4 அரசு சட்டக் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்பு சட்டத் துறை அமைச்சர் எஸ். ரகுபதி அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 28, 2022

4 அரசு சட்டக் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்பு சட்டத் துறை அமைச்சர் எஸ். ரகுபதி அறிவிப்பு

சென்னை, ஏப்.28  4 அரசு சட்டக் கல்லூரிகளில் வரும் கல்வி ஆண்டு முதல் முதுநிலை பட்டப்படிப்பு தொடங்கப்படும் என சட்டப் பேர வையில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அறிவித்தார்.

சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி, புதுப்பாக்கம் மற்றும் செங்கல்பட்டு மற்றும் திரு நெல்வேலி அரசு சட்டக்கல்லூரிகளில் கூடுதலாக முதுநிலை (எல்.எல்.எம்.) பட்டப்படிப்பு பிரிவுகள் வரும் கல்வியாண்டு முதல் தொடங்கப்படும்.

சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி, பட்டறைப் பெரும்புதூரில் ரூ.1.50 கோடி மதிப் பீட்டில் விளையாட்டு திடல் நிறுவப் படும்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகள் மற்றும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக் கழகத்தின் சீர்மிகு சட்டப்பள்ளியில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்பட்டப் படிப்பு அல்லது 3 ஆண்டு சட்டப் பட்டப்படிப்பு முடித்த 17 பட்டதாரி களுக்கென தலைமைச்செயலக சட்டத் துறையில் தன்னார்வ பயிற்சித்திட்டம் தொடங்கப்படும். 

இதற்கென, ஒரு சட்ட பட்டதாரிக்கு ஒரு மாதத்துக்கு உதவித்தொகையாக ரூ.20 ஆயிரம் வீதம் 17 சட்டப் பட்ட தாரிகளுக்கு ஒரு வருடத்துக்கு ரூ.40.80 லட்சம் செலவு ஆகும்.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர், செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் ஆகிய இடங்களில் அனைத்து உட் கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய மாவட்ட உரிமையியல் மற்றும் குற்ற வியல் நடுவர் நீதிமன்றங்கள் அமைக் கப்படும்.

சென்னை பெருநகர காவல் துறையின் மத்திய குற்றப் பிரிவால் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் வழக்குகளை முக்கியத்துவமாக விசாரணை செய்ய ஒரு கூடுதல் நீதிமன்றம் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்படும்.

மரணமடைந்த வழக்குரைஞர்களின் வாரிசுதாரர்கள், நியமனதாரர்களுக்கு நலநிதி வழங்குவதற்காக, தமிழ்நாடு வழக்குரைஞர் நலநிதிக்கு அரசால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் மானியத்தை ரூ.8 கோடியில் இருந்து ரூ.10 கோடியாக உயர்த்தி வழங்கப்படும். அனைத்து சிறைகள், சிறைத்துறை துணைத்தலைவர் மற்றும் தலைமை நன்னடத்தைக் கண்காணிப்பாளர் ஆகியோரின் அலுவலகங்களுக்கு 63 கணினிகள், 45 புள்ளி அணி அச்சு எந்திரங்கள், 18 லேசர் அச்சு எந்திரங்கள் மற்றும் 21 நகலெடுக்கும் எந்திரங்கள் ரூ.82.92 லட்சம் தொடரா செலவி னத்தில் புதியதாக கொள்முதல் செய்து நவீனமயமாக்கப்படும். 

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment