சென்னை, ஏப்.28 செங்கல்பட்டு-தாம் பரம் மற்றும் பூந்தமல்லி--_திருப்பெரும் புதூர் இடையே உயர்மட்ட சாலை அமைப்பதற்கு ஒன்றிய அரசிடம் வலி யுறுத்தி வருவதாக சட்டப் பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
தமிழ்நாடு சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தில் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகன், குளித்தலை மாணிக்கம், நெய்வேலி சபா.ராஜேந்திரன், தளி ராமச்சந்திரன், திருச்செங்கோடு ஈஸ்வரன் ஆகியோர் கேள்விகள் கேட்டனர். அவர்களுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அளித்த பதில் வருமாறு:-
செங்கல்பட்டு வரை 6 வழிச்சாலை அமைத்தாலும் போக்குவரத்து நெரிசல் தீராது என்று உறுப்பினர் ஈஸ்வரன் கூறியுள்ளார். செங்கல்பட்டில் இருந்து வண்டலூர் வரைக்கும், திருப்பெரும்பு தூரில் இருந்து மதுரவாயல் வரைக்கும் உயர்மட்ட பாலம் அமைக்கும் திட்டம் உள்ளதா என்றும் அவர் கேட்டார்.
அந்த பகுதியில் அதிக போக்குவரத்து உள்ளது. செங்கல்பட்டு வரைக்கும் விரைவாக வந்துவிடலாம். ஆனால் அங்கிருந்து சென்னை வருவதற்கு 2 மணி நேரம் ஆகிவிடுகிறது. தற்போது அங்கு சாலையை விரிவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு மேல் மட்ட சாலை அமைப்பதற்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. செங்கல்பட்டு-தாம்பரம் இடையே மேல்மட்ட சாலை அமைப்பதற்கான கருத்துரு உள்ளது.
அதுபோல திருப்பெரும்புதூர்-_பூந்த மல்லி இடையேயும் அதே நிலைதான். கடும் போக்குவரத்து நெரிசல் இருப் பதும் அரசுக்கு தெரியும். பூந்தமல்லியில் இருந்து திருப்பெரும்புதூர் வரை மேல் மட்ட சாலை அமைக்க கருத்துரு தயார் செய்யப்பட்டது. அது பற்றியும் ஒன்றிய அரசிடம் கடிதம் அளிக் கப்பட்டுள்ளது. மேலும் மேலும் வலியுறுத்தி, அந்த திட்டங்களை செயல்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment