திராவிட மாணவர் கழகம் சார்பில் புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 11, 2022

திராவிட மாணவர் கழகம் சார்பில் புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம்

 

புதுச்சேரி, ஏப்.11- மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கு கட்டாய நுழைவுத் தேர்வு, அனைத்து பல்கலைக்கழகங்களிலும் முனைவர் பட்ட மாணவர்களை தேர்ந்தெடுக்கும் உரிமை பறிப்பு - ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து புதுச்சேரியில் திராவிட மாணவர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் புதுச்சேரி அண்ணா சாலையில் அண்ணா சிலை அருகில் நடைபெற்றது.  

திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமை வகித்து கண்டன உரையாற்றினார். திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன் வரவேற்றார்.  

கடலூர் மண்டல செயலாளர் ப.பண்பாளன், புதுச்சேரி செயலாளர் இலக்கியா, திண்டிவனம் மாவட்டத் தலைவர் வே.பா.மாரிமுத்து முன்னிலை வகித்தனர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் புதுச்சேரி மாநில திராவிடர் கழகத் தலைவர் சிவ.வீரமணி தொடக்க உரையாற்றினார்.

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சி.சு.சுவாமிநாதன், முற்போக்கு மாணவர் சங்க மாநில செயலாளர் இரா.தமிழ்வாணன், இந்திய மாணவர் சங்க செயலாளர் சொ.பிரவீன்குமார் அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாநில செயலாளர் சே.எழிலன், ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.நிறைவாக கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் கண்டன உரையாற்றினார்.

கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாநில அமைப்புச் செயலாளர் மதுரை வே.செல்வம் உள்பட கழகத்தின் பல்வேறு அணிகளின் பொறுப்பாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆர்ப்பாட்ட முடிவில் திராவிட மாணவர் கழக புதுச்சேரி தலைவர் சு.மணிபாரதி நன்றி கூறினார்.

டில்லி மாணவர்கள்மீதான ஏ.பி.வி.பி.யின்
தாக்குதலுக்கு கண்டனம்

டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் விடுதியில் மாணவர்கள்மீது தாக்குதல் நடத்திய  ஏ.பி.வி.பி. காவிக்குண்டர்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு ஆர்ப்பாட்டத்தில் முழக்கமிடப்பட்டது. 

தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஏஅய்எஸ்ஏ மாணவர் அமைப்பின் அகில இந்திய தலைவர் சாய்பாலாஜியிடம் திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தொலைப்பேசிமூலம் தொடர்பு கொண்டு உடல்நலனை விசாரித்ததோடு, காவிக்குண்டர்களுக்கு எதிராக தமிழ்நாடு,புதுச்சேரி மாணவர்கள் என்றும் ஜேஎன்யூ மாணவர்களுடன் துணையிருப்பார்கள் என்றார். 

No comments:

Post a Comment