சென்னை,மே9- தமிழ்நாடு முழுவதும் 1 லட்சம் இடங் களில் நடந்த சிறப்பு மாபெரும் முகாமில் 17.70 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப் பட் டது. கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக் கும் தடுப்பூசி போடப்படு கிறது. தமிழ்நாட்டில் அனைவருக்கும் விரை வாக தடுப்பூசி போடும் விதமாக வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மாநி லம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் மாபெரும் முகாம் நடத்தப்பட்டு வந் தது. 27 மாபெரும் முகாம் கள் நடந்த நிலையில், 93 சதவீதத்துக்கும் மேற்பட் டோருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டது.
இந்நிலையில், ஒரே நாளில் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்காக தமிழ்நாடு முழுவதும் 1 லட்சம் இடங்களில் சிறப்பு மாபெரும் தடுப்பூசி முகாம் நேற்று (8.5.2022) நடத்தப்பட்டது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலை யங்கள், துணை சுகாதார நிலையங்கள், பள்ளிகள், ஊராட்சி, நகராட்சி அலு வலகங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலை யங்கள் என பொதுமக்கள் கூடும் அனைத்து இடங் களிலும் முகாம்கள் அமைக் கப்பட்டன. சென்னை யில் மட்டும்3,300 இடங்களில் முகாம்கள் அமைத்து தடுப்பூசி போடப்பட்டது.
குறிப்பிட்ட காலத்தில் 2ஆவதுதவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 1.50 கோடி பேர், இரண்டு தவணை போட்டு 9 மாதம் முடிந்தும் பூஸ்டர் தவணை போட்டுக் கொள்ளாத 60 வயதை கடந்தவர்கள் என மொத் தம் 2 கோடிக்கும் மேற் பட்டோருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக் கப்பட்டது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடந்த முகாம்களில் பொதுமக்கள் ஆர்வமாக வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
முன்னதாக, சேலம் மாவட்டம் ஏற்காடு பிரதான சாலையில் உள்ள சிஎஸ்அய் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த தடுப் பூசி முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப் பிரமணியன் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். துறை செயலர் ஜெ. ராதா கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
தொடர்ந்து, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்பு ரம், சென்னை மாவட் டங்களில் நடந்த தடுப்பூசி முகாம்களையும் அமைச் சர் பார்வையிட்டார். நேற் றைய (8.5.2022) முகாமில் தமிழ்நாடு முழுவதும் 17.70 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
முகாம் பணியில் ஈடு பட்ட சுகாதாரப் பணியா ளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், வழக்கமான தடுப்பூசி மய்யங்கள் இன்று செயல் படாது. அரசு மருத்துவ மனைகளில் மட்டும் தடுப் பூசி போடும் பணி நடை பெறும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment