'மெட்' இந்தியா மருத்துவமனையில் வளர்சிதை மாற்ற நோய் கண்டறியும் சோதனை மருத்துவ நிபுணர் டாக்டர் டி.எஸ்.சந்திரசேகர் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 8, 2022

'மெட்' இந்தியா மருத்துவமனையில் வளர்சிதை மாற்ற நோய் கண்டறியும் சோதனை மருத்துவ நிபுணர் டாக்டர் டி.எஸ்.சந்திரசேகர் தகவல்

சென்னை, ஏப் 8-சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மெட் இந்தியா மருத்துவ மனையில் உலக சுகாதார தினத்தை ஒட்டி வளர் சிதை மாற்ற நோய்கள் கண்டறியும் பரிசோ தனை கட்டணமின்றி மேற்கொள்ளப்படும் என்று மருத்துவமனை தலைவர் டாக்டர் டி.எஸ். சந்திரசேகர் கூறியுள்ளார் 

ஊடகத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டி யில் கூறியதாவது மனித னுக்கு ஏற்படக்கூடிய பல்வேறு நோய்களுக்கு, 'மெட்டபாலிக் சிண்ட் ரோம்' என்ற வளர்சிதை மாற்ற நோய், மூல காரண மாக உள்ளது. குறிப்பாக, உடல் பருமன், நீரிழிவு, புற்றுநோய் போன்ற பல பாதிப்புகளுக்கு இவை தான் காரணம்.

இவற்றை விழிப்புணர் வுடன் ஆரம்ப நிலையி லேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றால், நோய் பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ள முடி யும். எனவே, மெட் இந் தியா மருத்துவமனையில் ஓராண்டுக்கு, 1,000 ரூபாய் மதிப்புள்ள, வளர் சிதை மாற்ற நோய்கள் பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனை இலவசமாக வழங்கப் படும்.

மேல் சிகிச்சை தேவைப்படுவோருக்கு, மொத்த செலவில் 20 சதவீதம் தள்ளுபடி வழங் கப்படும். இந்த பரிசோ தனையை மக்கள் பயன்ப டுத்திக் கொள்ள வேண் டும். இவ்வாறு டாக்டர் டி.எஸ்.சந்திரசேகர் கூறினார்.விபரங்களுக்கு 044 - 2831 2345 என்ற இல வச தொலைபேசி எண் ணில் தொடர்பு கொள்ள லாம்.

மேலும் அப்போது சுற்றுப்புற சீர்கேட்டிற்குக் காரணமும் அதனை சரிப் படுத்தும் வழிமுறைகளும் பற்றிய விழிப்புணர்வுக் குறும்படம் காண்பிக்கப் பட்டது.

No comments:

Post a Comment