செஞ்சியில் பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா நிறைவு மாநாடு மிகச்சிறப்புடன் நடத்தப்படும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 24, 2022

செஞ்சியில் பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா நிறைவு மாநாடு மிகச்சிறப்புடன் நடத்தப்படும்!

 பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பகுத்தறிவு அமைப்புகளின் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

சென்னை, ஏப். 24- சென்னை பெரியார் திடலில் பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, பகுத்தறிவுஎழுத்தாளர் மன்றம், பகுத்தறிவாளர் கழக ஊடகப்பிரிவு, பகுத்தறிவாளர் கலைத்துறை, மாநில, மாவட்ட, பொறுப்பாளர்கள்கலந்துரையாடல் கூட் டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், பகுத்தறிவாளர் கழக ஊடகப்பிரிவு, பகுத்தறிவாளர் கலைத்துறை மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட் டம் 10.4.2022 ஞாயிறு காலை 10.30 மணியளவில் சென்னை பெரியார் திடலில் அன்னை மணியம் மையார் அரங்கில் நடைபெற்றது. 

கூட்டத்திற்கு பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் தலைமை ஏற்றார். பகுத்தறிவாளர் கழக ஊடகப் பிரிவு தலைவர் மா.அழ கிரிசாமி, பகுத்தறிவு ஆசிரியரணி மாநில தலைவர் வா.தமிழ்பிரபாகரன், பகுத்தறிவு ஆசிரியரணி மாநில அமைப்பாளர் இரா.சிவகுமார், கல்லூரி பகுத்தறிவு ஆசிரியர் அணி அமைப்பாளர் பேராசிரியர் முனை வர் எஸ்.அருள்செல்வன், பகுத்தறிவாளர் கலைத்துறை செயலாளர் மாரி. கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழுப்புரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் வே.இரகுநாதன் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து பங்கேற்பாளர்கள் தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டார்கள். 

தலைமையுரை ஆற்றிய  இரா.தமிழ்ச்செல்வன் பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா தொடக்க மாநாடு பற்றிய செய்திகள் எல்லாம் கூறினார். 

மாநில துணைத் தலைவர் நல்லதம்பி, மாநில அமைப்பாளர் குருசாமி ஆகியோருடைய ஈடுபாடு பங்கு பற்றி கூறினார். 

மேனாள் பகுத்தறிவாளர் கழகத் தலைவர், ஊடகப் பிரிவுத் தலைவர் மா.அழகிரிசாமி உரையில், அவர்களுடைய செயல்பாடு பற்றியும் தொடர்ந்து பொன்விழா நிறைவு விழா எப்படி நடத்த வேண்டும் என்பதற்கான கருத்துக் கேட்பு கூட்டமாக இருக்க வேண்டும் என்றும், அது தொடர்பாக வந்துள்ள பொறுப்பாளர்கள் கருத்துகளைச் சொல்ல வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மேலும், வருகை தந்துள்ள பொறுப்பாளர்களை இக்கூட்ட கருத்து களை மாவட்டங்களுக்கு கொண்டு செல்லவேண்டும். இங்கிருந்து பெற்ற கருத்துகளைக் கொண்டு ஒவ் வொரு மாவட்டத்திலும் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம், ஒன்றிய கலந்துரையாடல் கூட்டம் ஆகி யவை நடத்தப்பட வேண்டும் என்றும், தொடர்ந்து மாநாட்டுக்கு தேவையான நிதி உதவி ஆகியவற்றை தாராளமாக வழங்கிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

கலைத் துறை செயலாளர் மாரி.கருணாநிதி பேசு கையில், மாநாடு நடத்துவது பற்றியும் மாநாட்டில் இசைத்தட்டு வெளியிடுவது பற்றியும் குறும்படங்கள் திரையிடுவது பற்றியும் உரையாற்றினார்.

பகுத்தறிவு ஆசிரியரணி மாநில அமைப்பாளர் இரா.சிவக்குமார் மாவட்டத்திற்கு நூறு பேராவது வர வேண்டும் என்பது பற்றியும், நிதி வழங்குவது பற்றியும் எடுத்துக் கூறினார் .

பகுத்தறிவு ஆசிரியரணி மாநில தலைவர் வா.தமிழ்பிரபாகரன், கல்லூரி ஆசிரியரணிஅமைப்பாளர் முனைவர். எஸ்.அருட்செல்வன், மாநில பகுத்தறிவா ளர் கழக துணை பொதுச் செயலாளர் பேரா.சுலோச் சனா, மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் கே.டி.சி. குருசாமி, திராவிடர் கழக கலைத் துறை செயலாளர் தெற்கு நத்தம் . சித்தார்த்தன் ஆகியோர் பகுத்தறிவாளர் கழக பொன்விழா நிறைவு மாநாடு குறித்த கருத்துகளை தங்களுடைய கருத்துகளை பதிவு செய்தார்கள்.

பகுத்தறிவாளர் கழக துணைத்தலைவர் வேண் மாள் நன்னன் தனது பங்கு பற்றி பேசினார்.

தொடர்ந்து மாநில துணைத் தலைவர்கள்  அ.தா. சண்முகசுந்தரம், அண்ணா.சரவணன், சி.ஏ. இரஞ்சித்குமார், புயல் குமார், கோபு. பழனிவேல், அ.சரவ ணன், கா.நல்லதம்பி ஆகியோர் தங்களுடைய பொறுப்பு மாவட்டங்களில் இருந்து வருகை தந்துள்ள மாவட்ட பொறுப்பாளர்களை அறிமுகம் செய்து அவர்களது கருத்துக்களையும் பதியச் செய்தார்கள்.

மாநாடு பற்றிய கருத்துகள்

மாநாடு பற்றிய கருத்துக்களையும், தங்களுடைய செயல்பாடுகளையும் பற்றி மாவட்ட பொறுப்பா ளர்கள்  எடப்பாடி கோவி அன்புமதி, நன்னிலம் ஆறு முகம், பட்டுக்கோட்டை இரத்தினசபாபதி, மன்னார் குடி அழகிரி, விழுப்புரம் கார்வண்ணன், ஆவடி ஜானகி ராமன், திருவாரூர் ஈவேரா, தஞ்சாவூர் பாவலர் பொன்னரசு, தென்சென்னை வேணுகோபால், இளம் பெரியார், பெரியாரிய ஆய்வாளர் பொறியாளர் பொ.நாகராசன், சாலிகிராமம் மு.இரா. மாணிக்கம், வடசென்னை கோவி.கோபால், கும்பகோணம் பேராசிரியர் ம.சேதுராமன், திருவள்ளூர் கி.எழில், திருவள்ளூர் வீரமணி, செங்கற்பட்டு சிவகுமார், ஆத்தூர் முருகானந்தம், திருப்பத்தூர் கோ. திருப்பதி, புழல் பி. இருதயராஜ், தர்மபுரி கதிர். செந்தில்குமார், தருமபுரி இர.கிருஷ்ணமூர்த்தி, சென்னை உத்ரா பழனிச்சாமி, பெருங்களத்தூர் பழனிச்சாமி, தாம்பரம் சக்தி, அடையாறு தமிழ்வேந்தன், கள்ளக்குறிச்சி எ.எழில்ராகுலன், மன்னார்குடி தங்க.வீரமணி, சென்னை க்ரியா சக்தி ஆகியோர் உரையாற்றினார்கள்.

தொடர்ந்து பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் அனைவருடைய கருத்து களையும் தொகுத்து தெரிவித்தார்.

தீர்மானங்கள்

அடுத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தீர்மானங்களை மாநிலத் துணைத் தலைவர் கோபு.பழனிவேல் படித்தார்.

முதலமைச்சருக்குப் பாராட்டு

தீர்மானம்1: தந்தை பெரியார் கருத்துக்கள் உலகம் முழுவதும் பரவ வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் 21 உலக மற்றும் இந்திய மொழிகளில் பெரியார் கருத்துக்களை மொழியாக்கம் செய்து பெரியார் நூல்களை பரப்புவது என அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசையும் குறிப்பாக தமிழ்நாடு முதல மைச்சர் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களையும் இக்கூட்டம் தனது பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொள் கிறது.

தீர்மானம்2: எதிர்வரும் ஜூன் மாதம் 19ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை செஞ்சியில் நடைபெறும் பகுத்தறி வாளர் கழகப் பொன்விழா நிறைவு மாநில மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கு வாய்ப்பளித்த பகுத்தறிவாளர் கழகப் புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அய்யா அவர்களுக்கு இக்கூட்டம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம்3: செஞ்சியில் நடைபெறும் பகுத்தறி வாளர் கழகப் பொன்விழா நிறைவு மாநாட்டை பகுத் தறிவாளர் கழகத்தின் அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைந்து மிகச் சிறப்புடன் நடத்துவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

காவிச் சிந்தனைகளை நீக்க வேண்டும்

தீர்மானம்4: பாட நூல்களில் உள்ள காவி சிந்தனைகள், பிற்போக்குச் சிந்தனை உள்ள பகுதி களை நீக்கிடுவதோடு மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் பகுத்தறிவு சிந்தனைகள் வளரும் வகையில் பாடத் திட்டங்களை தமிழ்நாடு அரசின் கல்விக் கொள்கையில் இடம்பெறச் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம்5: பள்ளி, கல்லூரி வளாகங்களில் இளம் மாணவர்கள் பங்கேற்கும் வகையில் யோகா     மற்றும் உடற்பயிற்சிகள் என்ற பெயரில் ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாம்கள் நடத்துவதை இக்கூட்டம்     கண்டிப்பதுடன் இதுபோன்ற முகாம்களை நடத்தும் கல்வி நிறு வனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் தமிழ்நாடு அரசை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

நுழைவுத் தேர்வையும் நீக்க வேண்டும்

தீர்மானம் 6: மாணவர்களின் மருத்துவ கனவை தகர்க்கும் நீட் மற்றும் கலை கல்லூரிக்கான நுழைவுத் தேர்வையும் நீக்க வேண்டுமென இக்கூட்டம் ஒன்றிய அரசை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம்7: தந்தை பெரியாரும் திராவிட இயக்க மும் போராடிப் பெற்றுத் தந்த உரிமைகள் பறி போவதைத் தடுக்கவும் மற்றும் நம் மாநில உரிமைகளை வென்றெடுக்கவும், நீட் மற்றும் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து ‘திராவிடர் மாடல்’ என்ற தத்துவத்தை அறிவித்து “திராவிடம் வெல்லும், அதை வரலாறு சொல்லும்” என்ற முழக்கத்துடன் தனது 89ஆவது வயதிலும் Ôநாகர்கோயில் முதல் சென்னைÕ வரை பரப்புரை பயணம் மேற்கொண்டு வரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் நோக்கம் வெற்றி பெற பகுத்தறிவாளர் கழகம் வாழ்த்தி மகிழ்வதோடு முழு ஒத்துழைப்பு தருவது என இக்கூட்டம் தீர் மானிக்கிறது.

தீர்மானம்8: தமிழ்நாடு அரசு நீதியரசர் முருகேசன் தலைமையில் அமைத்துள்ள தமிழ்நாடு அரசின் கல்விக்கொள்கை குழுவின் பணி சிறப்பாக அமைந்திட பாராட்டி வரவேற்கிறது.

தீர்மானம்9: நம் இயக்க இதழ்கள் அதிகம் பரப்பிட ஒவ்வொரு தோழர்களும் தனி கவனம் எடுத்துக் கொண்டு விடுதலை, உண்மை, மாடர்ன் ரேஷனலிஸ்ட், பெரியார், பிஞ்சுகளுக்கு சந்தா அதிகம் சேர்ப்பது என முடிவு செய்யப்படுகிறது.

மேற்கண்ட தீர்மானங்கள் அனைத்தும் அனை வரது பலத்த கரவொலி மூலம் ஒருமனதாக நிறை வேற்றப்பட்டது .

திராவிடர் கழகத் துணைத் தலைவர் உரை

தொடர்ந்து வழிகாட்டுரை நிகழ்த்திய திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அய்யாவின் அரும்பணி பற்றி மிகவும் உருக்கமாக நெகிழ்ச்சியாகவும் எடுத்துரைத்து, இந்த இயக்கத்தின் தேவை, இந்த இயக்கத்தின் செயல்பாடுகள், இந்த இயக்கத்தால் இந்த சமுதாயம் அடைந்த பலன் ஆகிய வற்றை எடுத்துரைத்து, பகுத்தறிவாளர் கழக மாநாட் டில் என்னென்ன செய்ய வேண்டும் என்பதையெல்லாம் சுட்டிக்காட்டி, இறுதியில் பெரியார் உலகத்திற்கு நிதி சேர்ப்பதில் எல்லோரும் தனிக்கவனம் செலுத்திட வேண்டும் எனக்கூறி தன்னுடைய உரையை நிறைவு செய்தார்.

தமிழில் பெயர் மாற்றம் 

நிகழ்வில் பங்கேற்ற தஞ்சாவூர் ஒன்றிய பகுத் தறிவாளர் கழக அமைப்பாளராக பொறுப்பேற்றுள்ள     தோழர் களிமேடு ஹரிஹரசுதன் தனது பெயரை அவருடைய விருப்பப்படி அன்பழகன் என மாற்றிக் கொள்வதான அறிவிப்பினை திராவிடர் கழக துணைத்தலைவர் . கலி.பூங்குன்றன் வெளியிட்டார். 

தொடர்ந்து அன்பழகனுக்கு கவிஞர் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்கள்.

No comments:

Post a Comment