பி.வில்சன் அவர்களின் தனி நபர் மசோதா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 8, 2022

பி.வில்சன் அவர்களின் தனி நபர் மசோதா

சட்டமன்றங்கள் நிறைவேற்றும் மசோதாவுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் அளிக்க கால வரம்பு நிர்ணயிக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள க்கோரி கழக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் தாக்கல் செய்திருக்கும் தனி நபர் மசோதா குறித்த செய்தியினை விடுதலை நாளி தழில் படித்தேன்.

அரசமைப்பு சட்டத்தை இயற்றியவர்கள் உயர்ந்த பதவிகள் வகிப்பவர்களின் செயல்பாட் டிற்கு  விதிமுறைகள் வகுக்காததற்கு காரணம் அவர்கள் பெருந்தன்மையுடன் நடந்து கொள் வார்கள் என்பதைக்கருதித்தான். ஆனால் ஆளு நர், குடியரசுத்தலைவர் போன்றோர் விருப்பு வெறுப்புடன் நடந்து கொள்வார்களேயானால் இப்பதவிக்குரிய மாண்புகள் மண்ணில் விழுந்து விடும். அத்தகைய நிலை தமிழ்நாடு ஆளுநரால் ஏற்பட்டிருக்கிறது. தானே முடிவெடுக்கக்கூடிய சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட 19 மசோ தாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது ஆட்சித்தேருக்கு முட்டுக்கட்டை யாக உள்ளது.

திமுக அரசின் செயல்பாடுகளுக்கு சிறந்த தோர் எடுத்துக்காட்டாக அமையவிருக்கிற நீட் ஒழிப்பு மசோதாவை முதன்முறை 142 நாட் களுக்கும் இம்முறை ஒருமாதத்திற்கு மேலும் ஆளுநர் தன்னுடைய அலுவலகத்தில் உள்ள ஊறுகாய் ஜாடியில் போட்டு வைத்திருப்பது அவரது பதவிக்குரிய பெருந்தன்மைக்கு இழுக்கு தேடித்தரக்கூடியது.

இவ்வாறு ஒருபுறம் தாமதம் செய்து கொண்டு மறுபுறம் மேடைகள் தோறும் திமுக அரசால் நீட்டை ஒழிக்க முடிந்ததா என்று வாய்ச்சவடால் அடிப்பது நகைமுரண் !

ஆளுநர் இம்மசோதாவை குடியரசு தலைவ ருக்கு அனுப்பி அதில் அவர் கையொப்பம் இட்டு சட்டமாக ஆவது என்பது நியாயமான அரசமைப்பு சட்டப்படியான வழிமுறை தானே?இதை ஆளுநர் செய்யாமல் இழுத்தடிப்ப தற்கு காரணம் இவ்வகைக்குரிய காலக்கெடு இல்லாமைதான்.

இதை சரியாக உணர்ந்து திமுக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் தனி நபர் மசோதா கொண்டுவந்தது எதிர்கால நாடாளு மன்ற ஜனநாயகத்திற்கு வழிகாட்டியாக அமை யும் என்பதில் அய்யமில்லை.

மாநில உரிமைகளுக்காக போராடும் திமுக விற்கு இம்மசோதாவின் வெற்றி மகுடத்தின் மயி லிறகு ஆக ஆகும்.

- ஜி.அழகிரிசாமி

 மயிலாடுதுறை மாவட்டம்

No comments:

Post a Comment