உக்ரைன்-ரஷ்யா போரை நிறுத்த அய்.நா.தொடர்ந்து முயற்சி துணைப் பொதுச் செயலாளர் மாஸ்கோ செல்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 3, 2022

உக்ரைன்-ரஷ்யா போரை நிறுத்த அய்.நா.தொடர்ந்து முயற்சி துணைப் பொதுச் செயலாளர் மாஸ்கோ செல்கிறார்

நியூயார்க், ஏப். 3- உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் அய்.நா.பொதுச் சபை தொடர்ந்து ஈடுபட்டு வரு கிறது.

இந்நிலையில், உக்ரைன் நிலைமை குறித்து விவாதிக்க அய்.நா. உயர் அதிகாரி மாஸ்கோ செல்ல உள்ளதாக அய்.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

அய்.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான துணைப் பொதுச்செயலாளர் மார்ட்டின் கிரிபித்ஸ் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிற்கு சென்று பின்னர் உக்ரைன் தலைநகர் கீவ்விற்கு செல்ல உள்ளதாக அவர் குறிப் பிட்டுள்ளார்.

அவரை சந்திக்க இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளதாக குட்ட ரெஸ் கூறினார்.

ஏமன், உக்ரைன் என உலகில் எல்லா இடங்களிலும் சண்டையை நிறுத்தும் நடவடிக்கையை நாங் கள் கைவிடவில்லை என்பதை இந்த பயணம் எடுத்துக் காட்டுவதாக குட்டரெஸ் தெரிவித்தார்.

No comments:

Post a Comment