பெரியார் மணியம்மை தொழில்நுட்ப நிறுவனத்தில் கணினி மென்பொருள் நுணுக்கங்கள் குறித்த வேலைவாய்ப்பு கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 22, 2022

பெரியார் மணியம்மை தொழில்நுட்ப நிறுவனத்தில் கணினி மென்பொருள் நுணுக்கங்கள் குறித்த வேலைவாய்ப்பு கருத்தரங்கம்

தஞ்சை, ஏப். 22- பெரியார் மணியம்மை தொழில்நுட்ப நிறுவனத்தின் கணினி அறிவியல் பயன்பாட்டு துறை மற்றும் மென்பொருள் பொறியியல் துறை சார்பாக கணினி மென்பொருள் துறையின் வேலை வாய்ப்புகள் எனும் தலைப் பில் ஒரு நாள் கருத்தரங்கம் 19 ஏப்ரல் 2022 அன்று பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் கணினி மென்பொருள் துறையில் இருக்கும் பல்வேறு வேலைவாய்ப்பு கூறுகள் மற்றும் அவை சார்ந்த மற்ற வாய்ப் புகள் பற்றி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் எஸ்.வேலுசாமி அவர் கள் தனது தலைமை உரையில் எடுத்துக் கூறினார்

இந்நிகழ்வில் பிராக் ரோபோட் டிக்ஸ் மய்யத்தின் இயக்குநர்கள் சேதுராமன் கிருஷ்ணமூர்த்தி மற் றும் பாலாஜி அரிநாதன் அவர்க ளும் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார்கள். இக் கருத்தரங்கம் கணினி பயன்பாடு மற்றும் மென் பொருள் துறையில் மாணவர்கள் எவ்வாறு நுணுக்கங்களை கற் றுக்கொண்டு இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் சவால்களை எதிர் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும் எடுத்துக் கூறினார்கள்.

மேலும் தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் துணை இயக்குனர் ரமேஷ் குமார் அவர்கள் தனது உரையில் கல்வித் திறன்களோடு செயற்கை நுண்ண றிவுடன் ரோபோட்டிக்ஸ், டேட்டா சயின்ஸ் மற்றும் பிளாக்செயின் நுணுக்கங்கள் எவ்வாறு இன்றைய நவீன உலகம் இயக்க இருக்கிறது என்பதை பற்றியும் அவை சார்ந்த வேலை வாய்ப்புகள் குறித்தும் தனது உரையில் பகிர்ந்து கொண்டார்.

இந்நிகழ்வில் இறுதியாக பிராக் ரோபோட்டிக்ஸ், கிராஸ் அகடமி மற்றும் என் எஸ் டி சி சார்பாக நடத்தப்பட்ட டேட்டா அனலிட் டிக்ஸ் மற்றும் பைத்தான் என்னும் தொழில் சார்ந்த கல்வியை சிறப்பாக நிறைவு செய்த மாணவ மாணவிகளுக்கு பாராட்டுச் சான் றிதழ் மற்றும் பயிற்சியில் முன் னிலை பெற்றவர்களுக்கு கணினி மென்பொருள் துறைகளில் வேலை வாய்ப்பு சான்றிதழ்களும் வழங் கப்பட்டது.

மேலும் இந்த கரோனா பெரும் தொற்று காலகட்டத்திற்கு பிறகு கல்வி நிறுவனங்களில் மற்றும் உயர் கல்வியில் மிக மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது என் றும் பெரியார் மணியம்மை நிகர் நிலை பல்கலைக்கழகத்தில் வரும் 2022-20-23ஆம் கல்வி ஆண்டில் இருந்து ஆர்டிபிசியல் இன்டல்லை ஜன்ஸ், மற்றும் ரோபோ சார்ந்த படிப்புகள் அறி முகப்படுத்தப்படும் என்பதையும் தெரிவிக்கப்பட்டது. சேதுராமன் கிருஷ்ணமூர்த்தி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இத் துறைகளில் வரவிருக்கும் கல்வி வாய்ப்புகள் மற்றும் பட்ட படிப் போடு சேர்த்து படிக் கும் வாய்ப் புகள் பற்றி எடுத்துக் கூறினார்.

No comments:

Post a Comment