பெரியார் பயிற்சி மய்யம் சார்பில் இலவச கருத்தரங்கம் மற்றும் சிறப்பு வகுப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 8, 2022

பெரியார் பயிற்சி மய்யம் சார்பில் இலவச கருத்தரங்கம் மற்றும் சிறப்பு வகுப்பு

சென்னை வேப்பேரி பெரியார் திடலில் 37 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் பெரியார் அய்.ஏ.எஸ் அகாடெமியில் 2022 ஆம் ஆண்டிற்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கவுள்ளதை தொடர்ந்து , டி.என்.பி.எஸ்.சி குரூப் 4, கட்டாய தமிழ் தாளில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுவது குறித்தும், மற்றும் தேர்வுகள் குறித்த சந்தேகங்களை தீர்க்கவும், விருப்ப படங்களை தேர்வு செய்யும் முறை , போட்டித் தேர்வுகளுக்கு எவ்வாறு தங்களை தயார் செய்துகொள்ளவேண்டும் போன்ற மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையிலான சிறப்பு கருத்தரங்கம் மற்றும் சிறப்பு வகுப்புகள் தொடர்ந்து மூன்று நாட்கள் ஏப்ரல் 8 முதல் ஏப்ரல் 10 வரை (வெள்ளிக்கிழமை முதல் ஞாயிறு வரை) காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை பெரியார் திடலில் அமைந்துள்ள பெரியார் அய்.ஏ.எஸ் அகாடெமியில் நடைபெறுகிறது.

இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினர்களாக, கல்லூரி பேராசிரியர்கள், மேனாள் மாணவர்கள் கலந்துகொள்கின்றனர். இதில் கலந்துகொள்ள ஆர்வமுள்ள மாணவர்கள் தங்கள் இருக்கைக்கு முன்பதிவு செய்துகொள்வது அவசியம். தொடர்புக்கு 044-2661 8056 / 99406 38537 மேலும் விவரங்களுக்கு பெரியார் அய்.ஏ.எஸ் அகாடமி, 84/1 ஈ.வெ.கி. சம்பத் சாலை, பெரியார் திடல், வேப்பேரி, சென்னை - 600 007.


No comments:

Post a Comment