ஜோகன்னஸ்பர்க், ஏப். 3- தென் ஆப்பி ரிக்காவில் 37 லட்சத்து 30 ஆயிரத்து 645 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா வால் இதுவரை ஒரு லட்சத்து 42 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக தென் ஆப்பிரிக்கா தொற்று நோய் களுக்கான தேசிய நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நாட்டில் உள்ள அனைவரும் கட்டாயமாக கரோனா தடுப்பூசி போட வேண் டும் என்ற கொள்கையை அமல் படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என தென் ஆப்பிரிக்க நாடாளுமன் றத்தில் அந்நாட்டு துணை அதிபர் டேவிட் மபுசா தெரிவித்துள்ளார்.
நாங்கள் செய்யக்கூடியது, எங் கள் மக்களிடம் சென்று தடுப்பூசி போடுமாறு ஊக்குவிப்பதுதான் என அவர் கூறியுள்ளார். அடுத்த மாதம் தென் ஆப்பிரிக்காவில் கரோனா பரவலின் அய்ந்தாவது அலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இது குறித்து பேசிய டேவிட் மபுசா, அய்ந்தாவது அலையின் வீரியம் முந்தைய நிலைகளை விட குறைவாகவே இருக்கும் என்று சில விஞ்ஞானிகள் கருத்து தெரிவித் துள்ளதாக கூறினார்.
தென் ஆப்பிரிக்க மக்களிடம் கரோனா நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடை முறையில் உள்ள மிக கடுமையான கரோனா கட்டுப்பாடுகளை தளர்த் தவும் அரசு திட்டமிட்டுள்ளதாக வும் அவர் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment