சுகுமாரன்
லெனின் ஆட்சித் தலைவராக இருந்த காலத்தில் இலட்சக் கணக்கில் நூலகங்கள் தோன்றின. சிறுவர்களுக் கென்று இரண்டு இலட்சம் நூலகங்கள் உருவாக்கப் பட்டன. ‘நூலகம் உங்களை உயர்த்தும்; வாருங்கள் படிப்போம்’ என்று லெனின் மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.
நம் நாட்டில் காந்தியாரும் நூலகத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தார். ஒரு பத்திரிகை நிருபர் காந்தியாரிடம் ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய் வீர்கள் என்று கேட்ட போது ஒரு நூலகம் கட்டுவேன் என்று பதிலளித்தாராம். நம் நாட்டிலும் நூலகத்தின் தேவை உணரப் பட்டுள்ளது. பொது நூலகங்களை அரசு நடத்துகிறது. மக்களிடம் நூலக வரி வசூ லிக்கப்படுகிறது.
ஒரு சாதாரண மனிதன் எல்லா நூல்க ளையும் வாங்கி விட முடியாத நிலையில் ஆயிரக்கணக்கான நூல்களைப் படிக்கும் வாய்ப்பைப் பொது நூலகமே வழங்குகிறது.
‘உலகத்தைப் புத்தகத்தில் படிப்போம்; உலகத்தையே புத்தகமாய்ப் படிப்போம்’ என்று சொல்லப் படுகிற நிலையில், வளரும் குழந்தைகளுக்கு உலகத்தைப் புத்தகங் களே செவ்வையாக அறிமுகப்படுத்துகின் றன. குழந்தைகளுக்கென்று புத்தகங்கள் வெளி வந்த போது அவை முதலில் பொது நூலகத்தி லேயே இடம் பெற்றன.
பொது நூலகம் பெரியோர்களுக்கானது. அவர்களின் தேவையும் நோக்கமும் வேறு பட்டது. இது புரிந்துகொள்ளப்பட்டபோது குழந்தைகளுக்கென்று சிறுவர் நூலகம் ஏற்படுத்தப்பட்டது. 1885-இல் அமெரிக்கா வில்தான் முதன் முதலாகச் சிறுவர் நூலகம் தொடங்கப்பட்டது.
நம் தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கும் நூலகத் திற்கும் உள்ள உறவை எண்ணிப் பார்க்கும் போது வேதனையே வருகிறது. ஒரு குழந்தைக்கு நீங்கள் தரும் ஆகச்சிறந்த பரிசு புத்தகமாகத்தான் இருக்கும் என்று அறிஞர்கள் சொல்கிறார்கள்.
நகைநட்டு, துணிமணிகள் என்று விலை யுயர்ந்தவைகளைப் பரிசாகத் தரும் பெற் றோர்கள் புத்தகங்கள் தருவதை இன்னும் நினைத்துப் பார்க்கவில்லை. ஆன்மிகக் கோவில்களுக்குக் குழந்தைகளை அழைத் துச் செல்லும் பெற்றோர்கள் அறிவுக் கோவி லாக விளங்கும் நூலகத்திற்குக் கூட்டிச் செல்கிறார்களா, என்றால் அதுவுமில்லை.
நூலகம் குழந்தைகளுக்கு வழங்கும் அளப்பரிய வளர்ச்சிகளைத் தமிழ்க் குழந் தைகள் பெற முடியாமல் இருப்பதை எண்ணி வருந்துவதைத் தவிர வேறுவழி யில்லை. இந்நிலையில் குழந்தைகள் புத்த கங்களோடு வளரப் பள்ளி நூலகங்கள் எந்த அளவிற்கு உதவுகின்றன? நம் தொடக்கப் பள்ளிகளில் பள்ளி நூலகமே இல்லை. பத்தாண்டுகளுக்கு ஒருமுறை கரும்பல கைத் திட்டத்தின் கீழ்ச் சில நூறு புத்தகங்கள் பள்ளி களுக்கு வழங்கப்படுகின்றன.
அவை பத்திரமாகத் தலைமையாசிரியர் அறையிலுள்ள பீரோவில் தூங்கிக் கொண் டிருக்கும். குழந்தைகள் புத்தகங் களைப் படித்துக் கிழித்து விட்டால் அடுத்து வரும் தலைமையாசிரியரிடம் எப்படிக் கணக்கு ஒப் படைப்பது?
மேலும் குழந்தைகள் பாடப் புத்தகங் களைத் தவிர வேறு புத்தகங்களை ஏன் படிக்க வேண்டும் என்ற எண்ணமும் நம்மி டையே ஓங்கி யிருக்கிறது. குழந்தைகள் மதிப்பெண் பெறும் போட்டியில் உந்தித் தள்ளப்படுகிறார்கள். குழந் தைகள் கதைப் புத்தகங்களைத் தொடுவது என்பது தீட்டாகிவிட்டது.
இப்போது ‘அனைவருக்கும் கல்வித் திட்டம்’ புத்தகங்களை பீரோக்களில் இருந்து விடுதலை செய்திருக்கிறது. வகுப் பறை மூலையில் (Reading Corner) ஒரு கயிற்றில் துணிகளை காயப் போடுவது போல் புத்தகங்கள் தொங்குகின்றன.
குழந்தைகள் புத்தகங்களைப் பார்க்கும் வாய்ப்பாவது கிடைத்திருக்கிறது. படிக்கும் வாய்ப்பல்ல! குழந்தைகள் புத்தகங்களைப் படித்ததாக “சும்மா” பதிவுகள் செய்வதைத் தவிர்த்து ஆசிரியர்கள் உண்மையில் குழந் தைகள் புத்தகங்களை நேசிக்க, வாசிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும். குழந்தைகளி டம் வாசிக்கும் ருசியை ஏற்படுத்தி விட்டால் நூலகங்கள் குழந்தைகளால் நிரம்பி வழியும்.
நூலகத்தில் நுழைந்துவிட்ட குழந்தை கள் வாசிப்பில் நுழைய புத்தகங்களே தூண்டில்களாக இருக்க முடியும். அமெரிக்க நூலகங்களிலுள்ள குழந்தை நூல்கள் குழந் தைகளுக்குரியதாகத் தயாரிக்கப்பட்டிருக் கின்றன. தமிழில் பெரியவர்கள் நூல்களுக் கும், குழந்தைகள் நூல்களுக்கும் வித்தி யாசம் தெரிவதில்லை. அங்குக் குழந்தை நூல்கள் பெரிய வடிவத்தில் கெட்டி அட்டை யுடன் கண்ணைக் கவரும் வண்ணப்படங் களுடன் இருக்கின்றன.
புத்தகத் தயாரிப்பில் குழந்தைகளின் வயது கவனத்தில் கொள்ளப்படுகிறது. நூல கத்தில் புத்தகப் பகுதிகளும் வயது அடிப்ப டையில் (Grade) பிரித்து அடுக்கப்பட்டி ருக்கிறது. தமிழ்நாடு நூலகங்களில் இந் நிலை இல்லை. இன்னும் கொடுமை, குழந்தை நூல்கள் அடுக்கப்பட்டிருக்கும் பகுதியில் பெரியவர்களுக்கான நூல்களும் இருப்பதுதான்.
நூலகத்தில் குழந்தைகளுக்கு நூல் களை அறிமுகப்படுத்துவது என்பதும் ஒரு கலை தான். நூலகம் அமைந்துள்ள ஊரைப் பற்றிய நூல்கள், தலைவர்கள், எழுத்தாளர் கள் பற்றிய நூல்கள் தனியாகக் காட்சிப் படுத்தப்படுகிறது. சிறுவர் நாவல் எழுதிய மார்க் ட்வைனின் சிலையும் நூல்களும் அவர் பிறந்த ஊரில் உள்ள நூலகத்தில் விசேஷமாக வைக்கப்பட்டிருக்கிறது.
நூலகத்தில் குழந்தைகள் பகுதியில் (Children’s Corner) தனி நூலகர் இருக் கிறார். குழந்தைகளை நேசிக்கும் அவர் குழந்தைகளுக்கு உதவுகிறார்.வழிகாட்டு கிறார். புத்தகத்தைப் புரிந்து கொள்ளப் பயிற்சிகள் தருகிறார்.
பள்ளி ஆண்டு விடுமுறைகளில் நூல கத்தில் வாசிப்பு தொடர்பான பல்வேறு நிகழ்வுகள் (Events) நடைபெறுகின்றன. கதை சொல்லுதல், ஓவியப் போட்டி, மொழிப் பயிற்சிகள், இணைய தளப் பயன்பாடுகள் எனக் குழந்தைகள் ஊக்க முடன் ஈடுபடுகிறார்கள். நூலகத்திலேயே குழந்தைகள் வரைந்த ஓவியங்கள், செய்த கலைப் பொருட்கள் காட்சிப்படுத்தப்படு கின்றன. சிறப்பு நிகழ்வாக எழுத்தாளர் சந்திப்பும் கூட்டமும் நடைபெறுகிறது. கற்றல் தொடர்பான பாதிப் பணிகளை அங்கு நூலகமே செய்து விடுகிறது.
தமிழ்நாட்டின் நிலை என்ன? இங்குச் சிறுவர் நூலகங்கள் இல்லை. பொது நூலகங் களில் சிறுவர் பகுதிகளும் இல்லை. போரி னால் சிதைந்து போன ஈழத்தில் கூட யாழ்ப்பாண நூலகத்தில் சிறுவர் பகுதி குழந்தைகளைக் கவரும் விதத்தில் மிகச் சிறப்பாக இருக்கிறது. இங்கு யாருக்கும் வெட்க மில்லை! தேவநேயப் பாவாணர் நூலகத்தில் உள்ள சிறுவர் பகுதி எப்படி இருக்கிறது என்பதை எண்ணிப் பாருங்கள்.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சிறுவர் பகுதி சிறப்பாக அமைக்கப் பட்டிருக் கிறது. ‘ஒய்யாரக் கொண்டையில் தாழம் பூவாம், உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்’ என்ற முறையில் தமிழ்நாடு முழுவதும் இருக்கும் நூலக அவலங்களை மறைக்க ஒன்று ஏற்படுத்தப்பட்டால் மட்டும் போதாது. எல்லாப் பொது நூலகங்களிலும் சிறுவர் பகுதிகள் துவக்கப்படவேண்டும். இதுவே தமிழில் குழந்தை இலக்கியத்தின் மறுமலர்ச்சிக்கு வித்திடும்.
நூலகத்தில் சிறுவர் பகுதி ஏற்படுத்து வதற்கு இணையாகச் செய்யப்பட வேண் டிய காரியம் ஒன்று இருக்கிறது. அது குழந்தை நூல்கள் வெளியீடு சம்பந்தப் பட்டது. நீங்கள் நூலகத்திற்குச் சென்று அங்கிருக்கும் குழந்தை நூல்களை பரி சீலனை செய்தால் தெரிய வரும். குழந்தை நூல்களில் 80 சதவீதம் கதைப் புத்தகங் களாகவும் நீதி போதனை நூல் களாகவும் இருக்கும். திருக்குறள், ஆத்திசூடி, நல் வழி தொடர்புடைய நூல்கள் அதில் பாதி இருக்கும்.
குழந்தைகளுக்குத் தேவை அறிவியல், நடப்பியல் தொடர்புடைய நூல்களாகும். அவை மிகக் குறை வாகவே இருக்கும். இக்குறைபாட்டை நம் நூலக இயக்கத்தின் தந்தை, உலகப் புகழ் பெற்ற டாக்டர் எஸ்.ஆர். ரங்கநாதன் 1957-ஆம் ஆண்டி லேயே சுட்டிக்காட்டியுள்ளார். கிட்டத்தட்ட 56 ஆண்டு களாகக் குழந்தை நூல்களின் தன்மையில் மாற்ற மில்லை. இந்த செக்கு மாட்டுத்தனம் நம் நாட்டில் தான் நடக்கும். அதில் மாற்றம் வேண்டும்.
1957-இல் குழந்தை இலக்கிய நூல்க ளைப் பற்றி மதிப்பீடு செய்த போது ‘நூலகத் தந்தை’ ஆணித்தரமான கருத்தையும் தெரிவித்தார். ‘குழந்தை இலக்கியத்தைப் புறக்கணித்தால் வருங்காலத்தில் பிற இலக் கியங்கள் புறக்கணிக்கப்படும்’ என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கை. அவருடைய நம்பிக்கை நிரூபணம் ஆகி விட்டது.
தமிழில் இப்போது நல்ல நாவல்கள் வருவதில்லை, நல்ல சிறுகதைகள் வரு வதில்லை. மனதைத் தொடும் உருக்கமான கவிதைகள் இல்லை, சமூகத்தின் நிஜ முகத்தைக் காட்டும் ஆய்வுக் கட்டுரைகள் இல்லை. ஒட்டுமொத்த சமூகமே குப்பைத் திரைப் படங்களிலும், பாடல்களிலும் மூழ் கிக் கிடக்கிறது.
நல்ல நூல்களைப் படிப்பதற்கும் அதன் மூலம் சமூக மனிதனாகக் குழந்தைகள் வளர்வதற்கும் நூலகம் உதவமுடியும். நம்மூர் நூலகங்களில் சிறுவர் பகுதிகளை ஏற்படுத்துவதற்கு அரசு செய்யும் காலம் வரை காத்திருக்க வேண்டியதில்லை.
குழந்தை எழுத்தாளர்களும் குழந்தை நல ஆர்வலர்களும் அவரவர் வசிக்கும் ஊர்களில் உள்ள நூலகங்களில் சிறுவர் பகுதிகளை ஏற்படுத்த வேண்டும். மாதந் தோறும் நூலகங்களில் கதை சொல்லும் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். தமிழ்க் குழந்தைகள் வாசிப்பில் நுழைய இதுவே வழி.

No comments:
Post a Comment