார். கழக நிகழ்ச்சிகளை ஏராளம் நடத்தியவர். அவரது இல்ல நிகழ்ச்சிகள் பலவற்றில் நான் கலந்து கொண்டிருக்கிறேன்.
இறுதி வரை கட்டுப்பாடு காத்த கொள்கை வீரர். நமது முந்தைய பொருளாளர் கோ. சாமிதுரை மூலம்தான் அவரை அறிந்தேன்.
அவரது மறைவு அவர் குடும்பத்திற்கு மட்டு மல்ல; இயக்கத்திற்கும் பெருத்த இழப்பு ஆகும்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத் தினருக்கும், கழகத்தினருக்கும் நமது ஆறுத லையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவருக்கு நமது வீர வணக்கம்.

No comments:
Post a Comment