தமிழர் தலைவரின் பெரும் பயணத்தை விளக்கி வடசென்னையில் கழக தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 22, 2022

தமிழர் தலைவரின் பெரும் பயணத்தை விளக்கி வடசென்னையில் கழக தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள்

எண்ணூர், ஏப். 22- நீட் தேர்வு எதிர்ப்பு - புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு - தமிழக உரிமை மீட்புப் பரப்புரை மேற்கொண் டுள்ள தமிழர் தலைவர் கழகத் தலைவரின் பெரும் பயண மாட்சியை விளக்கி வடசென்னை மாவட் டம் எண்ணூர், திரு வொற்றியூர் பகுதிகளில் கழக தெருமுனைப் பிரச் சாரக் கூட்டங்கள் சிறப் பாக நடைபெற்றன.

எண்ணூர்

14.4.2022 அன்று மாலை 6 மணிக்கு எண் ணூர் கடைவீதியில் நடை பெற்ற கழக தெருமுனைப் பிரச்சாரக் கூட்டத்திற்கு திராவிட மாணவர் கழ கத் தோழர் இரா.எழில் மதி தலைமை வகித்தார். எண்ணூர் பகுதி தலைவர் மு.மணி காளியப்பன், செயலாளர் பொ.இரா மச்சந்திரன் முன்னிலை வகித்தனர். வி.மணியம் மாள் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

மாநில அமைப்புச் செயலாளர் வி.பன்னீர் செல்வம், சென்னை மண் டல செயலாளர் தே.செ.கோபால், மாமன்ற உறுப்பினர்கள் மு.சிவக் குமார், .கோமதி சந் தோஷ்குமார், மாவட்ட தலைவர் வெ.மு.மோகன், செயலாளர் தி.செ.கணே சன், விடுதலை சிறுத்தை கள் கட்சி மாவட்ட செய லாளர் இரா.பு. அன்புச் செழியன், .மு.மு.. மாவட்ட தலைவர் எஸ். முகமது உசேன் அலி ஆகி யோர் உரையாற்றினர்.

நிறைவாக மாநில மகளிர் பாசறை அமைப் பாளர் சே.மெ.மதிவதனி சிறப்புரையாற்றினார்.

அண்ணல் அம்பேத் கர் பிறந்த நாள் முன் னிட்டு - அண்ணலின் படம் அலங்கரித்து வைக் கப்பட்டு, மாலை அணி விக்கப்பட்டு இருந்தது.

எண்ணூர் பகுதி கழ கம் ஏற்பாடு செய்திருந்த இக் கூட்டத்தின் நிறை வாக பகுதி துணை செய லாளர் டேவிட் அந் தோணி நன்றி கூறினார்.

திருவொற்றியூர்

15.4.2022 அன்று மாலை 6 மணியளவில், திருவொற்றியூர் சாத் துமா நகர் டோல்கேட் அருகில் நடைபெற்ற தமி ழர் தலைவர் பரப்புரை பயண விளக்க தெரு முனைப் பிரச்சாரக் கூட் டத்திற்கு பகுதி தலைவர் பெரு.இளங்கோ தலைமை வகித்தார். மேனாள் மாவட்ட செய லாளர்கள் தே.ஒளிவண் ணன், பா.பாலு முன் னிலை வகித்தனர். பகுதி செயலாளர் .இராசேந் திரன் அனைவரையும் வர வேற்று உரையாற்றினார்.

இக்கூட்டத்தில் மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் சே.மெ.மதிவதனி, தி.மு.. பேச் சாளர் வாசு.கருணாநிதி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

மாநில அமைப்புச் செயலாளர் வி.பன்னீர் செல்வம், மண்டல செய லாளர் தே.செ.கோபால், மாமன்ற உறுப்பினர் இரா.சுசீலா, தி.மு.. வட் டச் செயலாளர் சு.வீ.சதீஷ் குமார், மாவட்ட பிரதிநிதி பி.எஸ்.சைலஸ், வட சென்னை மாவட்ட தலைவர் வெ.மு.மோகன், செயலாளர் தி.செ.கணே சன் ஆகியோர் உரை யாற்றினர்.

தொழிலாளர் அணி பெ.செல்வராசு, வட சென்னை மாவட்ட துணைத் தலைவர் கி. இராமலிங்கம், இளைஞ ரணித் தலைவர் தளபதி பாண்டியன், செயலாளர் இரா.தமிழ்மாறன், மேனாள் மாவட்ட தலை வர் தி.வே.சு.திருவள்ளு வன், பெரியார் படிப்பகம் கோ.நாராயணமூர்த்தி, பெரியார் பாசறை செந் தில், ஜெயசந்திரன், தி.நா.கண்ணன, புது வண்ணை சு.செல்வம், .மணிவண்ணன், .கவு தமன், திலீபன், .துரை ராவணன், மா.சேகர், தே.சங்கர், சே.தமிழரசி, மா.விஜயராகவன், மாணிக்கம், வே.இராமச் சந்திரன், .மனோகரன், இர.சரவணன், அரவிந்த் வாசுதேவன், ஆனந்த், மதன், சே.மில்லர், சே.முரசு, .சிவரஞ்சனி, சுரேஷ் குமார், சிவா உள்ளிட்ட கழகத் தோழர்களும், பொதுமக் களும் இக்கூட் டங்களில் கலந்து கொண்டனர். திருவொற்றியூர் பகுதி கழகம் ஏற்பாடு செய்தி ருந்த இக்கூட்டத்தின் நிறைவாக .சக்தி வேல் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment