சென்னை, ஏப்.8 காஞ்சிபுரத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக ரூ.50.7 கோடியில் கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலத் தைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் நேற்று (7.4.2022) திறந்து வைத்தார்.
காஞ்சிபுரம் நகரத்துக்கு அதிகம் பேர் வந்து செல்வதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாகக் காஞ்சிபுரம்-சென்னை செல்லும் சாலையின் இடையில் புதிய ரயில் நிலையம் அருகே ரயில்வே கேட் உள்ளது. இந்தப் பகுதியில் ரயில் செல்லும் போது ரயில்வே கேட் மூடப்படு வதால் அடிக்கடி கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.
எனவே, இந்தப் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கத் தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.50.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த 2017-ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது.
ரயில் பாதைக்கு வலது புறமும், இடதுபுறமும் மேம்பாலம் அமைக்கப்பட்ட நிலையில் ரயில் பாதையைக் கடக்கும் இடத்தில் இணைப்பு போடப்படாமல் இருந்தது. பின்னர் இணைப்பு போடப் பட்டுக் கடந்த 6 மாதங்களாக முழுமையாக பணிகள் நிறைவு செய்யப்பட்டும் திறக்கப்படாமல் இருந்தது.
இதனால் ரயில் செல்லும் நேரங்களில் ரயில்வே கேட்டை கடக்க 20 நிமிடங்களுக்கும் மேல் ஆனதால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர். தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட் டால் அவசர ஊர்தி மூலம் மருத்துவமனைக்குச் செல்பவர் களும் பாதிக்கப்பட்டனர். இந்த ரயில்வே மேம்பாலத்தை விரைவில் திறக்க வேண்டும் என்று பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் இந்த ரயில்வே மேம்பாலத்தைத் தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் காணொ லிக் காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார். இந்த பாலம் பயன் பாட்டுக்கு வந்ததைத் தொடர்ந்து ரயில் வரும் நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் முடிவுக்கு வந்தது.
No comments:
Post a Comment