அறிவுத் தேரின் ஒரு சக்கரம் கல்விக் கூடம், மறு சக்கரம் நூலகம். ஒரு நாட்டின் நாகரிகமும், பண்பாடும் அந்நாட்டில் உள்ள நூலகங்களின் மூலமே வெளிப்படுகின்றன.
மக்களிடத்தே மண்டிக்கிடக்கும் மன இருளைப் போக்கும் ஒளி விளக்காக நூலகங்கள் செயல்படுகின்றன. எனில் அது மிகையன்று. நூலகம் என்று சொல்லும் போது, அதிலும் பொது நூலகம் என்று குறிப்பிட்டுச் சொல்லும் போது, நூலகம் என்பது சமுதாயத்தில் எந்த அளவிற்கு முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது, நூலகம் எந்த அளவிற்குத் தனது பணியைச் செம்மையாகச் செய்து வருகிறது என்பதை நாம் நன்கு அறியலாம். பொது நூலகங்கள் பொதுமக்களால் பொதுமக்களுக்காக சட்டத் தின் அடிப்படையில் நூலகப்பணி நடைபெறும் இடமாகும். ஜாதி, மதம், இனம், மொழி, நிறப் பாகுபாடின்றி மக்கள் அனைவரும் படித்து பயன்பெறும் இடமே பொது நூல கங்களாகும்.
உலகம் உருவானது முதல் இன்றைய நாள் வரை எத்தனையோ அறிஞர்களும், கவிஞர்களும், சான்றோர் களும், மகான்களும் தோன்றி மறைந்துள்ளனர். அவர்க ளின் உயரிய எண்ணங்களும், ஆழ்ந்த கருத்துகளும், சிந்தனைச் சிதறல்களும் அவர்கள் எழுதிச் சென்ற நூல் களின் வழியேதான் நம்மால் அறிய முடிகிறது. அப்படி அறிவதற்கு நிலைக்களனாக இருப்பவை நூலகங்களே.
உலக மக்களின் உயரிய வாழ்க்கையையும், அவர்கள் அடைந்துள்ள முன்னேற்றங்களையும், உலகின் ஒரு கோடியில் நிகழும் அறிவியல் கண்டுபிடிப்புகளையும் மற்றும் தொழில்நுட்பங்களையும் நாம் நேரடியாகத் தெரிந்து கொள்வது என்பது இயலாத காரியம். ஆனால், அவற்றை நாம் உட்கார்ந்த இடத்தில் இருந்தே தெரிந்து கொண்டு, அதன்வழி கிராமங்களில் வாழும் இலட்சோப இலட்சம் மக்கள் தங்களின் பண்பட்ட வாழ்க்கையினை மேம்படுத்திக் கொள்ள, நூலகங்கள் பெரிதும் பயன்படு கின்றன என்பது வெளிப்படையான உண்மை.
இன்று ஊடகங்கள் உலகையே உலுக்கிக் கொண்டிருந் தாலும் பொது நூலகங்களின் வழியாக மட்டுமே மக்கள் அதிக அறிவைப் பெற வாய்ப்புண்டு. காரணம், இன்றைய அறிவியல், தொழில்நுட்ப உலகில் அறிவுத்துறை சார்ந்த ஆயிரமாயிரம் நூல்கள் அன்றாடம் வெளிவந்து கொண் டிருக்கின்றன. தனிப்பட்ட ஒருவரால் அனைத்து நூல் களையும் வாங்கிப் படிக்க இயலாது. அவற்றை நூல கங்களால் மட்டுமே நிறைவு செய்ய முடியும். எனவே, அறிவுத் தேடல் தொடர பொது நூலகங்களின் சேவை நமக்கு இன்றியமையாததாகும். ஒரு சிலருக்கே கல்வி என்ற காலம் போய், இன்று அனைவருக்கும் கல்வி என்பது உலகம் ஒப்புக் கொண்ட உண்மையாகும். அனைவரும் கல்வி பெற, “பெற்ற தாயினும் உற்ற துணையாக நிற்பன” பொது நூலகங்களே.
குறிக்கோள்
“குறைந்த செலவில் நிறைந்த மக்களுக்கு சிறந்த படிப்பு” என்பதே நூலகப் பணியின் குறிக்கோள் ஆகும்.
எனவே, ஒரு நாட்டின் வளர்ச்சி பொது நூலகங்களின் செயல்பாட்டுத் திறனில் அமைந்துள்ளது என்பது மிகை யல்ல பொது நூலகப் பணி வளர்ச்சிபெறதிட்டமிட்டுச் செயலாற்ற வேண்டியது நூலகங்களின் கடமையாகும். இதனைக் கருத்தில் கொண்டே தமிழ்நாட்டில் பொது நூலகங்கள் திட்டமிட்டுச் சிறப்பாக செயலாற்றி வருகின்றன.
போட்டித் தேர்வுகளில் பங்கேற்க விரும்பும் மாண வர்களுக்காக தேர்வாணையக்குழுத் தேர்வுகளுக்கான நூல்களும், வங்கித் தேர்வுக்கான நூல்களும், இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல்பணி போன்ற தேர்வுகளுக் கான நூல்களும் அடங்கிய குடிமைப்பணி மய்யம் நகர்ப் புறங்களில் உள்ள பொது நூலகங்களில் செயல்பட்டு வரு கின்றன.
நூலக நிதி
எந்தவொரு துறையாக இருப்பினும் அத்துறையின் செயல்பாடுகள் மக்களைச் சென்றடைந்து, அவர்களுக்குப் பயன்பட வேண்டுமெனில் போதுமான நிதிவசதி இருந்தாக வேண்டும். அதனைக் கருத்தில் கொண்டே பொதுநூலகச் சட்டத்தில் இதற்கான வழிவகைகள் செய்யப்பட்டன. நூலகவரி சொத்து வரியில் ரூபாய்க்கு 10 காசுகள் கூடுதல் வரியாக வசூலிக்கப்படுகிறது.
ஊர்ப்புற நூலகங்கள் திறத்தல்
நூலகப்பணி தமிழ்நாட்டின் எல்லாப் பகுதிகளுக்கும் பரவலாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடும், கிராம மக்களிடையே படிக்கும் ஆர்வத்தை அதிகரிக்கவும், கிராமங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்ற காந்தியக் கொள்கையின் அடிப்படையிலும் தமிழகமெங் கும் 1,492 ஊர்ப்புற நூலகங்கள் செயல்பட்டு கிராமப்புற மக்களுக்கு நூலகப் பணியாற்றி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
நூலகங்களை கணினிமயமாக்கல்
சென்னை கன்னிமாரா பொது நூலகம் தற்போது முழுமையாக கணினி மயமாக்கப்பட்டுள்ளது. கன்னிமாரா நூலகத்தில் 1900ஆம் ஆண்டுக்கு முந்தைய 20 ஆயிரத் திற்கும் மேற்பட்ட நூல்கள் டிஜிட்டல் முறையில் பதிவு செய்து பாதுகாக்கப்படவுள்ளது. இங்கு வாசகர்கள் பயன் படுத்துவதற்காக இணைய வலை வசதியுடன் 13 கணினிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு இணையதளத்தைப் பயன் படுத்துபவருக்கு மணிக்கு ரூ.10 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும், இந்நூலகத்தில் தொடுதிரைக் கணினி வசதி செய்துதரப்பட்டுள்ளது. தேவநேயப் பாவா ணர் நூலகத்திலும் இணையதள வசதி செய்யப்பட்டுள்ளது. 20 மாவட்டங்களிலும், மாவட்டத்திற்கு ரூ.5 இலட்சம் செலவில் மொத்தம் ரூ 145 இலட்சம் மதிப்பில் கணிப்பொறி வசதி, இணைய வலை மற்றும் மின் அஞ்சல் வசதி 100 பொது நூலகங்களிலும் செய்யப்பட்டுள்ளன.
நிரந்தர புத்தகக் காட்சி
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக அளவில் புதுடில்லியிலும், ஆண்டுக்கு ஒரு முறை மாநில அளவில் சென்னையிலும் புத்தகக் கண்காட்சிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை கன்னிமாரா பொது நூலக வளாகத் தில் 3,000 ச.அடி பரப்பளவில் நிரந்தர புத்தகக் காட்சியில் சுமார் 35,000 தலைப்புகளில் நூல்கள் இடம் பெற்றுள்ளன. நாள்தோறும் இக்கண்காட்சிக்கு 500 பேர் வருகை புரிகின்றனர். இங்கு விற்பனை செய்யப்படும் நூல்களுக்கு 10 சதவிகிதம் கழிவு உண்டு. அனைத்து வகையான நூல்களும் ஒரே இடத்தில் கிடைப்பதும், ஆண்டு முழு வதும் இயங்குவதும் இக்கண்காட்சியின் சிறப்பம்சங்களா கும். இந்தியாவிலேயே புத்தகங்களுக்கென்று நிரந்தர புத்த கக் கண்காட்சி முதன்முதலாக அமைக்கப்பட்டுள்ளது பெருமை தரும் செய்தியாகும்
இது தவிர மக்களிடையே நூலக விழிப்புணர்வை ஏற் படுத்தவும், நூலக இயக்கத்தை மக்கள் இயக்கமாக மலரச் செய்யவும் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை மாவட்டங்கள் தோறும் தேசிய நூலக வார விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
நூலகங்களைப் பள்ளிகளோடு இணைக்கும் திட்டம்
மாணவர்களிடையே படிக்கும் பழக்கத்தை ஊக்கு விக்கவும் அவர்களது அறிவைப் பெருக்கவும். அவர்கள் பொதுநூலகங்களில் உள்ள நூல்களை எளிதில் எடுத்துப் பயன்படுத்தும் வகையில் நூலகங்களே பள்ளிகளை அணுகி தேவையானவர்களுக்கு நேரடியாக நூல்கள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன.
இத்திட்டத்தின்படி பள்ளி அமைந்துள்ள இடத்திற்கு அருகில் உள்ள நூலகத்திலிருந்து 14 நாட்களுக்கு ஒருமுறை மாணவர்களுக்கு நூல்கள் நேரிடையாக வழங்கப்படும். இத்திட்டத்தில் சேர மாணவர்கள் விண்ணப்பம் அளிக் கவோ, கட்டணம் ஏதும் செலுத்தவோ வேண்டியதில்லை. பொது நூலகங்களுக்கு அவர்கள் நேரில் வர வேண்டிய அவசியம் இல்லை. நூலகர்கள் இவர்களது பள்ளிக்கே வந்து நூல்களை வழங்குவர். அவற்றைப் படித்துப் பயன் பெற்ற மாணவர்கள் மீண்டும் நூலகர் தங்கள் பள்ளிக்கு வரும்போது அந்நூல்களை அவரிடம் வழங்க வேண்டும். இத்திட்டம் மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் எனலாம். நூலகங்களைத் தேடி மாணவர்கள் செல்லும் நிலைமை மாறி இன்று நூலகங்களே மாணவர்களை நாடிச் செல்வது நூலக வரலாற்றில் ஏற்பட்ட நூலகப் புரட்சி எனலாம்.
நிதி உதவிகளை அதிக அளவில் பெறும் தமிழ்நாட்டு பொது நூலகங்கள்
இந்திய அரசின் நிறுவனமான இராஜா ராம்மோகன்ராய் நூலக அறக்கட்டளை அளிக்கின்ற நிதி உதவிகளை மிக அதிகமாகப் பயன்படுத்தி பலன் பெறுவதில் அகில இந்திய அளவில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. 2003-2004 மற்றும் 2004-2005ஆம் ஆண்டுகளில் ஆண்டொன்றுக்கு 1கோடி ரூபாய் அளவிற்கு அந்நிறுவன உதவிகளைத் தமிழ்நாட்டின் பொது நூலகங்கள் பெற்றுள்ளன.
தமிழ்நாட்டுக்குப் பெருமை
பொது நூலக வளர்ச்சியின் முன்னோடி தமிழ்நாடு என்பதும், இந்திய நூலக வரலாற்றில் தலைமையிடம் வகிப்பது தமிழ்நாடே என்பதும் தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் செய்திகளாகும்.


No comments:
Post a Comment