பாணன்
சில நாட்களுக்கு முன்பு பார்ப்பனர்கள் ஒன் றிய அரசின் அனைத்து துறைகளிலும் எத்தனை விழுக்காடு இருக்கிறார்கள் என்பதை நாம் படித் திருந்தோம். புள்ளிவிபரங்களோடு வந்திருந்தது. ஆங்கிலேயர் காலத்தில் பிரிவியூ கவுன்சிலின் (அன்றைய உச்சநீதிமன்றம் போன்றது) நீதிபதி களாக இருந்தவர்களின் வாரிசுகள் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக உள்ளனர்.
கிழக்கிந்திய கம்பனி நிர்வாகத்திடமிருந்து இங்கிலாந்து மன்னரின் ஆட்சியின் கீழ் அன்றைய இந்திய தீபகற்ப பகுதிகள் வந்த பிறகு 1949 ஆம் ஆண்டுவரை உச்சநீதிமன்றம் போல் செயல்பட்ட பிரிவி கவுன்சிலில் பல இந்தியப் பிரதிநிதிகள் பார்ப்பனர்கள் தான். அங்கு வழக்குரைஞர்களும் பார்ப்பனர்கள் தான். அட்வகேட் ஜெனரல்களாக இருந்தவர்கள் பெயர்களைப் பார்த்தால் - வி.பாஷ்யம் அய்யங்கார் (1897-1898), பி.எஸ்.சிவசாமி அய்யர் (1907-1912), எஸ்.சிறீனிவாச அய்யங்கார்(1912-1920), சி.பி. ராமஸ்வாமி அய்யர் (1920-1923), அல்லாடி கிருஷ்ண ஸ்வாமி அய்யர்(1929-1944), கே.ராஜேஷ் அய்யர் (1945-1950) என பட்டியல் நீளும், இன்றும் பெரும் வழக்குரைஞர்கள், நீதிபதிகள், தீர்ப்பாணையத் தின் தலைவர்களாக இருப்பவர்களில் பெரும் பாலானோர் இவர்களது வாரிசுகள் தான்.
முகலாய மன்னர்களின் கடைசி வாரிசின் ஆட்சியின்போது நிர்வாக கணக்கராக இருந்த பிரதீப்தேவ் சர்மா என்பவரின் வாரிசுகள் இன்று நிதி அமைச்சக செயலாளராகவும், ரிசர்வ் வங்கியின் நிதி வழங்கல் ஆலோசனைக்குழுவின் முக்கிய தலைவர்களுள் ஒருவராகவும் இருக்கிறார்கள். சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பெண் நீதிபதி உள்ளார். கேரளாவில் நடந்த பார்ப்பனமாநாட்டில் கலந்து கொண்டவர். அவரது தந்தை மிகவும் புகழ்பெற்ற வழக்குரைஞர் வி.ராமச்சந்திரன், அவரது சகோ தரர் வி.பாலசுப்பிரமணியம், வருமானவரித்துறை தீர்ப்பாயத்தின் துணைத்தலைவராக இருந்து ஓய்வு பெற்றவர். இப்படி நீள்கிறது இவர்களது தலை முறைப்பெருமை.
அதுமட்டுமா? உலகெங்கும் உள்ள நாடுகளில் இந்தியாவிற்கு நூற்றுக்கணக்கான தூதரகங்கள் இருக் கின்றன. அவற்றில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வேலை பார்க்கிறார்கள். மயிலாப்பூர் கிரி டிரேடர் சிலோ, மும்பை செம்பூர் அல்லது மாதுங்கா கோவில் களிலோ அல்லது டில்லி ஆர்.கே.நகர் காபிஷாப் புகளில் அமர்ந்திருக்கும் ஏதாவது பார்ப்பனர்களிடம் பேச்சு கொடுங்கள். ”எங்க அத்திம்பேரோடசன் ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியன் கன்சுலேட்டில் பெரிய போஸ்டில் உள்ளார்” என்பார்கள்
இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் ஜெனரல் மேனஜர்களாக இருக்கிறார்கள். நெல்லை நகரத்தில் கோவில் மாடவீதியில் இருக்கும் ஏதாவது ஒரு பூஜை மடத்தில் ஆச்சாரமாக கும்பிடுபோட்டுக்கொண்டு இருக்கும் அவாளிடம் கேளுங்கள்? ”யெஸ் எங்க விச்சு, லாஸ்ட் இயர்தான் மும்பை தலால் ஸ்டிரீட் இந்தியன் பேங்க் பிரான்ஞ்ச் அசிஸ்டன் மேனேஜரா புரமோசன் வாங்கிண்டு போனான்” என்பார்கள்.
இந்த விச்சு,கிச்சு போன்றவர்கள் தான் நமது சேமிப்பான பல்லாயிரம் கோடிரூபாய்களை வட நாட்டு முதலாளிகளுக்கு திரும்பி வராத கடனாக தானமளிக்கும் இடத்தில் இருக்கிறார்கள். சென்னை அய்.அய்.அடி-யில் நூற்றுக்கணக்கான பேராசிரி யர்கள் வேலை பார்க்கிறார்கள், குரோம் பேட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள பார்ப்பன குடியிருப்பில் ஏதாவது ஒரு வீட்டில் விழா என்றால் - இது என்ன அய்.அய்.டி ஸ்பெசல் கிளாசா?! என்று அவாளே நையாண்டி செய்யும் அளவிற்கு ஒட்டு மொத்த அய்.அய்.டி பார்ப்பன பேராசிரியர்கள் அங்கே குழுமி இருப்பார்கள்
ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளுக்கு கேபினட் செக்ரட்டரியாக இருந்தவர்கள், இருப்பவர்கள் ஒன்றிய அரசின் ஆடிட்டர் ஜெனரல் அலுவலகத்தில் உள்ளவர்கள் ஒன்றிய உளவு அமைப்புகளான் IB, RAW போன்றவற்றில் பல்லாயிரம் கோடி புரளும் ராணுவ தளவாடங் களுக்கான உதிரிப்பாகங்களை வாங்கி விற்கும் இடைத்தரகர்களாக இருப்பவர்கள், பல்லாயிரம் கோடி வர்த்தகம் செய்யும் நிறுவனங்களின் தலை மைப் பொறுப்பில் இருக்கும் நிர்வாக தலைமை அதிகாரி, தணிக்கைத்துறை அதிகாரி போன்ற பொறுப்புகளில் இருப்பவர்கள் என்று பட்டியல் இட்டுப்பாருங்கள். இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் டில்லியின் தலைமை அலுவலக பார்ப்பன அதி காரியின் நூல் பிடித்து இழுத்தால் கும்பகோணம் தீர்த்தக்குள வீதியில் உள்ள ஏதாவது ஒரு பார்ப் பனரோடு முடிச்சு இருக்கும். இத்தோடுமுடியாது இதன் தொடர்ச்சி -காஷ்மீர் ஆளுநர் மாளிகை வரை தொடர்சங்கிலி போல் இருக்கும்.
அதே நேரத்தில் மீதமுள்ள 90 விழுக்காடு மக்களின் நிலை என்ன? அதிகபட்சம் ஏதாவது மென்பொருள் நிறுவனத்தில் வேலைபார்க்கும் முதல் தலைமுறை பட்டதாரிகள், அல்லது முதல் தலைமுறையில் படித்து மருத்துவரானவர்கள். விரல்விட்டு எண்ணும் வகையில் அமெரிக்கா, லண்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் மென்பொருள் நிறுவனங்களில் வேலைபார்க்கும் நம்மவர்கள், அவர்கள் எப்படிச் சென்றார்கள் என்றால் அவர்களின் பெற்றோர் முதல் தலை முறை பட்டதாரியாகி திராவிட இயக்க அரசின் திட்டங்களால் அதிகாரியாகி இருப்பார்கள். அவர்கள் தம் பிள்ளை களுக்கு எதிர்காலச்சூழலை கருத்தில் கொண்டு திட்டமிட்ட கற்றல் மூலம் இன்று அவர்களது பிள்ளைகள் அயல்நாட்டில் இருக்கின்றனர். அவ்வளவு தான். தமிழ்நாடு மட்டும் தான் இந்தப்பார்ப்பன ஆதிக்க ஒட்டுண்ணியை பெரியார் என்னும் நச்சுமுறிவு மருந்தை கையி லெடுத்து தனித்துவமாக சிந்திக்கத் துவங்கியது. - அதைத் தாங்கமுடியாமல் தான் நூல் கோஷ்டிகள் நாள் தோறும் புலம்புகின்றனர்

No comments:
Post a Comment