சிதம்பரம், ஏப். 23- நீட் தேர்வு எதிர்ப்பு - புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு - தமிழ்நாடு உரிமை மீட்புப் பிரச்சாரப் பயண விளக்க தெருமுனை கூட்டம் 9.4.2022 அன்று மாலை 6 மணிக்கு சிதம் பரம் காந்தி சிலை அரு கில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் அன்பு.சித்தார்த்தன் தலைமையேற்றார். பெரியார் படிப்பக துணைத் தலைவர் ஆறு. கலைச்செல்வன், மேனாள் ப.க. மாநில துணைத் தலைவர் பேராசிரியர் முனைவர் இரா.திருமா வளவன், மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் ஆகி யோர் உரையாற்றினர்.
பின்னர் இறுதியாக கழகப் பேச்சாளர் மாவட்ட இணைச் செயாளர் யாழ்.திலீபன், பிரச்சாரப் பயண நோக்கங்களை விளக்கி யும், தமிழர் தலைவர் ஆசிரியர் தன் 90ஆவது வயதிலும் பிரச்சாரப் பய ணம் மேற்கொண்டு தொண் டாற்று வதை விளக் கியும் உரையாற்றினார். நிகழ்ச் சியில் நகரத் தலைவர் கோபி. குணசேகரன், தோழர் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment