சென்னை,ஏப்.8- பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவு அமைச்சரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலை பேசியில் வலியுறுத்தியுள் ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியு றவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய் சங்கரை, நேற்று (ஏப்.7) தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, இலங் கையில் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்துப் பேசினார். அப்போது, இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் தற்போது நிலவும் தீவிரப் பொருளாதார நெருக்கடியில் சிக்கி, வேதனையில் தவித்துக் கொண்டிருக்கும் இலங் கைத் தமிழர்கள் குறித்து தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துக் கொண்டார்.
இந்தச் சூழ்நிலையில் இலங்கை யில் வசிக்கும், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், தலைநகர் கொழும்பிலும் வசிக்கும் தமிழர்கள் மற்றும் மலையகத் தமிழர்களின் நலன் கருதி, தமிழ்நாடு அரசு அத்தியாவசிப் பொருட் களான அரிசி, பருப்பு மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகம் வாயிலாக அனுப்புவதற்குத் தயாராக உள்ள தாகவும், மனிதாபிமான நோக்கில் அனுப்பப்படும் இத்தகைய பொருட் களை உணவின்றித் தவிக்கும் தமிழர்களுக்கு கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் வினியோகிக்க உரிய அனுமதியையும், ஏற்பாடுகளையும் செய்ய வேண்டுமென்றும் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரைக் கேட்டுக் கொண்டார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடியை கடந்த 31-.3-.2022 அன்று சந்தித்து, தான் முன்வைத்த கோரிக் கைகளை நினைவுகூர்ந்த முதல மைச்சர், அந்தக் கோரிக்கைகளை எல்லாம் உடனடியாக நிறை வேற்றிட வேண்டுமென்றும் அப் போது கேட்டுக் கொண்டார்.
அதேபோன்று, இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் அடிக்கடி தாக்கப்படுவது குறித்தும், கைது செய்யப்படுவது குறித்தும் தனது ஆழ்ந்த கவலையை ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச் சரிடம் தெரிவித்துக் கொண்ட முதலமைச்சர், இலங்கைக் கடற் படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறைகளில் வாடும் தமிழ்நாட்டு மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவித்திட ஒன்றிய அரசு உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுத்திட வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்த கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக் கைகளை எடுப்பதாக ஒன்றிய வெளி யுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி அளித்தார். இவ்வாறு தமிழ் நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment