ஓவியர் செழியன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 11, 2022

ஓவியர் செழியன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்

திறன்மிக்க ஓவியர் செழியன் என்ற நெடுஞ்செழியன் (61) மறைவுற்றார் என்னும் செய்தி அறிந்து வருந்துகிறோம். முற்போக்குச் சிந்தனை கொண்டு இயங்கியவர். தந்தை பெரியாரின் மீது பெருமதிப்பு கொண்டவர். தஞ்சையில் பிறந்து கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில் கற்று, ஓவியத் துறையில் திறன்மிகு படைப்பாளியாகத் திகழ்ந்தவர். இந்தியாவின் பல நகரங்கள் உள்பட உலக நாடுகள் பலவற்றிலும் ஓவியக் கண்காட்சிகளை நடத்தி யும், பங்கேற்றும் பாராட்டுகளும், பரிசுகளும் பட்டங்க ளும் பெற்றவர். ஒரு மேடையில் மக்களிசைப் பாடகர் புஷ் பவனம் குப்புசாமி அவர்கள் தந்தை பெரியாரைப் பற்றிப் பாட, அந்தப் பாடல் நிறைவுறுவதற்குள் கத்தியின் கீற்றல் களால் இவர் வரைந்த பெரியார் ஓவியம் குறித்த செய்தி அறிந்தும், படத்தைப் பார்த்தும் நாம் பெரிதும் மகிழ்ந்துள்ளோம். 

இன்னும் பல காலம் வாழ்ந்து சாதிக்க வேண்டியவரின் மறைவு நமக்கு ஏற்பட்ட இழப்பாகும். அவரது குடும்பத்தி னருக்கும், கலைத் துறையினருக்கும் ஆழ்ந்த இரங்க லைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

- கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்


No comments:

Post a Comment